News October 21, 2024

Health Tips: கேரட்டில் இருக்கும் நன்மைகள்

image

கேன்சரை தடுப்பதிலும், கண்களை ஆரோக்யமாக வைத்திருப்பதிலும் கேரட் முக்கிய பங்கு வகிப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். கேரட்டில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்ட்ஸ் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ஈறுகள், பற்கள், சரும ஆரோக்யத்திற்கு இதில் இருக்கும் வைட்டமின் சி உதவுகிறது. கேரட்டில் இயற்கை சர்க்கரை அதிகமாக இருந்தாலும், அவை நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

News October 21, 2024

இந்த வாரம் OTT ரிலீசாகும் படங்கள்

image

வருகிற 25ஆம் தேதி 2 தமிழ் படங்களும், 1 வெப் தொடரும் OTT-யில் வெளியாக உள்ளன. பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி நடித்த ‘மெய்யழகன்’ திரைப்படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ரிலீசாக உள்ளது. ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி இயக்கி, நடித்த ‘கடைசி உலகப் போர்’ அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. ‘மர்மதேசம்’ இயக்குநர் நாகா இயக்கியுள்ள ‘ஐந்தாம் வேதம்’ வெப் தொடர் ZEE5 தளத்தில் ரிலீசாக உள்ளது.

News October 21, 2024

மர்ம நோயால் 17 குழந்தைகள் உயிரிழப்பு

image

ராஜஸ்தானில் மர்ம நோய் தாக்கி கடந்த 30 நாள்களில் 17 குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று 2 வயது ஆண்குழந்தை பலியாகியுள்ளது. காய்ச்சல், இருமல் என நோய்வாய்ப்பட்ட 3 நாள்களுக்குள் குழந்தை உயிரிழந்துள்ளது. பருவகால நோய்கள் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து தீவிரமாக ஆராய்ந்து வருவதாகவும் கூறியுள்ளது.

News October 21, 2024

சீமான் போலி அரசியல்வாதி: சிவசங்கர்

image

NTK ஆட்சியில் புதிய தமிழ்த்தாய் வாழ்த்து கொண்டுவரப்படும் என சீமான் பேசியதற்கு அமைச்சர் சிவசங்கர் எதிர்வினையாற்றியுள்ளார். சீமான் வெறும் போலி அரசியல்வாதி, அவரை மக்கள் புறம் தள்ளுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார். மேலும், தமிழ்த்தாய் வாழ்த்து பற்றி பண்பாடு தெரிந்தவர்களுக்குத்தான் புரியும் எனவும், சீமான் போன்றவர்கள் எதையாவது ஒன்றை பரபரப்பு செய்திகளுக்காக பேசுவார்கள் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

News October 21, 2024

ஆபிரகாம் லிங்கன் பொன்மொழிகள்

image

*எதிர்காலத்தைக் கணிப்பதற்கான மிகவும் நம்பகமான வழி அதை உருவாக்குவதுதான். *மேகத்தின் பின்னால் இருந்தாலும், சூரியன் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. *எதிரியை அழிக்க சிறந்த வழி அவரை நண்பராக்குவதுதான். *அறிவு முடிவடையும் இடத்தில் வன்முறை தொடங்குகிறது. *சிலர் மிகப் பெரிய வெற்றிகளை அடைகிறார்கள், மற்றவர்களும் அதை அடைய முடியும் என்பதற்கு இதுவே சான்று. *உதவி செய்ய இதயம் இருப்பவனுக்கே, விமர்சிக்க உரிமை உண்டு.

News October 21, 2024

மாலத்தீவில் அறிமுகமாகிறது UPI வசதி

image

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, அந்நாட்டில் UPI வசதியை அறிமுகப்படுத்த உள்ளார். இது குறித்து நேற்றைய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக வங்கிகள், தொலைதொடர்பு நிறுவனங்களை உள்ளடக்கி புதிய கூட்டமைப்பை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் அதிபர் முய்சு இந்தியா வந்தபோது, மாலத்தீவில் UPI வசதியை நடைமுறைப்படுத்த நமது அரசு உதவுவதாக உறுதியளித்தது.

News October 21, 2024

ஸ்ரேயா கோஷலின் போராட்ட பாடல்

image

கொல்கத்தா பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் போராட்டத்தில், பிண்ணனி பாடகி ஸ்ரேயா கோஷல் இணைந்துள்ளார். கொல்கத்தாவில் நடந்த நிகழ்ச்சியில், நாட்டில் பெண்கள் மீதான வன்முறை அதிகரித்துள்ளதை கண்டித்து புதிய பாடலை அவர் பாடினார். பாடலின் ஆழமான அர்த்தத்தை ரசிகர்கள் புரிந்து கொள்ளும்படியும் கேட்டுக் கொண்டார். TMC நிர்வாகி குணால் கோஷ் இதை வரவேற்றுள்ளார்.

News October 21, 2024

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: அன்புடைமை. ▶குறள் எண்: 73 ▶குறள்: அன்போடு இயைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போடு இயைந்த தொடர்பு. ▶பொருள்: உயிரும் உடலும்போல் அன்பும் செயலும் இணைந்திருப்பதே உயர்ந்த பொருத்தமாகும்.

News October 21, 2024

தோனிக்கு ₹4 கோடி.. ருதுராஜ், ஜடேஜாவுக்கு ₹18 கோடியா..?

image

ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜாவுக்கு ₹18 கோடி ஒப்பந்தம் கொடுத்து CSK நிர்வாகம் ரீடெய்ன் செய்ய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பதிரானா ₹14, ஷிவம் துபே ₹11 கோடிக்கும் தக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தோனியை ₹4 கோடிக்கு ரீடெய்ன் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், தோனி இதுவரை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தாததால் இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது.

News October 21, 2024

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி உலகிற்கு பாடம்: ரோமர்

image

இந்தியாவின் டிஜிட்டல் புரட்சி உலக நாடுகளுக்கு பாடமாக அமைந்துள்ளதாக நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் மைக்கேல் ரோமர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் முயற்சியால் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் பயனடைந்ததாகவும், இது மற்ற நாடுகளை விட வேறுபட்ட முயற்சி எனவும் அவர் பாராட்டியுள்ளார். மேலும், இந்தியாவின் இந்த வெற்றி தனித்துவம் வாய்ந்தது எனவும், புது Benchmark-ஐ செட் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!