News November 16, 2024

இந்தியாவின் பொருளாதாரம் எப்படி இருக்கு?

image

இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி (GDP) ஆண்டுதோறும் சீரான வளர்ச்சி அடைந்து வருவது Moody’s ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. நடப்பாண்டு 7.2% ஆக இருக்கும் எனவும், 2025-ல் 6.6% ஆகவும், 2026-ல் 6.5% ஆகவும் இந்த வளர்ச்சி குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும், RBI நிர்ணயித்துள்ள பணவீக்க இலக்கை அடைய, உணவு பொருள்களின் விலை குறைய வேண்டும் எனவும் Moody’s தெரிவித்துள்ளது.

News November 16, 2024

தனுஷ் vs நயன்.. உங்கள் ஆதரவு யாருக்கு.?

image

Netflixல் வெளியாக உள்ள தனது ஆவணப்படத்தில் ‘நானும் ரவுடிதான்’ படப்பாடல்களை பயன்படுத்த ₹10 கோடி கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தனுஷ் மீது <<14626976>>நயன்தாரா<<>> பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அத்துடன், S/o கஸ்தூரி ராஜா, B/o செல்வராகவன் என்று குறிப்பிட்டு, சரமாரியாக சாடியுள்ளார். இந்நிலையில், நயனுக்கு ஆதரவாக திரைப்பிரபலங்கள் பலர் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். உங்கள் சப்போர்ட் யாருக்கு?.

News November 16, 2024

நெல்லையை சூழ்ந்த தீவிரவாதத் தடுப்புப் பிரிவு!

image

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படம் திரையிடப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று காலை அந்த தியேட்டர் மீது மர்மநபர்கள் பெட்ரோல் குண்டை வீசினர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வந்த நிலையில், தமிழக தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீசாரும், கியூ பிரிவு போலீசாரும் அங்கு அதிரடியாக வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் நெல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

News November 16, 2024

தமிழ்நாடு அணி அபார வெற்றி

image

ரஞ்சி கோப்பையில் ரயில்வேஸ் அணிக்கெதிரான போட்டியில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. TN முதல் இன்னிங்ஸில் 438 ரன்கள் எடுத்த நிலையில், ரயில்வேஸ் 2 இன்னிங்ஸ்களில் முறையே 229 & 184 ரன்கள் எடுத்தது. TN சார்பில் 91 ரன்கள் அடித்த முகமது அலி ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் D பிரிவுக்கான பட்டியலில் TN அணி முதலிடம் பிடித்துள்ளது.

News November 16, 2024

கொடுமை.. 12 வயது சிறுமிக்கு ஹார்ட் அட்டாக்..!

image

தெலங்கானாவில் 12 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மஞ்சேரியல் மாவட்டத்தைச் சேர்ந்த நிவ்ரிதி என்ற அந்த சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று காலை பள்ளிக்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது குளித்து விட்டு வந்த அவர், திடீரென நிலைக்குலைந்து கீழே விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மாரடைப்பால் சிறுமி உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

News November 16, 2024

வாழ்க்கையில் இதை மட்டும் மறக்காதீங்க..!

image

தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா, வாழ்வில் நினைவில் கொள்ள வேண்டிய 4 விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். *உங்களுக்கு சரியென்றுபட்டால், அதை மற்றவர்களுக்கு நிரூபித்து நேரத்தை வீணாக்காதீர்கள். *நீங்கள் செய்வது தவறு என்றால், அதை சரியானது என நிரூபிக்க நேரத்தை வீணாக்காதீர்கள். *உங்களுக்கு உதவி தேவையென்றால், நேரத்தை வீணாக்காமல் கேட்டு பெறுங்கள். *வாழ்க்கை மிகவும் சிறியது. எதிர்மறையாக சிந்தித்து நேரத்தை செலவிடாதீர்கள்.

News November 16, 2024

ரயில்வே சொன்ன வேற லெவல் குட் நியூஸ்..!

image

ரயிலில் அவசரமாக டிக்கெட் புக் செய்ய தட்கலை மட்டுமே பலரும் அறிந்திருப்போம். இந்நிலையில், ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு கூட டிக்கெட் புக் செய்யும் ‘கரண்ட் புக்கிங்’ (Current Ticket Booking) என்ற வசதி இருப்பது பலருக்கும் தெரியாது. இதற்கு IRCTC செயலியில் சென்று, ஏறும் இடம், இறங்கும் இடத்தை பதிவிட்டு புக் செய்யலாம். சாதாரண டிக்கெட் கட்டணத்தை காட்டிலும், இது குறைவுதான்.

News November 16, 2024

நயன்தாரா பதிவு: திடீரென பல்டி அடித்த ஐஸ்வர்யா ராஜேஷ்

image

தனுஷிற்கு எதிராக நயன்தாரா வெளியிட்ட பதிவிற்கு, நடிகைகள் பலரும் லைக் செய்து ஆதரவு தெரிவித்துள்ளார். நடிகைகள் நஸ்ரியாவில் தொடங்கி, ஸ்ருதிஹாசன், பார்வதி என தனுஷுடன் நடித்த பலரும் லைக் செய்தார்கள். அந்த பட்டியிலில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருந்தார். லைக் செய்து ஆதரவளித்தவர், திடீரென தனது லைக்கை நீக்கியிருக்கிறார். என்ன நினைத்து லைக் செய்தாரோ, என்ன நினைத்து நீக்கினாரோ..ஒண்ணுமே புரியல..

News November 16, 2024

நயன்தாரா சொன்ன அந்த ஒரு வார்த்தை

image

தனுஷ் குறித்த அறிக்கையில் அவரை சரமாரியாக வசைபாடியிருக்கும் நயன்தாரா, இறுதியில் ஜெர்மன் வார்த்தை ஒன்றையும் குறிப்பிட்டுள்ளார். ‘Schadenfreude’ என்ற வார்த்தையை தனுஷ் புரிந்துகொண்டு இனி அதனை யாருக்கும் செய்ய வேண்டாம் என்று அறிக்கையில் நயன் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அர்த்தம் “அடுத்தவரின் துன்பத்தில் இன்பம் காண்பவர்” என்பதாகும்.

News November 16, 2024

டி20யில் கிங் என நிரூபித்த அர்ஷ்தீப் சிங்

image

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வேகபந்துவீச்சாளர் என்ற பெருமையை அர்ஷ்தீப் சிங் பெற்றுள்ளார். லிஸ்ட்டில் சுழற்பந்து வீச்சாளர் சாஹல் 80 போட்டிகளில் 96 விக்கெட்களுடன் முதல் இடத்திலும், அர்ஷ்தீப் சிங் 60 போட்டிகளில் 95 விக்கெட்களுடன் 2வது இடத்திலும், புவனேஷ்குமார் 87 போட்டிகளில் 90 விக்கெட்டுகளுடன் 3வது இடத்திலும் உள்ளனர்.

error: Content is protected !!