India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
➤புரோ கபடி தொடர்: 64வது லீக் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் 54-31 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸை வீழ்த்தியது. ➤ஹாக்கி ஆசிய சாம்பியன்: இன்று நடைபெறும் ஃபைனலில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன. ➤ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய தடகள வீராங்கனை விஸ்மாயாவுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டது. ➤சீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் INDவின் அனுபமா USAவின் பீவெனை வீழ்த்தினார்.
கனமழை எதிரொலியாக தமிழ்நாட்டில் தற்போது வரை 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லையை தொடர்ந்து, தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும், ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவு எடுத்துக் கொள்ளலாம் என விருதுநகர் ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்
திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற புகழைக் கொண்டது காஞ்சி உலகளந்த பெருமாள் கோயில். கி.பி. 846இல் மூன்றாம் நந்திவர்மனால் நிர்மாணிக்கப்பட்ட திருக்கோயில் இது. 4 வெவ்வேறு திவ்ய தேசங்களைக் கொண்ட ஒரே திருத்தல வளாகமான இங்கு சென்று, தேவகங்கை தீர்த்தத்தில் நீராடி, வாமனருக்கு துளசி இலை மாலை சூட்டி, 18 முறை ஸ்ரீவாமன ஸ்தோத்திரம் பாடி வணங்கினால் நிலம் வாங்கும் யோகம் கிட்டும் என்பது ஐதீகம்.
ஏ.ஆர்.ரஹ்மான், சாயிரா பானு மணமுறிவு குறித்து அவர்களது மகளும் இசையமைப்பாளருமான கதீஜா ரஹ்மான் ரியாக்ட் செய்துள்ளார். X தளத்தில் ரஹ்மான் வெளியிட்டுள்ள விவாகரத்து போஸ்ட்டை ரீஷேர் செய்து ‘வணக்கம்’ எமோஜியை சாயிரா பதிவிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட்டில் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். ரஹ்மானின் மகன் ARR அமீன், தங்களது தனியுரிமையை மதிக்குமாறு பதிவிட்டுள்ளார்.
மகாராஷ்ட்ரா, ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி அம்மாநிலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. ஜார்க்கண்டில் 38 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கிறது. அங்கு கடந்த 13-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
கனமழை எதிரொலியாக 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதே நேரம், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்வதால், விடுமுறை அறிவிப்பு வெளியாகலாம்.
BGT தொடரின் முதல் டெஸ்டில் KL ராகுல், ஜெய்ஸ்வால் தொடக்க வீரர்களாக களமிறங்குவார்கள் எனக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து படிக்கல், கோலி, பண்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என்றும் தகவல் உள்ளது. 6-வது இடத்திற்கு சர்பராஸ் – ஜூரல் இடையே போட்டி நிலவுவதாகவும், ஆல்ரவுண்டர்களாக நிதிஷ், அஸ்வின் இடம் பெறலாம் எனப்படுகிறது. பந்து வீச்சாளர்களில் பும்ராவுடன் ஹர்ஷித் ராணா, சிராஜ்/ஆகாஷ்தீப் ஆகியோர் விளையாடலாம்.
80 ஆண்டுகளுக்கு முன் ஜப்பான் மீது வீசப்பட்ட அணு ஆயுதங்களின் தாக்கம் இன்றளவும் பாதிப்பை தருகிறது. இந்நிலையில், உக்ரைன் மீது அணு ஆயுதத்தை வீசுவோம் என ரஷ்யா எச்சரித்திருப்பது உலக நாடுகளை திரும்பிப் பார்க்கச் செய்திருக்கிறது. அமெரிக்கா தயாரித்த தொலைதூர ஏவுகணைகளை ரஷ்யா மீது உக்ரைன் ஏவியதையடுத்து ரஷ்ய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதனால், பதற்றமான சூழல் நிலவுகிறது.
திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. மேலும், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று பரவலாக மழை பெய்யும் என்றும், சென்னை மற்றும் புறநகரில் ஒரு சில பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
ஏஆர் ரஹ்மான்-சாயிரா பானு தம்பதியர் பிரிவதாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் தங்கள் வழக்கறிஞர்கள் மூலம் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசித்தாலும், சில சிரமங்களும் பதற்றங்களும் தீர்க்க முடியாத இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது. இருவரையும் இணைக்க யாராலும் பாலமாக செயல்பட முடியாது. மிகுந்த வலியுடன் இந்த முடிவை எடுத்துள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.