News November 17, 2024

உ.பி தீவிபத்துக்கு நர்ஸ் காரணமா? விசாரணை தீவிரம்

image

உ.பி ஹாஸ்பிட்டல் தீ விபத்தில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜான்சி மருத்துவக் கல்லூரி ஹாஸ்பிட்டலில் நேற்று முன்தினம் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீவிபத்தில் 10 குழந்தைகள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விபத்தின் போது அவசரச் சிகிச்சை பிரிவில் இருந்து நர்ஸ் ஒருவர் வேகமாக வெளியேறியது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

News November 17, 2024

ஹிட்லருக்கே சிலை வைப்பார்: கே.பாலகிருஷ்ணன்

image

சீமான் ஹிட்லருக்கே சிலை வைக்க வாய்ப்புள்ளதாக சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். காலையில் எழுந்தவுடன் என்ன தோன்றுகிறதோ அதை பற்றி எல்லாம் பேசுகிற மனிதருக்கு, பதிலளிக்க விரும்பவில்லை எனவும் அவர் மறைமுகமாக சீமானை விமர்சித்துள்ளார். தான் ஒரு சர்வாதிகாரி எனவும், அவ்வாறு இருப்பதில் தவறில்லை என்றும் சீமான் சில தினங்களுக்கு முன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2024

WI Vs ENG T20: வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி

image

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய ENG அணி 218/5 ரன்கள் குவித்தது. அந்த அணியின் ஜேக்கப் பெதெல் 62 ரன் எடுத்தார். தொடர்ந்து விளையாடிய WI அணி, 19 ஓவரில் 221/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் எவின் லூயிஸ் 68, ஹோப் 54 ரன்களும் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.

News November 17, 2024

மோடிக்கு நைஜீரியாவில் உற்சாக வரவேற்பு

image

நைஜீரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நைஜீரியா- இந்தியா இடையேயான உறவை வலுப்படுத்த பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இது குறித்து தனது X பதிவில், “நைஜீரிய பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை மேலும் ஆழப்படுத்தும்” எனப் பதிவிட்டுள்ளார். நைஜீரியா பயணத்தை முடித்துவிட்டு பிரேசிலில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

News November 17, 2024

WI Vs ENG டி20: இங்கிலாந்து அணி ரன் குவிப்பு

image

4ஆவது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 219 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இங்கி. அணியின் பிலிப் சால்ட் அதிரடியாக விளையாடி அரை சதம் (55) கடந்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஜேக்கப் பெதெல் 62 ரன் எடுத்த நிலையில், அந்த அணி 20 ஓவரில் 218/5 ரன்கள் குவித்தது.

News November 17, 2024

இலங்கையின் புதிய பிரதமர்? நாளை அறிவிப்பு

image

இலங்கையின் புதிய பிரதமர் என்பதை அதிபர் அனுரா குமார திசநாயகா நாளை அறிவிப்பார் என தேசிய மக்கள் சக்தி கூட்டணி அறிவித்துள்ளது. 225 இடங்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 14ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 159 இடங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமோக வெற்றிப் பெற்றது. 3-ல் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி, அக்கூட்டணி புதிய வரலாற்று சாதனையை படைத்துள்ளது.

News November 17, 2024

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா வெற்றி

image

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் சீனாவை (3-0) வீழ்த்தி இந்திய பெண்கள் அணி அரையிறுதிக்கு முன்னேறியது. ஆட்டத்தின் 32-வது நிமிடத்தில் சங்கீதா குமாரும், 37-வது நிமிடத்தில் கேப்டன் சலிமா டேடேவும் கோல் அடித்தனர். கடைசி நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி தீபிகா கோல் அடித்தார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற சீனாவை இந்திய அணி வீழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

News November 17, 2024

யாருக்காகவும் காத்திருக்க மாட்டோம்: பிரேமலதா

image

யார் வரவுக்காகவும் இன்னொரு கட்சி வேலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை என TVK-வை பிரேமலதா மறைமுகமாக விமர்சித்துள்ளார். திருவள்ளூரில் பேசிய அவர், சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து, தமிழ்நாட்டின் பாதுகாப்பே கேள்விக்குறியாக இருப்பதாக குறை கூறினார். எதிர்வரப்போகும் மழை வெள்ளத்திற்கு எந்த முன்னெச்சரிக்கையும் தமிழக அரசு எடுக்கவில்லை என்று கூறிய அவர், இதுதான் திராவிட மாடலா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 17, 2024

மின்தடை: கிண்டி ஹாஸ்பிட்டலில் மா.சு ஆய்வு

image

கிண்டி கவர்மெண்ட் ஹாஸ்பிட்டலில் ஏற்பட்ட திடீர் மின்தடை தொடர்பாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். நேற்றிரவு திடீரென ஏற்பட்ட மின்தடையால், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மா.சு, மின்தடை விரைந்து சரிசெய்யப்பட்டு வருவதாகவும், நோயாளிகள் யாருக்கும் எவ்வித பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார்.

News November 17, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால்
▶அதிகாரம்: செய்ந்நன்றி அறிதல்
▶குறள் எண்: 101
▶குறள்:
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிது.
▶பொருள்: தான் ஓர் உதவியும் முன் செய்யாதிருக்கப் பிறன் தனக்கு செய்த உதவிக்கு மண்ணுலகத்தையும் விண்ணுலகத்தையும் கைமாறாகக் கொடுத்தாலும் ஈடாகாது.

error: Content is protected !!