News October 19, 2024

4 நாள்களில் தங்கம் விலை ₹1,480 உயர்ந்தது

image

தங்கத்தின் விலை, நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 15ம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹56,760க்கு விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று ஒரு சவரன் ₹58,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. 4 நாள்களில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹1,480 உயர்ந்துள்ளது. பண்டிகைக் காலம் என்பதால் தங்கம் வாங்க திட்டமிட்டிருந்த மக்கள், இந்த விலை உயர்வால் அதிர்ச்சியில் உள்ளனர்.

News October 19, 2024

உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

image

அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 2 நாள்களில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து, மேற்கு, வடமேற்கு திசையில் நோக்கி நகரும். இதேபோன்று, வங்கக் கடலில் 22ம் தேதி உருவாகக்கூடும் காற்றழுத்த தாழ்வு பகுதி, 24ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதனால், தமிழகத்தில் 19, 20, 21, 24ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் கணித்துள்ளது.

News October 19, 2024

ஒரு சவரன் தங்கம் விலை ₹58,000-ஐ தாண்டியது

image

தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரு சவரன் ₹58,000-ஐ கடந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ஒரு சவரன் ₹58,240க்கும், கிராமுக்கு ₹40 உயர்ந்து ஒரு கிராம் ₹7,280க்கும் விற்பனையாகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, வெள்ளி கிராமுக்கு ₹2 உயர்ந்து ஒரு கிராம் ₹107க்கும், கிலோ ₹1,07,000க்கும் விற்கப்படுகிறது.

News October 19, 2024

நேர்காணல் அடிப்படையில் வேலைவாய்ப்பு

image

ஏர் இந்தியா ஏர்போர்ட் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள 1,067 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒப்பந்த அடிப்படையில் பல்வேறு பணியிடங்களுக்கு அக். 22 முதல் 26 வரை 9.30AM – 12.30PM நேர்காணல் நடைபெறவுள்ளது. 28 – 55 வயதுடையவர்கள் ஜி.எஸ்.டி வளாகம், சஹார் காவல் நிலையம் அருகில், சிஎஸ்எம்ஐ விமான நிலையம், டெர்மினல் 2, கேட் எண் 5 மும்பை – 400 099 என்ற முகவரிக்கு நேர்காணலுக்கு செல்லலாம்.

News October 19, 2024

செறிவூட்டப்பட்ட அரிசி பாதுகாப்பானது

image

செறிவூட்டப்பட்ட அரிசியை அனைவருமே சாப்பிடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊட்டச்சத்து குறைபாட்டை குறைக்கும் நோக்கில், இலவச செறிவூட்டப்பட்ட அரிசி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனிடையே, தலசீமியா, ரத்த சோகை உள்ளிட்ட ரத்த சிவப்பணு பாதிப்புள்ளவர்களுக்கு இந்த அரிசி பாதுகாப்பானதா? என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில், இந்த அரிசியால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என ஆய்வில் உறுதியாகியுள்ளது.

News October 19, 2024

நீல நிற சொகுசு பஸ்களிலும் மகளிருக்கு இலவசம்

image

சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் புதிதாக தொடங்கிய சொகுசுப் பேருந்து சேவையிலும், பெண்கள் இலவச பயண திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை விளக்கமளித்துள்ளது. தமிழகத்தில் நகர்ப்புறங்களில் ‘ஒயிட் போர்டு’ பஸ்களிலும், கிராமப்புறங்களில் நகர பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணித்து வருகின்றனர். இந்நிலையில், நீல நிற சொகுசு பேருந்து சேவையிலும், பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

News October 19, 2024

ACC Emerging Cup: IND-PAK இன்று மோதல்

image

ACC Men’s Emerging டி20 ஆசிய கோப்பை தொடரில் IND-PAK அணிகள் இன்று மோத உள்ளன. குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ள திலக் வர்மா தலைமையிலான IND A அணி PAK A அணியை ஓமன் கிரிக்கெட் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது. கடந்த ஆண்டு இறுதிப் போட்டியில், PAK அணியிடம் தோல்வியுற்ற IND அணி சரியான பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியை STAR SPORTS 1, FanCode appல் காணலாம்.

News October 19, 2024

ஆளுநருக்கு எதிராக நூதன ஆர்ப்பாட்டம்

image

ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வரி தவிர்க்கப்பட்டது. இதற்கு CM ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தைகளைப் புறக்கணித்த ஆளுநருக்கு அந்த வரி அடங்கிய 1000 அஞ்சல் அட்டைகளை அனுப்பி திராவிடர் விடுதலைக் கழகத்தினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

News October 19, 2024

ஒவ்வொரு முறையும் மோடி இது குறித்து பேசினார்: புதின்

image

அமைதியான முறையில் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதின் விருப்பம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க ரஷ்யா செல்வது குறித்து பேசிய அவர், மோதலை தீர்ப்பதில் ரஷ்யா ஆர்வமாக இருப்பதாகக் கூறினார். மேலும், உக்ரைன் போர் குறித்து தொடர்ந்து கவலை தெரிவித்து வரும் மோடிக்கு நன்றி என்றும், ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் அமைதி திரும்புவது குறித்து அவர் பேசியதாகவும் தெரிவித்தார்.

News October 19, 2024

உலர் திராட்சையில் இத்தனை பயன்களா?

image

உலர் திராட்சையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். இதிலுள்ள ஆன்டிஆக்ஸிடண்ட் புற்றுநோய், இதய நோய்களில் இருந்து காப்பதாகவும், உடலில் உள்ள கொழுப்பை கரைத்து ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும் இதிலுள்ள நார்ச்சத்து, சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றதாக உள்ளது. கண்களை பராமரிப்பதோடு, தோல் நோயில் இருந்து பாதுகாக்கிறது என்கிறார்கள்.

error: Content is protected !!