India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய அக்டோபர் 29 கடைசி தேதியாகும். வேட்பு மனுக்கள் அக். 30ஆம் தேதி பரிசீலிக்கப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெற நவ. 4ஆம் தேதி கடைசி நாள். 288 தொகுதிகளை கொண்ட இம்மாநிலத்தில் நவ. 20ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இம்மாநிலத்தில் 9.63 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடப்பெற்ற தலம் என்ற புகழைக் கொண்டது காஞ்சி குமரகோட்டம் நாக கந்தர் திருக்கோயில். வேறெங்கும் காணமுடியாத 5 தலை நாகம் குடை பிடிக்க, ருத்ராட்ச மாலை & கமண்டலம் ஏந்தி, ஊரு அபய முத்திரையோடு நாகசுப்ரமணியர் அருள்பாலிக்கும் தலமிது.விரதமிருந்து 7 வாரம் (செவ்வாய்) இங்கு சென்று முருகருக்கு கடம்ப மலர் மாலை சாற்றி, நெய் விளக்கிட்டு வணங்கிச் சென்றால், நாக தோஷம் விலகும் என்பது ஐதீகம்.
கனமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதேபோல், நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், திருச்சி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் முன்னறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பருவ மாற்றம் காரணமாக ஏற்படும் தீவிர வாதக் காய்ச்சல், இருமல், மூக்கடைப்பு, சளி, தலைவலி, உடல்வலி போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் பெருந்தும்பை தேநீரைப் பருகலாம் என சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். மிளகு, மஞ்சள், கிராம்பு, ஏலம், பெருந்தும்பை இலை (3) சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, பனங்கற்கண்டு சேர்த்தால் மணமிக்க சுவையான பெருந்தும்பை தேநீர் ரெடி. இந்த டீயை பகலில் மட்டுமே பருக வேண்டும்.
“மெதக்குது காலு ரெண்டும்…” என்ற பாடலுக்கான அழைப்பிதழை ‘பிரதர்’ படக்குழு வெளியிட்டுள்ளது. ராஜேஷ் இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் உருவாகும் இப்படத்தில் பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், பூமிகா, விடிவி கணேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் “மக்காமிஷி…” ஹிட்டான நிலையில், 2ஆவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என பத்திரிகை வடிவில் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் காலை 10 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. ராமநாதபுரம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், சேலம், ஈரோடு, கரூர், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. இதனால், பள்ளி, கல்லூரி, அலுவலகம் செல்வோர் முன்னெச்சரிக்கையாக குடை எடுத்துச்செல்லுங்கள்.
செவ்வாய்க்கிழமை முருகப் பெருமானுக்கு உகந்த நாள் என்று ஆன்மிகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து முருகனை வழிபட்டால் கடன் பிரச்னை தீரும் என்றும், செல்வம் பெருகும் என்றும் கூறப்பட்டுள்ளது. செவ்வாய் தோறும் 9 வாரங்கள் விரதம் இருந்து முருகன் காேயிலுக்கு சென்று வழிபட்டால் செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் நீங்கிவிடும் என்றும் கூறப்படுகிறது. SHARE IT
தமிழகத்தில் 2 ‘அம்ரித் பாரத்’ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. AC இல்லாத முன்பதிவு மற்றும் பொதுப் பெட்டிகளுடன் கூடிய அம்ரித் ரயில்கள் ஜனவரி மாதம் அறிமுகமானது. டிசம்பருக்குள் 26 புதிய ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன. இந்நிலையில், நெல்லை – ஷாலிமர், தாம்பரம் – சந்திரகாசி என 2 வழித்தடங்களில் இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து வடமாநிலங்களுக்கு பயணிப்போருக்கு சந்திரகாசி பயனுள்ளதாக இருக்கும்.
4ஜி சேவையில் இருந்து 5ஜி சேவைக்கு வாடிக்கையாளர்களை மாற்ற ஜியோ சலுகைகளை அள்ளி வீசி வருகிறது. அதில் ஒன்றாக, 30 நாள்கள் வேலிடிட்டி கொண்ட ₹319 கட்டணத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே இருந்த 28 நாள் வேலிடிட்டி திட்டத்துக்கு மாறாக 2 நாள் கூடுதல் வேலிடிட்டி சேர்த்து ஜியோ வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தில் வரம்பற்ற கால், தினமும் 1.5ஜிபி 5ஜி டேட்டா, தினமும் 100 SMS உள்ளிட்டவற்றை அளிக்கிறது.
சூர்யாவை வைத்து ஆர்.ஜே. பாலாஜி புதிய திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யிடம் ஒரு வருடத்துக்கு முன்பே ஆர்.ஜே. பாலாஜி கதை ஒன்று சொல்லி ஒகே வாங்கி வைத்திருந்ததாகவும், அக்கதையைதான் சூர்யாவை வைத்து ஆர்.ஜே. பாலாஜி இயக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஜய்யிடம் கூறிய கதை என்பதால் முழுக்க முழுக்க ஆக்சன் நிறைந்த கதையாக இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.