News November 20, 2024

ரயில்வே ஸ்டேஷன் இல்லாத இந்திய மாநிலம் தெரியுமா?

image

இந்தியாவில் சாதாரண மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் பொது போக்குவரத்து, ரயில்கள் தான். ஆனால், ஒரு மாநிலத்தில் ரயில்வே ஸ்டேஷனே இல்லை என்பது தெரியுமா? கடினமான மலைப்பகுதியில் சிக்கிம் மாநிலம் அமைந்துள்ளதால், அங்கு ரயில்பாதை அமைப்பதில் சிக்கல் இருந்தது. அங்கு சாலை போக்குவரத்தே பிரதானமானது. தற்போது, 45 கிமீ நீளத்துக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டு, ரங்போ என்ற இடத்தில் முதல் ரயில்வே ஸ்டேஷன் அமையவுள்ளது.

News November 20, 2024

2 போட்டிதான்… உச்சத்துக்கு சென்ற இந்திய வீரர்

image

சமீபத்தில் நடந்த SA-வுக்கு எதிரான தொடரில், கடைசி 2 T20 போட்டிகளில் அதிரடியாக ஆடிய இந்திய அணியின் இளம் வீரர் திலக் வர்மா அடுத்தடுத்து 2 சதங்கள் அடித்தார். இதன் மூலம், சர்வதேச T20 தரவரிசையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளார். இந்த சீரிஸுக்கு முன் 72வது இடத்தில் இருந்த திலக் வர்மா, தற்போது 69 இடங்கள் முன்னேறி 3வது இடம் பிடித்துள்ளார். SKY, ஜெய்ஸ்வால் முறையே 4, 8வது இடங்களில் உள்ளனர்.

News November 20, 2024

ஏ.ஆர். ரகுமானை அடுத்து இன்னொரு பிரபலமும் DIVORCE

image

ARR – சாய்ரா விவாகரத்து செய்தியை ரசிகர்கள் ஜீரணிப்பதற்குள், இன்னொரு இசைப் பிரபலமும் விவாகரத்தை அறிவித்துள்ளார். பிரபல கிடாரிஸ்ட் மோகினி டே, அவரின் கணவர் மார்க் ஹார்ட்சச் பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர். வாழ்க்கையில் தங்களின் விருப்பங்கள் வெவ்வேறாக இருப்பதால் கனத்த இதயத்துடன் பிரிவதாக தெரிவித்துள்ளனர். ARR-இன் குழுவில் நீண்டகாலமாக பயணித்துவரும், மோகினி டே, உலகின் சிறந்த பேஸ் கிடாரிஸ்ட் ஆவார்.

News November 20, 2024

கேன்சல் செய்த காசோலை கேட்பது ஏன்?

image

தற்போது ஒரு சில வங்கிகள் கடன்கோரும் நபரிடமிருந்து Cancelled Cheque-ஐ கோருகின்றன. இதில் அச்சப்பட ஒன்றுமில்லை. வங்கிக் கணக்கின் (Proof of Identity) ஆதாரமாக காசோலை கருதப்படுகிறது. அதில் உள்ள தகவல்களை முன்னெச்சரிக்கையாக பதிவு செய்ய கடனளிக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதனைப் பார்த்து, காப்பீடு & ஒரு சில வங்கி & நிதிச் சேவை நிறுவனங்களும் கேன்சல் செய்த காசோலையைக் கேட்கின்றன.

News November 20, 2024

திமுக அனைத்திலும் தோல்வி: எச்.ராஜா சாடல்

image

திமுக அரசை மக்கள் தூக்கி எறிய வேண்டும் என்று பாஜக உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பின் எச்.ராஜா தெரிவித்துள்ளார். திமுக அனைத்து விதத்திலும் தோற்றுப்போய் விட்டதாக விமர்சித்த அவர், தூத்துக்குடி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கனிமொழி ஏன் கண்டிக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், அரசு நிர்வாகத்தில் CM ஸ்டாலின் கவனம் செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

News November 20, 2024

19 ஆண்டுகளுக்கு பின் சூர்யாவுடன் இணையும் த்ரிஷா?

image

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘சூர்யா 45’ படத்தில் த்ரிஷா நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது உண்மையாகும் பட்சத்தில் ‘ஆறு’ படத்துக்குப் பின் 19 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் இணைந்து நடிக்கும் படம் இதுவாகும். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

News November 20, 2024

பாக்.கில் தற்கொலைப்படை தாக்குதல்: 12 வீரர்கள் பலி

image

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் பலியாகியுள்ளனர். கைபர் பக்துன்குவாவில் உள்ள சோதனை சாவடி மீது வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட வாகனத்தை மோதி வெடிக்கச் செய்தனர். இதில் 12 ராணுவ வீரர்களும், தாக்குதல் நடத்திய தீவிரவாதியும் பலியாகினர். குவெட்டா ரயில் நிலைய தாக்குதலின் பதற்றம் தணிவதற்குள் இச்சம்பவம் நடந்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது.

News November 20, 2024

மீண்டும் இணைந்த மம்மூட்டி, மோகன்லால்

image

மம்மூட்டி, மோகன்லால் இணைந்து, 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் தொடங்கியது. மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்திற்கு மம்மூட்டி 100 நாட்களும், மோகன்லால் 30 நாட்களும் கால்ஷீட் கொடுத்துள்ளனர். தலைப்பிடப்படாத இப்படத்திற்கு ‘மெகாஸ்டார் 429’ எனத் தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. 2008இல் வெளியான ‘Twenty:20’ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

News November 20, 2024

திணறும் டெல்லி : நாட்டின் தலைநகரை மாற்ற முடியுமா?

image

காற்று மாசால் தவிக்கும் டெல்லி தலைநகராக தொடரவேண்டுமா? என்ற கேள்வியை சசி தரூர் எழுப்ப, அது விவாதப் பொருளாகியுள்ளது. ஏற்கனவே 8 நாடுகள் தலைநகரை மாற்றியுள்ளன. நைஜீரியா(Lagos-Abuja), மியான்மர்(Yangon-Naypyidaw), ரஷ்யா(St.Petersburg-Moscow), பாகிஸ்தான்(Karachi-Islamabad), பிரேசில்(Rio de Janeiro-Brasília), கஜகஸ்தான்(Almaty-Astana), தான்சானியா(Dar es Salaam-Dodoma), ஐவரி கோஸ்ட்(Abidjan-Yamoussoukro).

News November 20, 2024

கண்டெய்னர் வணிகத்தில் களமிறங்கும் இந்தியா

image

உலகளவில் மிகப்பெரிய வர்த்தகத் துறைகளில் ஒன்றாக கண்டெய்னர் போக்குவரத்து வணிகம் உள்ளது. அந்த வணிகத்தில் ஈடுபட மத்திய அரசின் கீழ் இயங்கும் ரயில்வேயின் ‘கான்கோர்’ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகளில் கண்டெய்னர் போக்குவரத்தில் இந்தியா கவனம் செலுத்தவுள்ளது. இது தொடர்பாக ஆய்வறிக்கை அளிக்க EY, KPMG & PwC போன்ற நிறுவனங்கள் பணியமர்த்தப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

error: Content is protected !!