News October 19, 2024

லக்கி பாஸ்கர் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

image

லக்கி பாஸ்கர் படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கியுள்ளார். நடிகை மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தின் டிரைலர் வரும் அக். 21இல் வெளியாகவுள்ளதாக படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்படம் அக்.31இல் தீபாவளியன்று வெளியாகிறது.

News October 19, 2024

போரை நிறுத்த இஸ்ரேல் தயார்.. ஆனால் ஒரு நிபந்தனை

image

போரை நிறுத்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிபந்தனை விதித்துள்ளார். ஹமாஸ் தலைவர் சின்வார் கொல்லப்பட்டது குறித்து பேட்டியளித்த நெதன்யாகு, சின்வார் கொல்லப்பட்டதுடன் போர் முடிந்து விடவில்லை என்றும், இதுவொரு தொடக்கத்தின் முடிவுதான் என்றும் கூறினார். போரை நாளையே நிறுத்த முடியும், ஆனால் அதற்கு ஹமாஸ் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு பிணைக் கைதிகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

News October 19, 2024

அமைதியை சீர்குலைக்க வன்மம்: முத்தரசன்

image

தமிழ்த்தாய் வாழ்த்தில் திராவிடநல் திருநாடு வரி புறக்கணிக்கப்பட்டதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் தமிழக மக்களிடம் ஆளுநர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள அவர், ஆளுநரின் நடவடிக்கைகள் தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்கும் வன்மம் கொண்ட செயல் என்றும் காட்டமாக விமர்சித்துள்ளார்.

News October 19, 2024

இரவில் நிம்மதியான தூக்கத்திற்கு..

image

இரவில் சிலர் தூக்கமின்றி தவிப்பர். அவர்கள் நிம்மதியாக தூங்க என்ன செய்ய வேண்டும் என உடல்நல நிபுணர்கள் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர். அவற்றை தெரிந்து கொள்வோம். * தூங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பு செல்போன், டிவியை ஒதுக்கிவிட வேண்டும் *தூங்குவதற்கு 10 நிமிடத்திற்கு முன்பு ஒரு குளியல் பாேடலாம் *3 மணி நேரத்திற்கு முன்பே காபி, மதுபானத்தை தவிர்க்க வேண்டும் *படுக்கை அறையை இருட்டாக்க வேண்டும்.

News October 19, 2024

வரலாறு படைத்த இந்திய அணி

image

147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு ஆண்டில் அதிகபட்ச (102) சிக்ஸர்கள் அடித்த அணி என்ற சாதனையை இந்திய அணி படைத்துள்ளது. இந்த ஆண்டில் ஜெய்ஸ்வால் 29 மற்றும் ஷுப்மன் கில் 16 சிக்ஸர்களை அடித்துள்ளனர். முன்னதாக, ஒரு ஆண்டில் (2022) இங்கிலாந்து அணி அடித்த 89 சிக்ஸர்களே அதிகபட்சமாக இருந்தது. இந்த பட்டியலில் 87 சிக்ஸர்களுடன் இந்திய அணியே 3ஆம் இடத்திலும் இருக்கிறது.

News October 19, 2024

பிரிக்ஸ் யாருக்கும் எதிரானது அல்ல.. புதின் பேட்டி

image

பிரிக்ஸ் யாருக்கும் எதிரான அமைப்பு அல்ல என்று ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார். மாஸ்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரிக்ஸ் அமைப்பு மேலை நாடுகளுக்கு எதிரானது அல்ல என்பதை இந்திய பிரதமர் மோடி பலமுறை தெரிவித்துள்ளதாக கூறினார். ரஷ்யா-அமெரிக்கா உறவில் விரிசல் உருவானதற்கு அமெரிக்காவே காரணம் என்றும், அமெரிக்காவின் நட்பு நாடுகளே டாலரை இருப்பு வைப்பதை குறைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

News October 19, 2024

எங்க நாட்டுக்கு வாங்க.. அன்போடு அழைக்கும் PAK..!

image

ICC சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் பங்கேற்க, இந்திய அணி தங்களது நாட்டிற்கு வர வேண்டும் என பாக். கிரிக்கெட் வாரியம் (PCB) விருப்பம் தெரிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களால் பாக். செல்வதற்கு இந்திய அணி தயக்கம் காட்டி வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் இந்திய அணி டெல்லி அல்லது சண்டிகருக்கு திரும்ப ஏற்பாடு செய்ய உள்ளதாகவும், BCCI-க்கு PCB கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.

News October 19, 2024

இரவில் சூரியன் ஏன் தெரிவதில்லை?

image

பகலில் ஜொலிக்கும் சூரியன், இரவில் ஏன் தெரிவதில்லை என்ற கேள்வி எழும். அதுகுறித்து தெரிந்து கொள்வாேம். சூரியனை பூமி சுற்றி வருகிறது. அப்படி சுற்றுகையில், பூமியின் ஒரு பகுதி மீது சூரியனின் ஒளிவிழும். அந்த பகுதியில் உள்ள நாடுகளில் பகல் நேரம். சூரிய ஒளி விழாத பகுதியிலுள்ள நாடுகளில் இரவு. அதாவது, பகல் நிலவும் நாடுகளில் சூரியன் தெரியும். இரவு நிலவும் நாடுகளில் சூரியன் தெரியாது. SHARE IT

News October 19, 2024

இறுதிப் போட்டிக்கு சென்றது நியூசிலாந்து

image

மகளிர் T20 WC அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த நியூசி., 20 ஓவரில் 128/9 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் கடைசி வரை போராடி 120/8 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது. நாளை மறுநாள் (அக்.20) நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது நியூசிலாந்து.

News October 19, 2024

இங்கிலாந்தை கட்டி ஆளும் இந்தியர்கள்

image

இங்கிலாந்தில் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்துவது Policy Exchange ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. கல்வி மற்றும் செல்வநிலை குறியீட்டில் 95% இந்தியர்கள் முதலிடத்தில் உள்ளனர். நிறுவனங்களில் இயக்குநர் மற்றும் உயர்நிர்வாகப் பதவிகளில் 49.6% பேர் பணியாற்றுகின்றனர். வீடு உள்ளிட்ட உடைமை உரிமையாளர்களாக 71% இந்தியர்கள் உள்ளனர். ஆனால், 16 வயதில் பள்ளிக்கல்வியில் உயர் நிலையை அடைவதில் சீனர்கள் முந்தியுள்ளனர்.

error: Content is protected !!