News October 19, 2024

ராசி பலன் (19.10.2024)

image

◙மேஷம் – இன்சொல்
◙ரிஷபம் – பரிவு
◙மிதுனம் – முயற்சி
◙கடகம் – தெளிவு
◙சிம்மம் – அனுகூலம்
◙கன்னி – புகழ்
◙துலாம் – உதவி
◙விருச்சிகம் – மகிழ்ச்சி
◙தனுசு – கோபம் ◙மகரம் – பெருமை
◙கும்பம் – சுகம் ◙மீனம் – வெற்றி

News October 19, 2024

ஆளுநருக்கு முதல்வர் கேள்வி

image

தமிழ்த்தாய் வாழ்த்தை முழுமையாக பக்தியோடு பாடுவேன் எனச் சொல்லும் ஆளுநர், இன்று முழுமையாகப் பாடப்படாதபோது மேடையிலேயே கண்டித்திருக்க வேண்டாமா என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தனக்கு எதிராக இனவாதக் கருத்தை முதல்வர் முன்வைப்பதாக ஆளுநர் குற்றஞ்சாட்டியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள ஸ்டாலின், இந்த மண்ணின் தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான் எனவும் தெரிவித்துள்ளார்.

News October 19, 2024

நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடுத்த மாதம் திருமணம்?

image

நடிகை ரம்யா பாண்டியனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜோக்கர், நண்பகல் நேரத்து மயக்கம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். ரம்யா பாண்டியனுக்கு அவரது காதலர் லவல் தவான் என்பவருடன் நவ.8 ஆம் தேதி ரிஷிகேஷில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், நவ.15 இல் சென்னையில் திருமண வரவேற்பு நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

News October 19, 2024

‘பினாமி’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம்?

image

‘பினாமி’ என்ற இந்தி சொல்லுக்கு, ‘பெயர் இல்லாதது’ என்று அர்த்தம். உரிமையாளர் அல்லாமல் பிறர் பெயர்களில் இருக்கும் அனைத்து சொத்துகளும் பினாமி சொத்துகளாகும். முதன்முதலில், 1988ஆம் ஆண்டு பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம், 8 பிரிவுகளுடன் அமலானது. பின்னர் 2016-ல், மத்திய பாஜக அரசு இந்த சட்டத்தை 72 பிரிவுகளாக உயர்த்தியது. சட்டவிரோத பரிவர்த்தனைகளை தடுக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது.

News October 18, 2024

மற்றவரை புண்படுத்தி மகிழ்வது ஆரியம்: உதயநிதி

image

ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியின் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேசிய உதயநிதி, “ஆரியம் குறித்து மனம் புண்படும்படி இருந்த வார்த்தைகளை, தமிழ்த்தாய் வாழ்த்தில் இருந்து நீக்கியவர் கருணாநிதி. மற்றவர்களை மகிழ்விப்பது திராவிடம். மற்றவர்களை புண்படுத்தி மகிழ்வது திராவிடம். சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நிற்காது. வரிகளை நீக்குவதால் திராவிடம் வீழாது” என்றார்.

News October 18, 2024

JUST NOW: இரவு 1 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை

image

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதில், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, திருச்சி, கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சி, திருப்பத்தூர், நீலகிரி மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. SHARE IT.

News October 18, 2024

யாரு சாமி இவங்க.. தாத்தாக்கள் தான் டார்கெட்டாம்..!

image

அமெரிக்காவைச் சேர்ந்த டிஃப்பனி என்ற பெண் (35), முதியவர்களுடன் சேர்ந்து Adult Content உருவாக்கி லட்சங்களில் சம்பாதித்து வருகிறார். பராமரிப்பு இல்லத்தில் வாழும் முதியவர்களை டின்னருக்கு அழைத்து, அவர்களது சம்மதத்துடன் Adult Content படங்களை உருவாக்குகிறார். தனிமையில் அவதிப்படும் தாத்தாக்களை தன்னால் இளமையாக உணர வைக்க முடிவதாகவும், அவர்களது வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறுகிறார்.

News October 18, 2024

வெறுப்பை கக்கினால் தமிழ் நெருப்பை கக்கும்: கமல்

image

தமிழ்த்தாய் வாழ்த்து குளறுபடி விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு, கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ் மீது வெறுப்பை கக்கினாலும், பதிலுக்கு தமிழ் நெருப்பை கக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அரசியல் செய்வதாக நினைத்து திராவிட நல்திருநாடு வார்த்தையை தவிர்த்தது தமிழக மக்களையும், தமிழக அரசின் சட்டத்தையும், இந்தியாவின் பெருமையையும் விளக்கும் தமிழை அவமதிக்கும் செயல் என்றும் அவர் சாடியுள்ளார்.

News October 18, 2024

மகாராஷ்டிரா தேர்தலில் விசிக போட்டி

image

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் உள்ள 288 சட்டமன்ற தொகுதிகளுக்கு நவம்பர் 20 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் விசிக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் குறித்து நாளை (அக்.19) காலை அவுரங்காபாத்தில் அறிவிப்பதாகவும் திருமாவளவன் கூறியுள்ளார்.

News October 18, 2024

பி.வி.சிந்து அதிர்ச்சி தோல்வி!

image

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் காலிறுதி போட்டியில் பி.வி.சிந்து தோல்வி அடைந்தார். இவர், இந்தோனேசியாவின் கிரிகோரியா மரீஸ்கா துன்ஜங் உடன் மோதிய நிலையில், முதல் சுற்றை மரீஸ்கா துன்ஜங்கும் (21-13), இரண்டாவது சுற்றை சிந்துவும் (21-16) கைப்பற்றினர். இதையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்கும் 3ஆவது சுற்றில் இருவரும் அதிரடியாக விளையாடிய நிலையில், மரீஸ்கா துன்ஜங் 21-9 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றினார்.

error: Content is protected !!