News November 24, 2024

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

image

இன்று (நவ.24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

மகாராஷ்டிரா தேர்தல்: வெற்றி பெற்றார் தேவேந்திர பட்னாவிஸ்

image

மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 281 சட்டமன்றத்தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில் பாஜக கூட்டணி 230 இடங்களில் அமோக வெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டது. குறிப்பாக மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தென் மேற்கு தொகுதியில் போட்டியிட்டார். மொத்தம் 1,29,401 வாக்குகள் பெற்ற அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங். வேட்பாளரை விட 39,710 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

News November 24, 2024

மருமகனை வீழ்த்திய அஜித் பவார்

image

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாராமதி தேர்தலில் போட்டியிட்ட அஜித் பவார் 1 லட்சத்து 899 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரும், அஜித் பவாரும் மருமகனுமான யுகேந்திரா பவார் 80,233 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். அம்மாநிலத்தில் பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

News November 24, 2024

ராசி பலன்கள் (24-11-2024)

image

12 ராசிக்காரர்களுக்கும் நாளைக்கான (நவ.24) ராசி பலன்களை தற்போது தெரிந்து கொள்வோம்.
➤மேஷம் – பொறாமை ➤ ரிஷபம் – பயம்
➤மிதுனம் – ஆதரவு ➤கடகம் – எதிர்ப்பு
➤சிம்மம் – தடங்கல் ➤கன்னி – ஆதாயம்
➤துலாம் – சாதனை ➤விருச்சிகம் – பக்தி
➤தனுசு – பணிவு ➤மகரம்- லாபம்
➤கும்பம் – மறதி ➤மீனம் – நன்மை.

News November 24, 2024

அதானிக்கு இப்பதான் மூச்சே வந்துச்சாம்..!

image

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி வென்றது அக்கட்சிகளுக்கு மகிழ்ச்சியோ, இல்லையோ அதானிக்கு பெரும் மகிழ்ச்சி. ஆமாம் ₹25,332 கோடி மதிப்பிலான தாராவி மேம்பாட்டு திட்டம் கைவிட்டு போகாது இல்லையா? எதிர்கட்சிகளின் மகா விகாஸ் அகாதி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், ஏழைகளின் நிலத்தை பிடுங்கும் அதானிக்கு செக் வைப்போம் என்றனர். ஆனால் பாஜக தலைமையிலான கூட்டணிதான் ஆட்சிக்கு வந்துள்ளதால் அதானி செம ஹேப்பியாம்..!

News November 24, 2024

அதிகாரமின்றி காங்கிரசாரால் வாழ முடியாது: மோடி

image

ஆட்சி அதிகாரமின்றி காங்கிரசாரால் வாழ முடியாது என்று மோடி விமர்சித்துள்ளார். பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் கட்சி எதையும் செய்யும் என்று விமர்சித்தார். காங்கிரசின் நகர்ப்புற நக்சல்வாதம் தற்போது இந்தியாவுக்கு சவாலாக உருவெடுத்து இருப்பதாகவும், நகர்ப்புற நக்சல்வாதத்தை கட்டுப்படுத்தும் ரிமோட் வெளிநாட்டில் இருப்பதாகவும் சாடினார்.

News November 24, 2024

மகாராஷ்டிர தேர்தல் முடிவு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

image

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தெந்த கட்சிகள், எத்தனை தொகுதிகளில் வென்றுள்ளன என்பதை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதை தெரிந்து கொள்ளலாம். * பாஜக : 132 * சிவசேனா: 57 * என்சிபி: 41 * உத்தவ் கட்சி: 20 * காங்கிரஸ்: 16 * சரத்பவார் கட்சி : 10 * சமாஜ்வாதி: 2 * ஜேஎஸ்எஸ்: 2 * சுயேச்சைகள்: 2 * மற்ற கட்சிகள்: 6.

News November 24, 2024

INDIA கூட்டணிக்கு வரலாற்று வெற்றி: ஸ்டாலின்

image

ஜார்க்கண்டில் அனைத்து தடைகளையும் தாண்டி வெற்றி பெற்ற ஹேமந்த் சோரனுக்கும், INDIA கூட்டணிக்கும் CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவது, பழிவாங்கும் அரசியல் என கடந்த 5 ஆண்டுகளாக பல தடைகளை பாஜக உருவாக்கினாலும், அதை ஹேமந்த் துணிச்சலுடன் எதிர்கொண்டதாக அவர் புகழ்ந்துள்ளார். மேலும், மக்களாட்சிக்கும், மதச்சார்பின்மைக்கும் கிடைத்த வெற்றி இது எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!