News November 15, 2024

அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் ஐக்கியம்

image

செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வந்தபிறகு கொங்கு மண்டலத்தில் பல்வேறு அரசியல் மாற்றம் நிகழ்ந்து வருகிறது. அந்த வகையில், அதிமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் உட்பட பலர் செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். புதிதாக கட்சியில் ஐக்கியமானவர்களுக்கு சால்வை அணிவித்து திமுக உறுப்பினர் அட்டைகளை வழங்கிய அவர், வார்டு வாரியாக தேர்தல் பணிகளை இப்போதே தொடங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.

News November 15, 2024

சபரிமலை நடை இன்று மாலை திறப்பு

image

மண்டல கால பூஜைக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. இதனால், பம்பை, சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பக்தர்களுக்கான வசதிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. மாலை 5 மணிக்கு சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றி வைக்கிறார். இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் நாளை அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்படும் நிலையில், நெய்யபிஷேகத்துடன் ஆண்டுக்கான மண்டல காலம் தொடங்கும்.

News November 15, 2024

வெள்ளை மாளிகையில் தங்க விரும்பாத டிரம்ப் மனைவி

image

டிரம்ப் மனைவி மெலானியா, வெள்ளை மாளிகையில் தொடர்ந்து வசிக்க மாட்டார் எனத் தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு ஒரு காரணமும் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக புளோரிடாவில் தனக்கான நட்பு வட்டாரத்தை உருவாகியுள்ள மெலானியா, அங்கேயே அதிக நேரத்தை செலவிட விரும்புகிறார். இதன் காரணமாகவே இவர், அம்மாகாணத்தில் தொடர்ந்து வசிக்க விரும்புவதால், வெள்ளை மாளிகையில் அதிக நேரம் இருக்க மாட்டார் எனக் கூறப்படுகிறது.

News November 15, 2024

அடுத்த 1 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் அடுத்த 1 மணி நேரத்தில் 18 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை. திருவள்ளூர். செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழையும், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்கள் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

News November 15, 2024

தொடரை கைப்பற்றுமா இந்திய இளம்படை

image

இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையிலான கடைசி T20 போட்டி, இன்று இரவு 8.30க்கு தொடங்குகிறது. SAவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள IND அணி, 4 T20 போட்டிகளில் விளையாடுகிறது. இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில், 2இல் IND அணியும், 1இல் SA அணியும் வென்றுள்ளன. இதனால் இன்றைய போட்டி இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. SKYயின் இளம்படை தொடரை வெல்லுமா? Cmt HERE.

News November 15, 2024

சர்வதேச திரைப்பட விழாவில் மாதவன் நடித்த படம்

image

55ஆவது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவம்பர் 20 முதல் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், மாதவன் புதிதாக நடித்துள்ள “ஹிஸாப் பராபர்” என்ற படமும் திரையிடப்பட உள்ளது. இதுகுறித்து பேசிய அவர், ”இந்தப் படம் ஊழலுக்கு எதிரான போராட்டம் மட்டும் அல்ல. நீதி என்பது எளிதாக கிடைத்துவிடாது என்பதை புரிந்துகொள்ள வைக்கும்” என்றார். நவ.26 மாலை 5:45க்கு ‘ஹிஸாப் பராபர்’ படம் ஒளிபரப்பப்படுகிறது.

News November 15, 2024

அர்ஜுன் சம்பத் மகன் சிறையில் அடைப்பு

image

அர்ஜுன் சம்பத் மகனை நவ.28 வரை நீதிமன்ற காவலில் வைக்க கோவை 3ஆவது மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஈஷா யோகா மையம் மீது, நக்கீரன் வார இதழ் அவதூறு பரப்புவதாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் கோபாலை மிரட்டும் தொனியில் பேசியதாக கொடுத்த புகாரில் நேற்று அவர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய போலிசார், பிறகு கோவை சிறையில் அடைத்தனர்

News November 15, 2024

ரீ ஆர்டர் வரும்வரை ஆன்லைன் வகுப்பு

image

டெல்லியில் காற்று மாசு அபாய கட்டத்தை எட்டியதால், ஆன்லைன் வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து Xஇல் பதிவிட்டுள்ள CM அதிஷி, அனைத்து தொடக்கப் பள்ளிகளும் (5ஆம் வகுப்பு வரை) மறு உத்தரவு வரும் வரை ஆன்லைன் வகுப்புகளுக்கு மாறுவதாகக் கூறியுள்ளார். இந்த விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக டெல்லி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

News November 15, 2024

டிஜிட்டல் மயத்தால் வளரும் இந்தியா

image

இந்திய விளையாட்டு சந்தையின் மூலம் 2030க்குள் 1.5 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூகுள் மற்றும் டெலாய்ட் வெளியிட்ட அறிக்கையில், டிஜிட்டல் தளங்களின் எழுச்சி இந்தியாவில் விளையாட்டு நுகர்வு மீது பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதன்மூலம், 21 பில்லியன் டாலர் அளவுக்கு மறைமுக வரி வருவாயும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 15, 2024

வாக்கு வங்கி அரசியலின் முன்னோடி காங்கிரஸ்

image

வாக்குகளை பெற பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஏழைகளை காங்கிரஸ் ஏமாற்றுவதாக PM மோடி குற்றஞ்சாட்டியுள்ளார். வாக்கு வங்கி அரசியலில் அந்தக் கட்சி முன்னோடி என விமர்சித்த அவர், அதற்காக நாட்டையும், ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் அவர்கள் விளையாட்டாக பார்ப்பதாக சாடினார். PM மோடியின் குற்றச்சாட்டு குறித்து நீங்க என்ன நினைக்கிறீங்க? கீழே கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!