India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திமுக அரசுக்கு எதிராக பொய் மூட்டைகளை இபிஎஸ் அவிழ்த்து விடுகிறார்; பொய்க்கு மேக் அப் போட்டால் அது உண்மையாகாது என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார். அதிமுக திட்டங்கள், திமுக திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக மேடைக்கே வருகிறேன் என இபிஎஸ் சவால் விடுத்திருந்த நிலையில், “திட்டங்களை செயல்படுத்துவதால், நான் எங்கு சென்றாலும் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றனர்” என்று ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.
18 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது.
BGT தொடருக்காக இந்திய அணி தயாராகி வரும் நிலையில், கே.எல்.ராகுல் Practice ஆட்டத்தின் போது, காயத்தில் சிக்கியுள்ளார். இந்திய அணியின் இன்றைய பயிற்சி ஆட்டத்தின் போது அவரது வலது முழங்கையில் பந்து தாக்கியதில் காயம் ஏற்பட்டது. முதல் டெஸ்டில் ரோஹித்திற்கு பதிலாக ராகுல் களமிறங்குவார் என்றே கருதப்பட்டது. ஆனால், எதிர்பாராத விதமாக தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
Pollution உலகின் முக்கிய பிரச்னையான நிலையில், சீனாவில் Liuzhou Forest City என்ற உலகின் முதல் “வன நகரம்” உருவாக்கப்படுகிறது. 175 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட நகரில் 40,000 மரங்கள், 1 லட்சம் தாவரங்களால் சூழப்பட்ட அலுவலகங்கள், குடியிருப்புகள், பள்ளிகள் போன்றவை கட்டமைக்கப்படுகின்றன. மின்சார ரயில், e-cars போன்றவை இயக்கப்படவுள்ள இந்நகரில், Solar Panel மூலம் மின்சாரம் எடுக்கவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலையுயர்வு சந்தையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என்பது உண்மைதான். இதற்காக காப்பீடுகளுக்கு ஒதுக்கும் பணத்தை நிறுத்திவிட்டு, தங்கம் வாங்க நினைப்பது சரியான முடிவல்ல என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். காப்பீடு என்பது அவசர & ஓய்வுக் காலத்தில் பலனைத் தரக்கூடிய சேமிப்பு. அதை இடையில் நிறுத்தினால் என்னென்ன சலுகைகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்படுமென அறிந்து முடிவெடுக்க பரிந்துரைக்கின்றனர்.
அரியலூரில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்த பின் பேசிய CM ஸ்டாலின், “அரியலூர் அரிமா” என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கருக்கு அடைமொழி பெயர் சூட்டியுள்ளார். பண்டிகைக் காலங்களில் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுற்ற மக்களுக்கு தீர்வை தேடித்தந்தவர் சிவசங்கர் என பாராட்டிய அவர், திமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டு பெருமிதம் தெரிவித்தார்.
தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள ‘குபேரா’ படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இன்று மாலை 5.31 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. நடிகர் மகேஷ் பாபு படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை வெளியிடவுள்ளார். கம்முலா இயக்கத்தில் நாகர்ஜுனா, ரஷ்மிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் அடுத்த ஆண்டு பிப்.27ம் தேதி ரிலீசாக உள்ளதாகத் கூறப்பட்டுள்ளது. க்ளிம்ஸ்க்கு யாரெல்லாம் வெயிட்டிங்?
நாட்டின் தலைநகரான டெல்லி பெரும் காற்று மாசினால் சிக்கி தவிக்கிறது. இதற்கு பல காரணங்கள் உள்ளன * அண்டை மாநிலங்களான பஞ்சாப், ஹரியானாவின் எரிக்கப்படும் பயிர்க்கழிவுகள் புகையாக டெல்லியை சூழ்கிறது * பனிக்காலத்தில் உறைந்து போகும் மாநிலத்தின் சீதோஷ்ண நிலை * தொடர்ந்து அதிகரிக்கும் மக்கள்தொகையும், அதிகரிக்கும் வாகன பயன்பாடும் * கட்டுமான பணிகளால் வெளியேறும் புகை தொடர்ந்து நகரிலேயே தங்கிவிடுவது.
காற்று மாசு மிக மோசமானதை அடுத்து டெல்லியில் காற்று தர மேலாண்மை ஆணையம் (CAQM) GRAP 3 கட்டுப்பாட்டை கொண்டு வந்துள்ளது. AQI (Air Quality Index) மிக மோசமான நிலை, 401 – 450 வரை அடையும் போது, GRAP 3 அமலாகிறது. இதன் போது, அத்தியாவசியமற்ற கட்டுமான – இடிப்பு பணிகள், BS-III பெட்ரோல் & BS-IV டீசல் நான்கு சக்கர வாகனங்கள் இயக்கம், பெயிண்டிங், Gas Welding, பாலிஷ் – வார்னிஷ் பணிகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.
GRAP 1 – AQI (201-300) தூசி கட்டுப்பாடு பற்றி மக்களுக்கு ஆலோசனை, பொதுவெளியில் நெருப்பு மூட்ட கட்டுப்பாடு * GRAP 2 – AQI (201-300) டீசல் ஜெனரேட்டர்களுக்கு தடை, சாலைகளில் தண்ணீர் தெளித்தல் * GRAP 3 – AQI (301-400) அத்தியாவசியமற்ற கட்டுமானப் பணிகளுக்குத் தடை, செங்கல் சூளைகளுக்கு தடை * GRAP 4 – AQI 450’ஐ கடந்தால், அனைத்து கட்டுமானப் பணிகளும் நிறுத்தம், பள்ளிகள் மூடல், கடுமையான வாகனக் கட்டுப்பாடு.
Sorry, no posts matched your criteria.