News October 22, 2024

இந்த ரயில் நிலையம் செல்ல விசா, பாஸ்போர்ட் அவசியம்

image

ரயில் நிலையத்திற்குள் செல்ல டிக்கெட், பிளாட்பார்ம் டிக்கெட் மட்டுமே எடுக்க வேண்டும் என்பது அனைவரும் தெரிந்ததே. ஆனால் பஞ்சாப்பின் அமிர்தசரஸ் மாவட்டம் அட்டாரியில் உள்ள சியாம் சிங் ரயில் நிலையத்துக்கு செல்ல விசா, பாஸ்போர்ட் கட்டாயமாகும். பாதுகாப்பு கெடுபிடிகள் உள்ள இந்தியா-பாக். எல்லையில் உள்ள கடைசி ரயில் நிலையம் என்பதாலும், அவ்வழியே பாக்.கிற்கு ரயில் இயக்கப்பட்டதுமே இதற்கு காரணமாகும்.

News October 22, 2024

ஏ.ஆர். ரகுமானை விஞ்சிய அனிருத்

image

ஜெயிலர் உள்ளிட்ட பல தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், தெலுங்கு படங்களுக்கும் இசையமைக்கிறார். அதன்படி, தெலுங்கு படங்களுக்கு இசையமைக்க தற்போது அவர் ₹20 கோடி கேட்பதாகவும், இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் எனும் பெயரை பெற்றிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஏஆர் ரகுமான் ₹10 கோடி-₹12 கோடி வாங்குவதாக கூறப்படுகிறது.

News October 22, 2024

39,481 மத்திய அரசு வேலை: NEW அப்டேட்

image

பிஎஸ்எப், சிஐஎஸ்எப், சிஆர்பிஎப், எஸ்எஸ்பி உள்ளிட்ட மத்தியப் படைகளில் காலியாக இருந்த 39,481 இடங்களுக்கான விண்ணப்பப்பதிவு செப்.5ஆம் தேதி தொடங்கி இந்த மாதம் 14ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதுபோல் விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்கையில் ஏதேனும் தவறு இழைத்திருப்பின், அதில் ssc.gov.inஇல் திருத்தம் செய்ய நவ.5-7 வரை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

News October 22, 2024

விஜய் மாநாட்டுக்காக அதிமுக நிகழ்ச்சி ஒத்திவைப்பு?

image

அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் தொழிற்சங்க நிர்வாகிகளுக்கு ரூ.1.72 கோடி நிதியுதவி அளிக்கும் நிகழ்ச்சி அக்.17இல் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வடகிழக்கு பருவமழை காரணமாக அக்.27இல் நடத்த இபிஎஸ் முடிவு செய்தாராம். ஆனால், விஜய்யின் தவெக கட்சி மாநாடு அக்.27இல் நடைபெறுவதால் அதிமுக நிகழ்ச்சியை அன்று நடத்தாமல் அக்.29க்கு இபிஎஸ் தள்ளி வைத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

News October 22, 2024

அக்.22: வரலாற்றில் இன்று

image

* 1998: பாலிவுட் நடிகர் அஜித் கான் மறைந்தார்
* தெலுங்கு நடிகர் ராம கிருஷ்ணா காலமானார்
*2008: நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக இந்தியா, சந்திராயன்-1 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியது
* 2016: இந்தியா கபடி உலகக் கோப்பையை வென்றது
* சர்வதேச ஸ்டன்டிங் அவர்னெஸ் நாள்.

News October 22, 2024

இந்தியா இல்லையெனில், அது USELESS: ஜெர்மன் தூதர்

image

இந்தியா இல்லையெனில், பருவநிலை மாற்றத்துக்கு எதிரான நடவடிக்கையில் எந்த பயனுமில்லை என்று ஜெர்மன் தூதர் பிலிப் ஆக்கர்மேன் தெரிவித்துள்ளார். இந்தியா மிக அதிக மக்கள் தொகை நாடென்றும், ஆதலால் இந்தியா இல்லாமல் பருவநிலை மாற்றத்துக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கையில் எந்த பயனுமிருக்காது என்று அவர் கூறியுள்ளார். ஜெர்மன் தூதர் கூறியிருப்பது குறித்து உங்கள் கருத்து என்ன? கீழே பதிவிடுங்க

News October 22, 2024

சச்சின் சாெத்து மதிப்பு ₹1,400 கோடியா?

image

சச்சின் சாெத்து மதிப்பு ₹1,400 கோடி எனத் தகவல் வெளியாகியுள்ளது. 2020இல் சச்சின் சொத்து மதிப்பு ₹835 கோடி. அது 4 ஆண்டுகளில் ₹1,400 கோடியாக அதிகரித்துள்ளது என்று கூறப்படுகிறது. தோனி (₹1,050 கோடி), ரோஹித்தை ( ₹214 கோடி) விட சச்சின் சொத்து மதிப்பு அதிகம் எனவும், விளம்பர வருவாயே இதற்கு காரணம் எனவும் கூறப்படுகிறது. அரச குடும்ப வாரிசானதால் ஜடேஜாவுக்கு ₹1,450 கோடி சொத்து உள்ளது.

News October 22, 2024

தமிழக எம்பிக்களுக்கு வீடு ஒதுக்கப்படவில்லை?

image

தமிழகத்தில் இருந்து மக்களவைக்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட சில எம்பிக்களுக்கு இன்னும் வீடு ஒதுக்கப்படவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தேர்தல் முடிந்து 100 நாள்களை கடந்து விட்டபோதிலும், புதிய எம்பிக்களுக்கு நாடாளுமன்ற அலுவலகத்தால் வீடு ஒதுக்கப்படவில்லை என்றும், இதனால் டெல்லியில் வாடகை கொடுத்து தங்க வேண்டிய நிலையில் அவர்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

News October 22, 2024

15 மாவட்டங்களில் காலை 7 மணி வரை மழை

image

இன்று (அக்.22) காலை 7 மணி வரை 15 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக IMD குறிப்பிட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், திருப்பூர், தேனி, நாமக்கல், சேலம், ஈரோடு, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகையில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் கணித்துள்ளது. SHARE IT

News October 22, 2024

66 சதம்.. லாரா சாதனையை சமன் செய்த புஜாரா

image

முதல் தர கிரிக்கெட்டில் 66வது சதம் விளாசி லாரா சாதனையை புஜாரா சமன் செய்தார். ரஞ்சி போட்டியில் சவுராஷ்ட்ரா, சத்தீஸ்கர் அணிகள் விளையாடின. இதில் சவுராஷ்ட்ரா வீரர் புஜாரா 197 பந்தில், ரஞ்சியில் 25ஆவது சதத்தை விளாசினார். முதல்தர கிரிக்கெட்டில் 21,000 ரன்களையும் கடந்தார். இதன்மூலம் அதிக ரன்குவித்தோர் பட்டியலில் கவாஸ்கர், சச்சின், டிராவிட்டுக்கு அடுத்து 4ஆவது வீரராக புஜாரா இடம்பிடித்தார்.

error: Content is protected !!