India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூகுள் மேப்பை பார்த்து உணவு டெலிவரி செய்ய சென்ற இளைஞர் சதுப்புநிலச் சேற்றில் சிக்கிக்கொண்டார். சென்னை துரைப்பாக்கத்தில் இரவு நேரத்தில் டெலிவரி செய்ய முயன்ற போது இந்த சம்பவம் நடந்துள்ளது. சேற்றில் சிக்கிய இளைஞர், தீயணைப்புத் துறை கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார். இதனையடுத்த அங்கு வந்த மீட்புப்படையினர் அவரை பத்திரமாக மீட்டனர்.
பாடத் தெரியாதவர்களை வைத்து தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதால், ‘திராவிடம்’ விடுபட்டதாக பாஜக நிர்வாகி கரு.நாகராஜன் விளக்கம் அளித்துள்ளார். மேலும், இந்த குளறுபடி குறித்து விழா ஏற்பாட்டாளர்களிடம் கண்டனம் தெரிவிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார். முன்னதாக, ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில், ‘திராவிட நல் திருநாடும்’ என்ற வார்த்தை விடுபட்டது சர்ச்சையானது.
நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக ஆடி வருகின்றனர். கேப்டன் ரோஹித் ஷர்மா 52 ரன்னில் ஆட்டமிழந்த நிலையில், விராட் கோலி, சர்ஃபராஸ் கான் இருவரும் அடுத்தடுத்து அரை சதம் அடித்துள்ளனர். தற்போது வரை இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 220 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. கோலி 67*, சர்ஃபராஸ் 62* ரன்களுடன் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.
பெங்களூருவில் பறக்கும் எலக்ட்ரிக் டாக்ஸிகளை Sarla Aviation என்ற தனியார் நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. முதற்கட்டமாக பெங்களூரு விமான நிலையம் – எலக்ட்ரானிக்ஸ் சிட்டி இடையே சேவையை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த 52 கி.மீ தூரத்தை, 19 நிமிடங்களில் டாக்ஸி கடக்கும். இதற்காக ₹1,700 கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், 7 சீட்களை கொண்ட டாக்ஸி இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*உடலுக்குத் தேவையான அனைத்து சத்துகளும் ஒருங்கிணைந்து கிடைப்பது அத்திப்பழத்தில்தான்.
*அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிட கல்லீரல் வீக்கம், ஆண்மைக் குறைவு, மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்.
*அத்தியில் உள்ள கால்சியம் சத்து எலும்புகளையும் பற்களையும் உறுதியாக்கும்.
*அத்திப்பழத்தில் காணப்படும் பொட்டாஷியம் உயர் ரத்த அழுத்த நோய் ஏற்படாமல் தடுக்கும்.
பந்துவீச்சு மாற்றங்களை சரியாக செயல்படுத்துவதை தோனியிடம் இருந்து கற்றுக்கொள்ளும்படி ரோஹித் ஷர்மாவுக்கு முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் ஆலோசனை கூறியுள்ளார். அவர் தனது X பதிவில், “ஆடுகளத்தில் தனது அணிக்கு ஏற்படும் பாதிப்பு கைமீறி செல்லும் முன்பே, கண்டறியும் தனித்துவமான திறனை தோனி கொண்டிருந்தார். அத்தகைய திறனை தனது தலைமைப் பண்பில் ரோஹித் சேர்த்துக்கொள்ள வேண்டும்” என ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 50 சதவீத அகவிலைப்படி, 53 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜூலை 1 முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும். இதனால் 16 லட்சம் அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
OTT தளங்களில் வெளியாகும் படங்களை தணிக்கை செய்ய குழு அமைக்கக்கோரி தாக்கல் செய்த மனுவை SC தள்ளுபடி செய்தது. ஷஷாங் ஷகிர் ஷா என்ற வழக்கறிஞர் தொடர்ந்த பொதுநல மனுவை விசாரித்த CJ சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அரசின் கொள்கை சார்ந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்தது. மனுதாரர், சம்பந்தப்பட்ட துறையிடம் முறையிட்டு தீர்வை பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியது.
மேற்கு ரயில்வேயில் 5,066 அப்ரன்டிஸ் காலி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி முதல் rrc-wr.com இணையதளத்தில் விண்ணப்பப்பதிவு நடைபெறுகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க வரும் 22ஆம் தேதி கடைசி நாளாகும். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்பு, ஐடிஐ தேர்ச்சியும், வயது வரம்பாக 15- 24 வரையும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
*திராட்சை சாறுடன் அரிசி மாவு கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் கழித்து கழுவினால், கருந்திட்டுகள், கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளிச்சென்று தெரியும்.
*பட்டர் ஃபுரூட் (அவகோடா) சதைப்பற்றுடன் வெண்ணெய், தேன் கலந்து முகத்தில் தடவிவிட்டு சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளப்பாகும்.
*தக்காளி சாறுடன், அரிசி மாவு கலந்து தடவி வர முகம் பளிச்சென மாறும்.
Sorry, no posts matched your criteria.