India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்காேட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, தூத்துக்குடி, குமரியில் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
மணிப்பூர் மக்களின் வாழ்க்கை மற்றும் உடைமைகளை பாதுகாக்க நேரடியாக தலையிடுமாறு, ஜனாதிபதி முர்முவுக்கு கார்கே கடிதம் எழுதியுள்ளார். 2023-க்குப் பிறகு பிரதமர் மணிப்பூருக்கு செல்லவில்லை எனவும், ஆனால் எதிர்க்கட்சி தலைவர் 3 முறையும், தானும் அம்மாநிலத்திற்கு சென்றதாகவும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். மேலும், பிரதமர் அங்கு செல்லாததற்கான காரணம் குறித்து தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை பிரிவதாக மனைவி சாய்ரா பானு அறிவித்துள்ளார். வக்கீல் மூலம் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏ.ஆர்.ரஹ்மானுடனான 29 ஆண்டுகால திருமண உறவு முடிவுக்கு வருவதாக கூறியுள்ளார். வாழ்க்கையின் இந்த கடினமான காலகட்டத்தில் பொதுமக்களிடமிருந்து தனியுரிமை, புரிதலை வேண்டுவதாகவும் சைரா பானு தெரிவித்துள்ளார். 1995இல் 2 பேருக்கும் திருமணம் ஆனது. அவர்களுக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
விராட் கோலி ரன் குவிப்பதை தடுக்க அவரது உடலை குறிவைத்து பந்து வீச வேண்டும் என AUS முன்னாள் வீரர் இயான் ஹேலி அட்வைஸ் செய்துள்ளார். கோலியின் சுமாரான ஃபார்மை பயன்படுத்தி அவரது காலை AUS பவுலர்கள் குறிவைக்க வேண்டும் எனவும், அது பலனளிக்காத போது அவரது தோள்பட்டையின் பின்பகுதியை தாக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், அவரது உடலை தாக்குவது 2ஆம் திட்டமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலில் வந்தது கோழியா? இல்லை முட்டையா? என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. இந்த கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது. ஆம்! ஜெனிவா பல்கலைக்கழகத்தின் உயிர் வேதியியலாளர் மரைன் ஆலிவெட்டா தலைமையிலான குழுவினர் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர். அதில், விலங்குகள் தோன்றுவதற்கு முன்பே கரு போன்ற கட்டமைப்புகள் இருந்திருக்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இதன்படி முட்டையே முதலில் வந்தது.
மலேசியாவில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த தமிழகத்தை சேர்ந்த பெண் நடுவானில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராசாத்தி, வறுமை காரணமாக 2 ஆண்டுகளுக்கு முன் வீட்டு வேலைக்காக மலேசியா சென்றிருந்தார். அதன்பின் சொந்த ஊர் திரும்பாத நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, தாயகம் திரும்பிய அவர் குடும்பத்தினரை சந்திக்கும் முன்பே மரணித்தார்.
கிரிக்கெட்டைப்போல் கூடைப்பந்து வீரர்களுக்கும் இனி மாதந்தோறும் ₹70,000 ஊதியம் வழங்கப்படும் என இந்திய கூடைப்பந்து சங்கத் தலைவர் ஆதவ் அர்ஜுன் தெரிவித்துள்ளார். ஐபிஎல் பாணியில் விரைவில் கூடைப்பந்திற்கும் லீக் போட்டி நடத்த திட்டமிட்டு வருவதாகக் கூறிய அவர், சென்னையில் முதல் முறையாக வரும் 22, 25ம் தேதிகளில் சர்வதேச அளவிலான கூடைப்பந்து போட்டி நடைபெற உள்ளதாகவும் கூறியுள்ளார்.
பிரீபெய்டு கஸ்டமர்களுக்காக ₹601 விலையில், 1 வருட Unlimited 5G data plan-ஐ ஜியோ அறிமுகம் செய்துள்ளது. 5G பிளானில் இல்லாதவர்கள், குறைந்த ரீசார்ஜ் (1.5GB or 2GB/month data) பிளானில் இருப்பவர்களுக்கு இது பயனளிக்கும். இந்த பிளானில் 12 மாதத்துக்கு 5G Voucher-கள் வழங்கப்படும். அதை Redeem செய்து டேட்டாவை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த பிளானை வாங்கி ஜியோ பயன்படுத்தும் நண்பர்களுக்கும் பரிசளிக்க முடியும்.
குஜராத் கலவரத்துக்கு காரணமாகக் கூறப்படும் சபர்மதி ரயில் எரிப்பு சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு “சபர்மதி ரிப்போர்ட்” படம் எடுக்கப்பட்டுள்ளது. இதை டெல்லியில் பார்த்த பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, கோத்ரா ரயில் எரிப்பு குறித்து உண்மை அப்படியே படமாக எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார். இந்த படத்தை அனைவரும் குடும்பத்துடன் காண வேண்டும், கரசேவகர்கள் எரிக்கப்பட்டதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் மொத்தம் 4,140 பேர் களத்தில் உள்ளனர். தேர்தலில் பாஜக கூட்டணி மற்றும் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி கூட்டணி இடையே போட்டி நிலவுகிறது. பாஜக அதிகபட்சமாக 149 இடங்களில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 101 தொகுதிகளில் களம் காண்கிறது.
Sorry, no posts matched your criteria.