News November 26, 2024

முடிவெடுத்த சுக்கிரன்: 3 ராசிகளுக்கு பணமழை!

image

சுக்கிரன் தனுசு ராசியில் நுழைந்துள்ளதால் 3 ராசிகளுக்கு பண மழை கொட்டப் போகிறது. 1) தனுசு: இது அற்புதமான காலக்கட்டம். பணம் தேடி வரும். ஆளுமை திறன் அதிகரிக்கும். 2) மேஷம்: தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியாகும். அதிர்ஷ்டம் கூடவே பயணிக்கும். சபையில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும். 3) விருச்சிகம்: செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும். சுகபோகங்கள் தேடி வரும். வாழ்க்கை துணையின் ஆதரவு உண்டு.

News November 26, 2024

கடும் பதிலடி.. தீவிரவாத அமைப்புகளுக்கு மோடி WARNING

image

தீவிரவாத அமைப்புகளுக்கு PM மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் இன்று உச்சநீதிமன்ற வளாகத்தில் நடந்த அரசியலமைப்பு தினக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பேசிய அவர், மும்பையில் 2008இல் நவ.26இல் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை நினைவுகூர்ந்தார். இத்தினத்தை இந்தியா மறக்காது. இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத அமைப்புகளுக்கு கடும் பதிலடி தரப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.

News November 26, 2024

முன்பதிவு ரயில் டிக்கெட்டில் பயண தேதியை மாற்றும் வசதி

image

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது நாம் குறிப்பிடும் தேதியை, பிறகு OFFLINEல் மாற்றும் வசதி உள்ளது. இதுபோல் செய்வதற்கு, பயண நாளுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு டிக்கெட்டுடன் அருகிலுள்ள ரயில்நிலையம் சென்று நாம் விரும்பும் தேதியை குறிப்பிட்டு ஏற்கெனவே உள்ள தேதியை மாற்ற விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் இந்த வசதி இல்லை. ரத்து செய்யும் வசதியே உள்ளது. ஆனால் கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.

News November 26, 2024

கனமழை: தேர்வுகள் ரத்து

image

கனமழை எதிரொலியாக, திருச்சி பாரதிதாசன் மற்றும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை பருவ எழுத்து தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வுக்கான மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெறவிருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர், கட்டுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு, டிச.4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News November 26, 2024

இதை செய்யலைனா ரேஷன் அட்டைகள் ரத்தாகும்

image

போலி ரேஷன் அட்டைகளை களையெடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ஆதாரை ரேஷன் அட்டையுடன் இணைக்கும் KYC நடைமுறையை செயல்படுத்தி வருகிறது. அதன்படி, ஆதாரை ரேஷன் அட்டையுடன் டிச.31ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும். இல்லையேல் ரத்து செய்யப்படும் எனக் கூறியுள்ளது. ஏற்கெனவே 5.8 கோடி அட்டைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நீங்கள் இணைத்து விட்டீர்களா? கீழே பதிவிடுங்க.

News November 26, 2024

வி.கே. பாண்டியன் மனைவி லீவ் கடிதத்தை நிராகரித்தது ஒடிசா

image

ஒடிசா தேர்தலின்போது பெரும் விமர்சனத்துக்கு ஆளான தமிழர் வி.கே. பாண்டியனின் மனைவி சுஜாதாவின் விடுமுறை கடிதத்தை ஒடிசா பாஜக அரசு நிராகரித்து விட்டது. நாளையே அவரை பணியில் சேரும்படி அவருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலின்போது பிஜூ ஜனதா தளம் கட்சிக்கும், அப்போதைய முதல்வரான நவீன் பட்நாயக்கிற்கும் ஆதரவாக வி.கே. பாண்டியன் செயல்பட்டதாக பாஜக கடுமையாக விமர்சித்தது.

News November 26, 2024

மீண்டும் திரையில் ஒலிக்கும் ‘கண்மணி அன்போடு காதலன்…’

image

கமல் நடிப்பில் வெளியான ‘குணா’ படம் வருகின்ற 29ஆம் தேதி திரையங்குகளில் ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தான பாரதி இயக்கத்தில் நடிகர்கள் கமல், ஜனகராஜ் உள்ளிட்டப் பலர் நடிப்பில், 1991-ம் ஆண்டு குணா ‘வெளிவந்தது’. 33 ஆண்டுகள் கடந்த பின்னரும் படத்தையும், அதன் பாடல்களையும் இன்றைய தலைமுறையினர் கொண்டாடி வருகின்றனர். காலம் கடந்தும் மக்களின் உள்ளத்தை வென்ற குணா படத்தை பார்க்க ரெடியா?

News November 26, 2024

நாகை மாவட்டத்திற்கும் லீவு விட்டாச்சு

image

ஃபெங்கல் புயல் உருவாகவுள்ள நிலையில், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியானது. அதன் தொடர்ச்சியாக, தற்போது நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாணவர்கள் வெளியே செல்லாமல், பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

News November 26, 2024

ஐபிஎல் ஏலம்: மொத்தம் ₹639.15 கோடி

image

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலம் நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அதில் 10 அணிகளும் சேர்த்து மொத்தம் 182 வீரர்களை ஏலத்தில் எடுத்தனர். அந்த வீரர்களுக்காக மொத்தம் ₹639.15 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பண்ட் ₹27 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் மார்ச் 14 – ஏப்ரல் 25 வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது

News November 26, 2024

ICSE 10,12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை வெளியானது

image

ICSE பாடத் திட்ட 10 மற்றும் 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி, 10ஆம் வகுப்புக்கு 2025 பிப்ரவரி 18 முதல் மார்ச் 27 வரை தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு இறுதித் தேர்வு பிப்ரவரி 13 முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்புக்கு 2,53,384 பேரும், 12ஆம் வகுப்புக்கு 1,00,067 பேரும் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.

error: Content is protected !!