News November 16, 2024

ரெய்னா – திலக் வர்மாவிற்கும் இவ்வளவு ஒற்றுமையா…

image

இருவரும் நவம்பரில் பிறந்தவர்கள். இடக்கை பேட்ஸ்மேன்கள். ஐபிஎல்லில் 2-வது போட்டியில் முதல் அரைசதம். முதல் ஐபிஎல் சீசனில் 350+ ரன்கள், 10 கேட்ச்கள். 20 வயதில் சர்வதேச T20’யில் அறிமுகம். முதல் அரைசதம் அடித்த போட்டியில், இந்திய அணி தோல்வி – எதிரணி சரியாக 18.5 ஓவர்களில் வெற்றி பெற்றது. முதல் போட்டியிலேயே முதல் விக்கெட் வீழ்த்தினர். 3-வது வரிசையில் இறங்கி SA அணிக்கு எதிராக முதல் சதம் விளாசினார்கள்.

News November 16, 2024

நடிகை கஸ்தூரி ஐதராபாத்தில் பதுங்கல்?

image

நடிகை கஸ்தூரி டெல்லியில் தலைமறைவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது ஐதராபாத்தில் இருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு மொழி பேசும் மக்கள் பற்றி அவதூறாக பேசிய விவகாரத்தில், பிரபல திரைப்பட தயாரிப்பாளரின் உதவியுடன் அவர் பாதுகாப்பாக இருக்கிறாராம். இதையறிந்த தமிழக தனிப்படை போலீசார், அவரை கைது செய்ய ஐதராபாத்தில் முகாமிட்டுள்ளனர். இதனால், அவர் விரைவில் கைதாகலாம் என தெரிகிறது.

News November 16, 2024

இன்று தேசிய பத்திரிகை தினம்

image

இந்தியா போன்ற மிகப் பெரிய ஜனநாயக நாட்டில் யார் தவறு செய்தாலும் அவர்களை தட்டிக்கேட்கும் உரிமை பத்திரிகைத்துறைக்கு உண்டு. Fourth Pillar of Democracy என அழைக்கப்படும் பத்திரிகைத்துறையின் சேவைகளை கௌரவிக்கவும், இந்தியாவில் சுதந்திரமான மற்றும் பொறுப்பான பத்திரிகைகளின் இருப்பைக் குறிக்கவும் ‘தேசிய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா’ தொடங்கப்பட்ட நவ.16ம் தேதி தேசிய பத்திரிகை தினமாக கொண்டாடப்படுகிறது.

News November 16, 2024

குழந்தைகள் பலி: நிதியுதவி அறிவித்த மோடி

image

உ.பி. தீ விபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “ஜான்சியில் லட்சுமிபாய் அரசு மருத்துவமனையில் நேரிட்ட தீ விபத்து நெஞ்சை உலுக்குகிறது. அப்பாவி குழந்தைகளை இழந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். இந்த துயரத்தை தாங்கும் சக்தியை தர இறைவனை பிரார்த்திக்கிறேன். குழந்தைகளை பறிகொடுத்த குடும்பத்தினருக்கு தலா ₹2 லட்சம் நிதி வழங்கப்படும்” என்றும் அறிவித்துள்ளார்.

News November 16, 2024

இது அதுல feeling கொடுத்த ரஜினி, விஜய், சூர்யா

image

2014ல் வெளிவந்த ரஜினி, விஜய், சூர்யா படங்களுக்கும் இந்த ஆண்டு வெளியான இவர்களின் படங்களுக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. 2014’ல் ரஜினி 2 படங்களில் நடித்தார். ஒன்று அவரின் மகள் இயக்கியது. மற்றொரு முன்னணி இயக்குநரின் படம். 2 படங்களும் சுமார் ரகமே. விஜய் Dual Roleல் நடிக்க ஒரு கதாபாத்திரத்தின் பெயர் ஜீவா. பெரிய ஹைப்பை கொடுத்த சூர்யாவின் படம் Mixed reviews பெற்றது. எந்தெந்த படங்கள் என தெரிகிறதா?

News November 16, 2024

பகல் 1 மணிக்குள் இங்கெல்லாம் மழை கொட்டும்

image

தமிழகத்தில் பகல் 1 மணிக்குள் 19 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. அதன்படி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

News November 16, 2024

Personality test : உங்களுக்கு முதலில் என்ன தெரிந்தது?

image

முதலில் பறவையை கண்டால், நீங்கள் துணிச்சலானவர், சுதந்திரத்தை விரும்புபவர். Comfort zone-க்கு வெளியே சென்று புதுப்புது விஷயங்களை செய்ய விரும்புவீர்கள். விருப்பத்திற்கு ஏற்றபடியே வாழ விரும்புவீர்கள் * உங்களுக்கு கை தெரிந்தால், வாழ்க்கையை மிகவும் கவனமுடன் கையாள்வீர்கள். எடுக்கும் முடிவுகள் தெளிவாகவும், பின்விளைவுகள் நேராத வகையிலும் இருக்கணும் என அக்கறை காட்டுவீர்கள். எந்த Personality நீங்க..?

News November 16, 2024

IMPORTANT… TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு

image

TNPSC டெலிகிராம் சேனலை அறிமுகம் செய்துள்ளது. இந்த பக்கத்தில் தேர்வர்கள் தங்களை இணைத்துக் கொள்ள <>https://x.com/TNPSC-Office<<>> என்ற X பக்கத்துக்கு சென்று, அதில் டெலிகிராம் சேனல் பற்றிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள QR code-ஐ ஸ்கேன் செய்தால் TNPSCயின் அதிகாரப்பூர்வ டெலிகிராம் சேனலுக்கு சென்றுவிடும். இதன் மூலம், தேர்வர்கள் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளலாம்.

News November 16, 2024

ஆதவ் அர்ஜூனா வீட்டில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்?

image

லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மருமகனும், விசிக துணைப் பொதுச்செயலாளருமான ஆதவ் அர்ஜூனா வீட்டில் கடந்த 2 நாட்களாக நடந்து வந்த ED சோதனை நிறைவுபெற்றுள்ளது. சட்ட விரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில் இந்த ரெய்டு நடந்துள்ளது. சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக, ஆதவ் அர்ஜூனாவிடம் ED விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News November 16, 2024

கேப்டனுக்கு நன்றி தெரிவித்த திலக் வர்மா

image

SA அணிக்கு எதிரான டி20 தொடரை இந்தியா 3-1 என வென்றது. இந்நிலையில் அடுத்தடுத்து சதமடித்த திலக் வர்மா MOTM & MOTS விருதை வென்றார். பின்னர் பேசிய அவர் ‘கடந்த ஆண்டு இந்த மைதானத்தில் விளையாடிய போது நான் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனேன். ஆனால் இந்தமுறை இங்கு நான் சதம் அடிப்பேன் என நினைக்கவில்லை. இந்த வாய்ப்பளித்த கடவுளுக்கும், என்னுடைய கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கும் நன்றி’ என்றார்.

error: Content is protected !!