News November 26, 2024

செஸ் சாம்பியன்ஷிப்: 2வது ஆட்டம் டிரா

image

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் 2வது ஆட்டத்தை குகேஷ் டிரா செய்துள்ளார். நேற்று முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் டிங் லிரெனுடன் தோல்வியுற்ற நிலையில், இன்று டிரா செய்தார். மொத்தம் 14 போட்டிகளில் முதலில் 7.5 புள்ளிகளை எடுப்பவர்கள் உலக சாம்பியன் பட்டம் வெல்வார். இதுவரை டிங் லிரென் 1.5 புள்ளிகளும், குகேஷ் 0.5 புள்ளிகளும் பெற்றுள்ளனர்.

News November 26, 2024

BREAKING: 2 மாவட்டங்களில் நாளை விடுமுறை

image

கனமழையால் நாளை 2 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெங்கல் புயல் எதிரொலியால், கடலோர மாவட்ட மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

News November 26, 2024

அதானி விவகாரத்தை திசை திருப்பும் ராமதாஸ்: வைகோ

image

அதானி ஊழல் பிரச்னையை ராமதாஸ் திசைதிருப்ப முயற்சிக்கிறார் என்று வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார். அதானி விவகாரத்தில் மோடி தான் குற்றவாளிக் கூண்டில் நிற்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மோடி மீது குற்றம்சாட்ட வேண்டிய ராமதாஸ், முதல்வர் ஸ்டாலினை குற்றம் சுமத்துகிறார். பொய் வதந்திகளுக்கு எல்லாம் முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டியதில்லை எனவும் பதிலடிக் கொடுத்துள்ளார்.

News November 26, 2024

வேலைக்கு சேர்ந்த 1 மணி நேரத்தில் FIRED

image

வேலைக்கு சேர்ந்த 1 மணி நேரத்தில் ஒருவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். USAவில் இசை கருவிகளை விற்கும் நிறுவனத்தில் அவர் பணியில் சேர, அன்றைய தினம் மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 11 பேர் மட்டுமே சென்றதால் ஆத்திரமடைந்த CEO, மீட்டிங்கிற்கு வராத 100 பேரை டிஸ்மிஸ் செய்தார். இதனை சோஷியல் மீடியாவில் பகிர்ந்த அந்த புது ஊழியர், மீட்டிங் குறித்து தனக்கு தெரியாது என நொந்துகொண்டுள்ளார்.

News November 26, 2024

சின்னத்திரை நடிகருக்கு திருமணம்

image

சிறகடிக்க ஆசை தொடர் நாயகன் வெற்றி வசந்த்திற்கும், ராஜா ராணி-2 நாயகி வைஷ்ணவிக்கும் நாளை மறுநாள் (நவ.28) திருமணம் நடைபெற உள்ளது. இது தொடர்பான திருமண அழைப்பிதழை இருவரும் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர். திருமணத்திற்கு முன்னதாக நண்பர்கள் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் சின்னத்திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு புதுமண தம்பதியை வாழ்த்தினர்.

News November 26, 2024

JUST NOW: ரிசர்வ் வங்கி கவர்னர் டிஸ்சார்ஜ்

image

உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் டிஸ்சார்ஜ் ஆகி திரும்பினார். இன்று காலை அவருக்கு அசிடிட்டி பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து அவர் அப்போலோ ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். உடல்நலம் தேறியதையடுத்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகவும், தற்போது அவர் நன்றாக இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

News November 26, 2024

மல்லிகா சாகர் செய்த தவறால் பணத்தை இழந்த அணிகள்!

image

ஐபிஎல் ஏலத்தை முதல்முறையாக வழிநடத்திய மல்லிகா சாகர் செய்த சில தவறுகளால் அணிகள் பணத்தை இழந்துள்ளன. முதல் நாள் ஏலத்தில் ENG வீரர் ஜாஸ் பட்லருக்காக லக்னோ, ராஜஸ்தான், குஜராத் அணிகள் மோதிய போது 15 கோடி 50 லட்சத்திற்கு பதிலாக 15 கோடி 75 லட்சம் என கூறியதால் GT அணி 25 லட்சம் கூடுதலாக செலுத்தியது. அதைப்போல் அபிநவ் மனோகர் பெயர் ஏலத்திற்கு வந்த போதும் SRH அணி கூடுதலாக ரூ.20 லட்சம் செலுத்த நேரிட்டது.

News November 26, 2024

கிருஷ்ண தாஸ் கைது: கவலை தெரிவித்த EAM

image

இந்து துறவி கிருஷ்ண தாஸுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது கவலையளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்கான் அமைப்பு தலைவர் கிருஷ்ணதாஸ் நேற்று டாக்கா ஏர்போர்ட்டில் கைது செய்யப்பட்டார். இந்துக்களை போராட தூண்டியதாக கைதான நிலையில், அவருக்கு வங்கதேச நீதிமன்றம் ஜாமின் மறுத்துள்ளது. முன்னதாக இந்த கைது விவகாரத்தில் EAM ஜெய்சங்கர் தலையிட்டு தீர்வு காண திரிணாமுல் காங்., வலியுறுத்தியிருந்தது.

News November 26, 2024

ஓமன் நாட்டில் வேலை…. உடனே APPLY

image

TN அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஓமனில் FOUNDRY INDUSTRY BACKGROUND, எலக்ட்ரிகல் மெயின்டெனன்ஸ் வேலைக்கு ஆட்கள் தேவைப்படுவதாகக் கூறியுள்ளது. இதற்கு 10, 12, ஐடிஐ, டிப்ளமோ தேர்ச்சி, 2 ஆண்டு முன் அனுபவம் தேவை. மாத ஊதியம் ரூ.35,000- ரூ.40,000. உணவு, தங்குமிடம், விமான டிக்கெட் இலவசம். https://www.omcmanpower.tn.gov.in/இல் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News November 26, 2024

மாணவிகளிடம் ஆசிரியர்கள் அத்துமீறினால் அவளோதான்..

image

பள்ளி மாணவிகளிடம் அத்துமீறும் ஆசிரியர்களை உடனடியாக பணி நீக்கம் செய்ய தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பான சுற்றறிக்கையில், மாணவிகளிடம் ஒழுக்கக்கேடாக நடக்கும் ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்தாவதுடன், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எச்சரித்துள்ள அவர், இதுகுறித்து அனைத்து பள்ளி முதல்வர், தாளாளர், ஆசிரியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!