India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக் கடல், அரபிக் கடலில் ஒரே நேரத்தில் இரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உருவாகின்றன. இது அரபிக் கடலில் 12 மணி நேரத்தில் உருவாகி, வலுவடைந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இந்திய பகுதியை விட்டு விலகிச் செல்ல உள்ளது. வங்கக் கடலில் 22ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து அதே வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
உலகில் மொத்தம் 110 கோடி பேர் கொடிய வறுமையில் வாழ்ந்து வருவதாக ஐநா ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இதில் பாதி பேர் (48.1%) இந்தியா, பாக்., எத்தியோப்பியா, நைஜீரியா, காங்கோ (DRC) ஆகிய 5 நாடுகளில் உள்ளனர். குறிப்பாக பாகிஸ்தானை (9.3 கோடி) விட இந்தியாவில் தீவிர வறுமையில் இருப்போர் (23.4 கோடி) அதிகம். மனிதவளக் குறியீட்டில் பின்தங்கிய நாடுகளிலும், தீவிரவாதம்- போர் அதிகமுள்ள இடங்களிலும் வறுமை அதிகமாக உள்ளது.
NTPC நிறுவனத்தில் காலியாகவுள்ள 50 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பொறுப்பில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: B.Sc (Agriculture Science). வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹40,000+ சலுகைகள். தேர்வு முறை: எழுத்து & நேர்காணல் தேர்வு. விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.28. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையின் சில பக்கங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் விதமாகவும், தன்னை கொன்று விடுவார் என்ற அச்சம் காரணமாகவும் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக பொன்னை பாலு அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக இதுவரை கைதான 28 பேரில், 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் NZ வீரர் ரச்சின் ரவீந்திரா சதம் விளாசி அசத்தியுள்ளார். 134 ரன்கள் முன்னிலையுடன் 3வது நாள் ஆட்டத்தை தொடங்கிய NZ அணி தொடக்கத்தில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் திணறியது. ஒருபுறம் விக்கெட்டுகள் சரிய பொறுப்புடன் விளையாடிய அவர் 124 பந்துகளில் சதமடித்தார். இதன்மூலம், இந்தியாவிற்கு எதிராக தனது முதலாவது டெஸ்ட் சதத்தை அவர் பதிவு செய்தார்.
மழைக்காலத்தில் ஏற்படும் தீவிர சைனஸ், இருமல், மூக்கடைப்பு, ஜலதோஷம், தலைவலி, உடல்வலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் கருந்துளசி தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். கருந்துளசி இலை, சுக்கு, மிளகு,மஞ்சள், கிராம்பு, ஏலக்காய் பொடி சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான கருந்துளசி தேநீர் ரெடி. இந்த டீயை எப்போது வேண்டுமானாலும் பருகலாம்.
இங்கிலாந்தை சேர்ந்த ஒருவருக்கு 3 ஆண்குறிகள் இருப்பது மருத்துவ உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மிக அரிய பிறவி குறைபாடான இது ‘டிரிஃபாலியா’ என அழைக்கப்படுகிறது. முதன் முதலாக 2020ல் ஈராக்கில் இக்குறைப்பாட்டுடன் குழந்தை ஒன்று பிறந்தது. தற்போது 78 முதியவரின் சடலத்தை ஆய்வு செய்ததில், அவருக்கு 3 ஆண்குறிகள் இருப்பது தெரிந்தது. வாழ்நாள் முழுக்க தன் நிலையை அறியாமலேயே அவர் வாழ்ந்திருக்காலம் எனத் தெரிகிறது.
RAW அதிகாரி விகாஸ் யாதவ் மீது அமெரிக்கா பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. நியூயார்க்கில் காலிஸ்தான் பிரிவினைவாதி குருபத்வந்த் பன்னுவை கொல்ல அவர் சதி செய்ததாக FBI குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்காக நிகில் குப்தா என்பவர் நியமிக்கப்பட்டதாகவும், அவர் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க குழு நியமிப்பதாக இந்தியா உறுதியளித்துள்ளது.
ஐபிஎல் வீரர்களை தக்கவைப்பது குறித்த பட்டியல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. MI: ரோஹித், பும்ரா, சூர்ய குமார், ஹர்திக் DC: பண்ட், அக்ஷர், ஜேக்/குல்தீப், PK: அர்ஷ்தீப் சிங் LSG: பூரன், மயங்க் யாதவ், பதோனி/மொஹ்சின் CSK: ஜடேஜா, ருதுராஜ், துபே, தோனி GT: கில், ரஷித், SRH: கம்மின்ஸ், அபிஷேக், கிளாசென் RR: சாம்சன், பராக், ஜூரல் KKR: ஷ்ரேயாஸ், ரஸ்ஸல், நரைன் RCB: கோலி, டுபிளெசிஸ், சிராஜ்.
முடி வளர்ச்சியை மீட்டெடுக்க ஆயுர்வேதத்தில் பல ரகசிய குறிப்புகள் உள்ளன. அதில் ஒன்றுதான் நீலி கரிசாலை கஷாயம். ரத்தத்தை சீர்படுத்தி மயிர்க்கால்களின் வளர்ச்சியை தூண்டும் ஆன்டி ஆக்ஸிடன்கள், அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த நீலியுடன் மஞ்சள் கரிசாலை பூவை கொதி நீரில் போட்டு, நன்கு சுண்டிய பின் வடிகட்டினால் கசாயம் தயார். இதை 45 நாட்கள் காலையில் பருகி வந்தால் முடி உதிர்தல் பிரச்னை தீரும்.
Sorry, no posts matched your criteria.