News November 15, 2024

கங்குவா முதல் நாள் வசூல் இவ்வளவா?

image

சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் நேற்று வெளியான ‘கங்குவா’ முதல் நாளில் உலகம் முழுவதும் ₹58.62 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கலவையான விமர்சனங்களைப் பெற்றபோதிலும் முதல் நாளில் வசூலை குவித்துள்ளது. நாளை, நாளை மறுநாள் விடுமுறை என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

News November 15, 2024

புதிய வாக்காளர் அட்டை பெற வேண்டுமா?

image

18 வயதான இளைஞர்கள் வாக்காளர் அட்டைக்கு எப்படி விண்ணப்பிப்பது என தெரியாமல் இருப்பர். அவர்களுக்காக நாளையும், நாளை மறுநாளும் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. அங்கு சென்று “படிவம் எண் 6″ஐ நிரப்பி அளித்தால் அது சரிபார்க்கப்பட்டு, அவர்கள் வீட்டுக்கே தபாலில் அட்டை அனுப்பி வைக்கப்படும். பட்டியலில் பெயர் நீக்க படிவம் 7, தொகுதி மாற்றம் உள்ளிட்டவற்றுக்கு படிவம் 8-ஐ நிரப்பி அளிக்க வேண்டும். SHARE IT

News November 15, 2024

ஐயப்ப சாமிகளே ரெடியா..!

image

மண்டல பூஜைக்காக சபரிமலை நடை இன்று திறக்கப்பட்டது. வாண வேடிக்கை, பக்தர்களின் கோஷம் என சபரிமலை விழாக்கோலம் பூண்டது. நாளை முதல் (கார்த்திகை 1) மண்டல பூஜை வழிபாடு தொடங்கும் நிலையில், தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மண்டல பூஜை டிச.26ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை 2025 ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெற உள்ளன. அன்றைய தினங்களில், 90,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

News November 15, 2024

நம்ம ‘மகாராஜா’-வோட அடுத்த டார்கெட் சீனா..!

image

சீனாவில் வரும் 29ஆம் தேதி ‘மகாராஜா’ படம் ரிலீசாக உள்ளதாக அப்படத்தின் இயக்குநர் நித்திலன் சாமிநாதன் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 14ஆம் தேதி வெளியான இந்த படம், ₹100 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியது. விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல், நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் இந்திய அளவில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த படங்களின் வரிசையிலும் முன்னிலை வகித்தது குறிப்பிடத்தக்கது.

News November 15, 2024

சில்லறை வியாபாரிகளுக்கு கடன் உதவி!

image

சில்லறை வியாபாரிகளுக்கு சிறு வணிக கடன்கள் வழங்க நடப்பாண்டில் ₹100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தாட்கோ வழியாக தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சில்லறை வியாபாரிகள் இந்த கடன் உதவியை பெற முடியும். தாட்கோ மூலம் உருவாக்கப்பட்ட சங்கங்களின் பரிந்துரையின் பெயரிலும் கடன் பெறலாம். கடன் பெற்று 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்த வேண்டும். கூடுதல் தகவலுக்கு 72999 13999 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுங்கள்.

News November 15, 2024

டிரம்ப் வெற்றியால் Boys-க்கு NO சொல்லும் Girls..!

image

பெண்களுக்கு சம உரிமை கோரி திருமணம், டேட்டிங், செக்ஸ், குழந்தைகளுக்கு NO சொல்லும் ‘4B’ இயக்கம் தென் கொரியாவில் உருவானது. அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற அடுத்த நாளே, 2 லட்சம் பெண்கள் இந்த இயக்கத்தை பற்றி கூகுளில் தேடியுள்ளனர். சில பெண்கள் இந்த இயக்கத்தில் பங்கேற்க போவதாகவும் அறிவித்துள்ளனர். கருக்கலைப்பு உரிமையை டிரம்ப் அரசு வழங்காது என்பதே பெண்களின் இந்த முடிவுக்கு காரணமாம்.

News November 15, 2024

மீண்டும் அஜித்தை இயக்கும் சிவா?

image

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில், சிவா அடுத்ததாக அஜித் படத்தில் பணியாற்றிவிட்டு, பின் ‘கங்குவா-2’வில் இணைவார் என தயாரிப்பாளர் ஞானவேல் கூறியுள்ளார். இதன்மூலம் அஜித் – சிவா கூட்டணி 5வது முறையாக இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இவர்கள் ஏற்கெனவே வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளனர்.

News November 15, 2024

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கண்டுபிடிப்பு

image

உலகின் மிகப்பெரிய பவளப்பாறையை பசிபிக் பெருங்கடலின் தென்கிழக்கே சாலமன் தீவுக்கூட்டம் அருகே ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பாறை 34மீ அகலம், 32மீ நீளம், 5.5மீ உயரத்துடன் காணப்படுகிறது. இந்த பவளப்பாறை 300 – 500 ஆண்டுகள் பழமையானது என்றும், தற்போதுவரை ஆரோக்கியமாகவே உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பாறைகள் கடல்வாழ் உயிரினங்களின் வாழ்வில் பெரும்பங்காற்றுகின்றன.

News November 15, 2024

இபிஎஸ்சை ஏன் விசாரிக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி

image

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் இபிஎஸ்சை ஏன் விசாரிக்கக் கூடாதென்று சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. அந்த வழக்கில் இபிஎஸ், சசிகலாவை எதிர்தரப்பு சாட்சியாக விசாரிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்து மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதை விசாரித்த ஐகோர்ட், இபிஎஸ் தற்போது முதல்வராக இல்லாத நிலையில், ஏன் அவரை சாட்சியாக விசாரிக்கக் கூடாதென கேள்வி எழுப்பி, விசாரணையை ஒத்திவைத்தது.

News November 15, 2024

விஜய் மீது சரத்குமார் பாய்ச்சல்

image

உச்சத்தில் இருந்தபோதுதான் தாமும் அரசியலுக்கு வந்ததாக விஜய்யை சரத்குமார் சாடியுள்ளார். விஜய் கூறியதுபோல, திரைத்துறையில் உச்சத்தில் இருந்தபோது அரசியலுக்கு வந்து, மாபெரும் தலைவர்களை எதிர்த்து தாம் அரசியல் செய்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வு, ONOE குறித்த புரிதல் இல்லாததாலேயே விஜய், அதை எதிர்ப்பதாகவும் சரத்குமார் கூறினார். சரத்தின் விமர்சனம் குறித்து உங்கள் கமெண்டை கீழே பதிவிடுங்க.

error: Content is protected !!