News November 16, 2024

இதயத்தை உலுக்கும் தீ விபத்து: கார்கே உருக்கம்

image

உ.பி. மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்து இதயத்தை உலுக்குகிறது என்று காங்., தலைவர் கார்கே உருக்கமாக தெரிவித்துள்ளார். தீவிபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள அவர், விபத்துக்கான காரணங்களை விசாரித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இனி இதுபோன்ற சம்பவம் நடக்காத வகையில் மருத்துவமனைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

News November 16, 2024

தங்கம் விலை மீண்டும் குறைவு

image

ஆபரணத் தங்கத்தின் விலை 2 வாரங்களுக்கு பின் நேற்று உயர்ந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்துள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹80 குறைந்து ₹55,480க்கும், கிராமுக்கு ₹10 குறைந்து ₹6,935க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒருகிராம் ₹99க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News November 16, 2024

ஐபிஎல் ஏலம்: 13 வயது வீரருக்கு எகிறும் மவுசு

image

ஐபிஎல் தொடரில் நம் அறியாத பல வீரர்கள் நட்சத்திரங்களாகிறார்கள். அப்படி தான் தற்போது 13 வயதேயான வீரர் ஒருவர் கவனம் பெற்றுள்ளார். முதல் தர கிரிக்கெட்டில் 5 போட்டிகளில் 100 ரன்களை எடுத்துள்ள பீகாரை சேர்ந்த வைபவ் சூர்யவன்ஷி இந்தியா டெஸ்ட் U-19 அணிக்காக விளையாடி, ஆஸ்திரேலியாவிற்கு எதிராக சதம் விளாசியிருக்கிறார். uncapped player என்பதால், இவர் மீது தற்போது ஐபிஎல் அணிகளின் பார்வை விழுந்துள்ளது.

News November 16, 2024

திஷா பதானி தந்தையிடம் ரூ.25 லட்சத்தை சுருட்டிய நபர்கள்

image

ஓய்வு பெற்ற DSP’யான நடிகை திஷா பதானியின் தந்தை ஜகதீஷ் சிங் பதானியை 5 பேர் கும்பல், அரசு சார்ந்த ஆணையத்தில் பதவி ஆசை காட்டி ஏமாற்றியுள்ளது. ரூ.5 லட்சத்தை பணமாகவும், ரூ.20 லட்சத்தை வங்கி பரிவர்த்தனையாகவும் பெற்று ஏமாற்றி இருக்கிறார்கள். இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை உ.பி. கோட்வாலி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைதாவர்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

News November 16, 2024

இன்று வெளிநாடு புறப்படுகிறார் மோடி

image

6 நாள் அரசு முறைப்பயணமாக PM மோடி இன்று வெளிநாடு புறப்படுகிறார். நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய நாடுகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். முதலில் நைஜீரியா செல்லும் அவர், அந்நாட்டு அதிபரை சந்தித்து இருநாட்டு உறவு குறித்து விவாதிக்கிறார். பின் அங்கிருந்து புறப்பட்டு 18ம் தேதி பிரேசிலில் ஜி20 மாநாட்டில் பங்கேற்கிறார். 19ம் தேதி கயானா செல்லும் அவர், டோமினிக் குடியரசின் உயரிய விருதை பெறுகிறார்.

News November 16, 2024

ரேஷன் கடைகள் இன்று செயல்படாது

image

தமிழகத்தில் இன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மாதத்தின் முதல் & 2வது ஞாயிற்றுக்கிழமைகளில் ரேஷன் கடைகள் செயல்படும். அதற்கு மாற்றாக, அந்த வாரங்களில் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில், தீபாவளியையொட்டி ரேஷன் பொருள்கள் வாங்க ஏதுவாக, விடுமுறை நாளான OCT. 27 அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டு, ரேஷன் கடைகள் செயல்பட்டன. அதனை ஈடுகட்ட இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

News November 16, 2024

எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பெரிய ஸ்டார்கள்

image

பெரும் எதிர்பார்ப்புடன் சமீபத்தில் வெளியான பெரிய ஸ்டார்களின் படங்கள் தோல்வி படங்களாக மாறியுள்ளன. இதற்கு விஜய் மட்டும் விதிவிலக்கு (கோட்). ஆம்! கமலின் இந்தியன் 2, விக்ரமின் தங்கலான், சூர்யாவின் கங்குவா ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என விமர்சிக்கப்படுகிறது. இதனால், வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இளம் நடிகர்கள் நடித்த லப்பர் பந்து, SKவின் அமரன் சூப்பர் ஹிட் அடித்துள்ளன.

News November 16, 2024

இந்துத்துவா அரசியலில் ஆளுநர் மாளிகை: சு.வெ

image

மதம், சாதி சார்ந்த வெறுப்பு அரசியலுக்கு திருவள்ளுவரை பயன்படுத்துவதை ஏற்க முடியாது என மதுரை MP சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்துத்துவா அரசியலை பிரசாரப்படுத்தும் வேலையில் ஆளுநர் மாளிகை பிரதான இடமாக உள்ளதாக சாடிய அவர், அவர்கள் சார்ந்த அரசியலுக்கு திருவள்ளுவரை பயன்படுத்த துடிப்பதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார். முன்னதாக, ஆளுநர் மாளிகை அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவர் படம் இடம்பெற்றிருந்தது.

News November 16, 2024

இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார்

image

ஒரு கிடாயின் கருணை மனு, சத்திய சோதனை படங்களின் இயக்குநர் சங்கையா காலமானார். மஞ்சள் காமாலை பாதிப்பால் சென்னை ராஜிவ் காந்தி ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்த அவர், கல்லீரல் செயலிழந்து உயிரிழந்துள்ளார். கோவில்பட்டியை சேர்ந்த அவர், 2017ல் வெளியான கிடாயின் கருணை மனு படத்தில் வித்தியாசமான பார்வையில் கதை சொல்லி முதல் படத்திலேயே அசத்தினார். அவரது மறைவுச் செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

News November 16, 2024

ஆளுநர் மாளிகை அழைப்பிதழ் – மீண்டும் காவியில் திருவள்ளுவர்

image

தமிழக அரசுக்கும் – ஆளுநருக்கும் இடையே சித்தாந்த ரீதியிலான கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இந்நிலையில், ஆளுநர் மாளிகையின் அழைப்பிதழ் மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஆளுநர் மாளிகையில் நடைபெறும் கவிஞர்கள் கபீர் தாஸ், யோகி வேமனா குறித்த சர்வதேச கருத்தரங்கிற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழில் காவி உடையில் திருவள்ளுவரின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. தமிழ் அமைப்புகள் இதற்கு கண்டனங்களை தெரிவித்துள்ளன.

error: Content is protected !!