News October 20, 2024

“DOOR KNOCKING” என்றால் என்ன?

image

“DOOR KNOCKING” தொழில்நுட்பம் அல்லது “CANVASSING” என்பது தனிநபர்களை நேரில் சந்திப்பதாகும். இது தேர்தலின்போது மக்களை சந்திக்க அரசியல் கட்சிகள் பயன்படுத்தும் முறையாகும். ஆதரவாளர்களை கண்டுபிடிக்கவும், முடிவெடுக்காத வாக்காளர்களை ஈர்க்கவும் அரசியல் கட்சிகள் பயன்படுத்துகின்றன. குறிப்பாக, அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் “DOOR KNOCKING” தொழில்நுட்பத்தை பின்பற்றுகிறார்.

News October 20, 2024

மிஸ்டு கால் மூலம் EPF இருப்பை அறியும் வசதி

image

EPF இருப்பு நிதியை மிஸ்டு கால் மூலம் எளிதில் அறிய முடியும். இதற்கு நாம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குடன் நமது செல்போன் எண்ணை முதலில் இணைத்திருக்க வேண்டும். பிறகு அந்த எண்ணில் இருந்து 9966044425 என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும். அப்படி அழைக்கையில் அந்த அழைப்பு தானாக பாதியில் துண்டித்துவிடும். அப்படி துண்டிக்கப்பட்ட சில விநாடிகளில், அதே எண்ணுக்கு EPF இருப்பு குறித்த செய்தி வரும்.

News October 20, 2024

பாரம்பரியத்தை அழிக்க பாஜக முயற்சி: ராகுல் தாக்கு

image

பாரம்பரியத்தை அழிக்க பாஜக முயற்சிப்பதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பழங்குடியினரை ஆதிவாசிகள் என பாஜகவினர் அழைப்பதாகவும், இப்படி அழைத்து கொண்டே, அவர்களின் வாழ்க்கை முறை, வரலாறு, அறிவியலை அழிக்க முயற்சிக்கிறார்கள் என்று ராகுல் சாடினார். தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோரை மதிப்பதாக கூறும் மாேடி, அவர்களின் உரிமைகளை பறித்து விடுவதாகவும் விமர்சித்தார்.

News October 20, 2024

காலை 7 மணி வரை 24 மாவட்டங்களில் மழை

image

இன்று (அக்.20) காலை 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள 24 மாவட்டங்களை IMD வெளியிட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, திருச்சி, கரூர், பெரம்பலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கணித்துள்ளது.

News October 20, 2024

அக்.20: வரலாற்றில் இன்று

image

1469: சீக்கிய மதத்தை தோற்றுவித்த மத குரு குருநானக் பிறந்தார்
1978: முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீரேந்திர சேவாக் பிறந்தார்.
1982: இலங்கையில் முதன்முதலில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது
2008: திரைப்பட இயக்குநர் சி.வி. ஸ்ரீதர் காலமானார்
➢உலக புள்ளியியல் தினம்

News October 20, 2024

அதிக எடை, உடல் பருமன்… என்ன வித்தியாசம்?

image

உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, அதிக எடை என்பது கொழுப்பு அதிகம் இருப்பதாகும். உடல் பருமன் என்பது கிரோனிக் காம்ப்ளக்ஸ் நோயாகும். உடல்நலனை பாதிக்கும் அளவுக்கு கொழுப்பு சேர்ந்திருப்பது ஆகும். உடல் எடை தொடர்பான புள்ளி விவரங்களின்படி, 25 கி – 29.09 கி. வரை உடல் எடை கொண்டவர்கள், அதிக எடை கொண்டவர்கள் ஆவர். 30.0 கிலோ அல்லது அதற்கு அதிக எடை உடையவர்கள் உடல் பருமன் உடையோர் ஆவர்.

News October 20, 2024

இன்றே கடைசி: ரயில்வேயில் 3,445 வேலை

image

ரயில்வேயில் காலியாக உள்ள 3,445 இடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். டிக்கெட் கிளார்க், அக்கவுண்ட் கிளார்க், ஜூனியர் கிளார்க், டிரைன்ஸ் கிளார்க் ஆகிய பதவிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டிருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு செப்.21ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இது இன்றுடன் முடிகிறது. விருப்பமுள்ளோர் ரயில்வே ஆட்தேர்வு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE IT

News October 20, 2024

இன்று, நாளை, 24ஆம் தேதி கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தில் இன்று, நாளை, 24ஆம் தேதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அது எந்தெந்த மாவட்டங்கள் என பார்க்கலாம் *இன்று: தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் *நாளை: கோவை, திருப்பூர், திண்டுக்கல், நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், பெரம்பலூர் *24ஆம் தேதி: சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை.

News October 20, 2024

₹2 கோடிக்கு புல்லட் புரூப் கார் வாங்கிய சல்மான் கான்

image

பாலிவுட் நடிகர் சல்மான் கான், ₹2 கோடிக்கு புல்லட் புரூப் கார் வாங்கியுள்ளார். நிழல் உலக தாதா பிஸ்னோய் கும்பலிடம் இருந்து தொடர்ந்து அவருக்கு கொலை மிரட்டல் வந்தபடி உள்ளது. இதையடுத்து, பாதுகாப்புக்காக குண்டு துளைக்காத புல்லட் புரூப் காரை ₹2 கோடிக்கு நிசான் நிறுவனத்திடம் இருந்து வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும், 10 கமாண்டோ வீரர்கள் உள்ளிட்டாேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

News October 20, 2024

இதுவா திமுகவின் புதிய சமூகநீதி? ராமதாஸ் காட்டம்

image

இதுவா திமுகவின் புதிய சமூகநீதி? என டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். 10 ஆண்டுகள் பணி செய்த தற்காலிக, ஒப்பந்தப் பணியாளர்கள் பணி நிலைப்பு வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக வாக்குறுதி அளித்திருந்ததாக கூறியுள்ளார். ஆனால், நிரந்தரப்பணி கேட்பார்கள் என்பதற்காக கொசு ஒழிப்புப் பணியாளர்களுக்கு வேலை வழங்கக்கூடாது என்பது எத்தகைய மனநிலை? இதுகுறித்து ஸ்டாலின் விளக்கமளிக்க வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!