News October 21, 2024

இந்த மாவட்டங்களில் மிக கனமழை அலர்ட்

image

20 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை கனமழைக்கான எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது. விழுப்புரம், கடலூர், தருமபுரி, சேலம், பெரம்பலூர், நாமக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, நீலகிரி, மயிலாடுதுறையில் மிக கனமழையும் (Orange Alert), காஞ்சி, செங்கல்பட்டு, தி.மலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களில் கனமழையும் (Yellow Alert) பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

News October 21, 2024

BBC Documentary தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

image

மோடி தொடர்பாக BBC வெளியிட்ட “India: The Modi Question” documentaryக்கு மத்திய அரசு தடைவிதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை ஜனவரி 2025க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு, மத்திய அரசின் எதிர் பிரமாணப் பத்திரம் இன்னும் பதிவு செய்யப்படாததால் வழக்கை ஒத்திவைப்பதாகத் தெரிவித்துள்ளது.

News October 21, 2024

ஆப்ஸ் 4U: வேலை தேட உதவும் லிங்க்ட் இன் (linkedin)

image

நீங்கள் ஒரு புரபஷனலோ, புதிதாக வேலை தேடுபவரோ, நல்ல சம்பளத்தில் புது வேலைகளை தேடவும், Job trends அறியவும் linkedin சிறந்த தளம். பெரிய கம்பெனிகளின் HR-கள், வேலை வாய்ப்புகளை இதில் பகிர்கிறார்கள். உங்கள் education, skills, experience போன்ற தகவல்களுடன், இதில் ஒரு profile-ஐ உருவாக்கி, உங்கள் துறைசார்ந்த மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். உங்கள் Skills-ஐ வளர்த்துக்கொள்ளவும் பல்வேறு அம்சங்கள் இதில் உள்ளன.

News October 21, 2024

சாலை விபத்தில் தமிழகத்திற்கு முதல் 2 இடம்

image

நாடு முழுவதும் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகளில் தமிழகம் 2ஆவது இடத்தில் உள்ளது. இதுதொடர்பான தகவலில், உ.பியில் 23,652 பேரும், தமிழகத்தில் 18,347 பேரும், மகாராஷ்டிராவில் 15,366 பேரும் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். அதேபோல, சாலை விபத்துகளால் காயமடைந்தவர்கள் பட்டியலில் தமிழகம் (72,292), ம.பி., கேரளா மாநிலங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன.

News October 21, 2024

வெற்றிபெற ஃபிட்னெஸ் மட்டும் போதாது

image

தொடர் தோல்விகளால் துவண்ட பாக்., செய்த சில மாற்றங்களே, 2வது டெஸ்டில் இங்கிலாந்தை வெல்ல உதவியது. பாபர் அசாம், அஃப்ரிதி, நசீம் ஷா என ஸ்டார் பிளேயர்களை கழற்றிவிட்ட பாக்., வாரியம், மைதானத்தை சுழற்பந்துக்கு சாதகமாக மாற்றியது. ஆனால், ஸ்பின்னர்களான சஜித் கான், நோமன் அலி இருவரும் 2 km-ஐ 8 நிமிடத்தில் ஓடமுடியாமல் fitness test-ல் ஃபெயிலானவர்கள். இருந்தும் அணி நம்பிக்கை வைக்க, இருவரும் 20 Wkts அள்ளினர்.

News October 21, 2024

விடுமுறை குறித்து அரசு அதிகாரப்பூர்வ செய்தி

image

தீபாவளிக்கு மறுநாள் (நவ.1) வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டது. தற்போது, விடுமுறைக்கான அதிகாரப்பூர்வ அரசாணையை அரசு வெளியிட்டுள்ளது. நவ.1ஆம் தேதி அனைத்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து, இதனை ஈடு செய்யும் வகையில் நவ.9ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது . மேலும், தீபாவளிக்கு முந்தைய நாள் (அக்.30) விடுமுறை அளிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

News October 21, 2024

பிரேசில் அதிபருக்கு மூளையில் ரத்தக்கசிவு

image

பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வீட்டில் கீழே விழுந்ததில், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் கீழே விழுந்தபோது, பின் தலையில் பலமாக அடிபட்டதால், மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

News October 21, 2024

ரீ-ரீலீஸில் கலக்கிய VTV திரைப்படம்

image

காதலிப்பவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்களின் பட்டியலில் விண்ணைத் தாண்டி வருவாயா நிச்சயமாக இருக்கும். திரைக்கு வந்த 14 ஆண்டுகளில் ஒவ்வொரு காதலர் நாளன்றும் சிறப்பு திரையிடலைக் கண்டு வருகிறது. இந்நிலையில், சென்னை பி.விஆர் வி.ஆர் திரையில் 142 வாரங்களில் ஒரு காட்சி என இப்படம் 1,000வது நாளைக் கொண்டாடுகிறது. இந்தியளவில் ரீ-ரிலீஸில் அதிக நாள்களைக் கடந்த திரைப்படம் என்கிற சாதனையை VTV படைத்துள்ளது.

News October 21, 2024

காவல்துறையினருக்கு வீரவணக்கம் செலுத்துவோம்!

image

1959 அக். 21ஆம் தேதி, லடாக்கில் சீனப் படை மறைந்திருந்து, திடீர் தாக்குதல் நடத்தியது. அவர்களை வீர தீரத்துடன் எதிர்கொண்ட மத்திய பாதுகாப்பு படையைச் சேர்ந்த 10 காவலர்கள், ராணுவத்தினர் களத்திற்கு வரும்வரை உயிரை துச்சமென நினைத்து போராடி முடிவில் வீர மரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதலில் தியாகிகளான அவர்களை நினைவுகூரும் வகையில், நாடு முழுவதும் ஆண்டுதோறும் அக். 21இல் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது.

News October 21, 2024

இன்றே கடைசி: 10th முடித்தவர்களுக்கு வேலை

image

NABARD வங்கியில் குரூப் சி பிரிவில் காலியாக உள்ள 108 அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க இன்றே (அக்.21) கடைசி நாளாகும். இதற்கு பத்தாம் வகுப்பு முடித்த 18 – 30 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு ஊதியமாக மாதம் ₹35,000 வழங்கப்படும். ஆன்லைனில் விண்ணப்பிக்க மற்றும் கூடுதல் தகவல்களுக்கு <>www.nabard.org<<>> என்ற இணையதளத்தை அணுகவும்.

error: Content is protected !!