India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சந்திரபாபு நாயுடுவின் தம்பி ராமமூர்த்தி நாயுடு (72) காலமானார். நீண்ட நாள்களாக நோயால் அவதிப்பட்ட அவருக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், கடந்த 14ஆம் தேதி ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்ததார். 1994-ல் சந்திரகிரி தொகுதியில் இருந்து TDP எம்எல்ஏவாக ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
விஜய்யின் ஒவ்வொரு அரசியல் பேச்சும் அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, திமுகவை எதிர்த்து விஜய் களமாடுவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்நிலையில், தவெகவில் இதுவரை 93 லட்சம் பேர் இணைந்துள்ளனர். சில தினங்களில் இந்த எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிடும். கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே ஒரு கோடி பேர் சேர்ந்திருப்பது முக்கிய கட்சிகளையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெய்வேலியில் செயல்பட்டுவரும் பொதுத்துறை நிறுவனமான NLCல் காலியாக உள்ள 334 அலுவலர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. Executive Engineer, Deputy General Manager உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். விருப்பம் உள்ளவர்கள் டிச.17ம் தேதிக்குள் <
பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை அறிய பலருக்கும் ஆர்வம் உண்டு. அது Rumour செய்தியாக இருந்தாலும், சுவாரஸ்யம் அதிகம்தான் . நீண்ட காலமாகவே கீர்த்தி சுரேஷுக்கு திருமணம் என பல தகவல்கள் வெளிவருகின்றன. தற்போது வெளிவரும் செய்திகளில் அவருக்கு டிசம்பர் மாதத்தில் திருமணம் என கூறப்படுகிறது. மாப்பிள்ளை குறித்த தகவல் இல்லாத போதிலும், இது பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமே என்கிறார்கள்.
பள்ளி, கல்லூரிகளில் அமரன் படத்தை திரையிட வேண்டுமென தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது. அக்கட்சியின் தமிழ் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமரன்’ படம் ஓர் அமர காவியம் என்று தெரிவித்துள்ளார். தேசபக்தியை வலியுறுத்தும், மாணவர்களை NCC, ராணுவத்தில் சேர தூண்டும் அமரன் படத்திற்கு தமிழக அரசு வரி விலக்கு அளிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மழைக்காலத்தில் மீன் சாப்பிட்டு அலர்ஜி, நோய்த்தொற்று ஏற்படுவதை தடுக்க, ஃப்ரெஷ் மீன்களை மட்டும் வாங்குங்கள். *மீனில் அதிக நாற்றம், நெடி வந்தால் பழைய மீன் *மீனின் கண்கள் பிரகாசமாக இருந்தால் ஃப்ரெஷ் மீன் *விரலால் அழுத்திப் பார்க்க, மீன் கெட்டியாக இருந்தால் ஓகே *ஃப்ரெஷ் மீனின் தோல் பளபளப்பாக, ஈரமாக இருக்கும் *செதில்களை தூக்கிப் பார்த்தால் உள்ளே பளிச் சிவப்பு/ பிங்க் தெரிந்தால், அது ஃப்ரெஷ் மீன்.
உ.பி. பாஜக எம்.பி. வினோத் பிந்த், மிர்சாபூரில் உள்ள தனது அலுவலகத்தில் இளைஞர்களுக்கு விருந்து வைத்துள்ளார். சோறும், சுடச்சுட மட்டன் குழம்பும் பரிமாறப்பட்டுள்ளது. ஆனால், மட்டன் பீஸ் இல்லாமல் கிரேவி மட்டுமே பரிமாறியதால், ஆத்திரமடைந்த இளைஞர்கள் சிலர், பரிமாறியவரை போட்டு பொளக்க, அந்த இடமே களேபரமானது. குடித்துவிட்டு வந்த சிலரால், இந்த மோதல் நடந்ததாக எம்.பி. வினோத் தெரிவித்துள்ளார்.
PM மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிரியங்கா காந்தி சவால் விடுத்துள்ளார். சீரடியில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய அவர், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவோம், 50% இடஒதுக்கீட்டை நீக்குவோம் என்று இருவராலும் அறிவிக்க முடியுமா என சவால் விடுத்துள்ளார். ராகுல் காந்தி இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர் அல்ல எனவும், இடஒதுக்கீடு கோரியே பேரணி சென்றார் என்றும் கூறினார்.
வரும் 2025-ம் ஆண்டு சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு – கேது பெயர்ச்சி நடக்கும் ஆண்டாக இருக்கிறது. இதில் ரிஷபம், துலாம் ராசிகளை பொறுத்தவரை யோகம் கொட்ட போகிறது. பண வரவு, புதிய வேலை கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவீர்கள். வரன் அமையும். நீண்டகால நோய்கள் குணமாகும். மிதுனம் ராசிக்கு குரு பகவான் மூலம் பணம் கொட்டும். நீண்டநாட்களாக இருந்து வந்த கடன் தீரும். நோய்கள் விலகும்.
நயன்தாரா – தனுஷ் மோதல்தான் ஒட்டுமொத்த இந்திய திரையுலகிலும் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த களோபரத்துக்கு மத்தியில், ப்ளூ சட்டை மாறன், அஜித்தை புகழ்ந்துள்ளார். “ஷூட்டிங், பைக் டூர், கார் ரேஸ் என தான் உண்டு, தன் வேலையுண்டு என்று எந்த பஞ்சாயத்துக்கும் போகாமல்.. நிம்மதியாக வாழும் ஒரே ஸ்டார்” என அஜித் படத்தை போஸ்ட் செய்துள்ளார். ப்ளூ சட்டை மாறனின் கருத்துக்கு உங்கள் பதில் என்ன?
Sorry, no posts matched your criteria.