India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிர CMஆக வேண்டும் என்ற விருப்பத்தை முன்னாள் CM ஏக்நாத் ஷிண்டே சூசகமாக வெளிப்படுத்தியுள்ளார். மகாராஷ்டிர மக்கள், தாம் CMஆக வேண்டும் என விரும்புவதாக அவர் கூறியுள்ளார். மகாராஷ்டிர புதிய CM-ஐ தேர்வு செய்ய பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இதன்முடிவில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்படலாம் எனக் கூறப்படுகிறது. பாஜக முடிவை தாம் ஆதரிப்பேன் எனவும் ஷிண்டேவும் கூறியுள்ளார்.
அதானி விவகாரம், மணிப்பூர் கலவரம், வக்ஃப் வாரிய மசோதா குறித்து விவாதிக்கக் கோரி இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். அத்துடன், தமிழக வெள்ள பாதிப்பு குறித்து அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்து விவாதிக்கக் கோரி திமுக எம்.பிக்கள் முழக்கம் எழுப்பினர். தொடர் அமளியில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்ய சபாநாயகர் முயன்றும் தோல்வியடைந்ததால், இன்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
நியூசி.க்கு எதிரான போட்டியில், இங்கி. 104 ரன்களை 12.1 ஓவரில் சேஸ் செய்துள்ளது. 147 ஆண்டு வரலாற்றில் டெஸ்டில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட ரன் சேஸ் செய்யும் போது, ரன் ரேட்டை 8ல் வைத்திருந்த முதல் அணி என்ற பெருமையை இங்கி. பெற்றுள்ளது. முதல் இன்னிங்ஸில் நியூசி. 348 ரன்களும், இங்கி. 499 ரன்களும் குவித்தன. 2வது இன்னிங்ஸில் நியூசி. 254 ரன்னில் அவுட்டாக, 103 ரன்களை இங்கி. சேசிங் செய்துள்ளது.
பெரியார் சிலை உடைப்பு குறித்த கருத்து மற்றும் திமுக எம்பி கனிமொழி பற்றி விமர்சித்த வழக்குகளில் பாஜக தேசிய செயலாளர் H.ராஜாவுக்கு வழங்கப்பட்ட ஒரு வருட சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டு வழக்குகளிலும் தலா 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய ஏதுவாக தண்டனையை நிறுத்தி வைத்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கன்னட சீரியல் நடிகை ஷோபிதாவின் suicide note போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில், “சாக வேண்டுமானால் சாகலாம்” என எழுதப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. ஷோபிதாவின் மரணத்திற்கு மனஅழுத்தம் காரணமா? அல்லது நடிப்பிலிருந்து விலகியதா? கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நேற்று, தனது வீட்டில் ஷோபிதா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தமிழக சட்டப்பேரவை டிசம்பர் 9 மற்றும் 10 என இரண்டு நாள்கள் நடைபெறும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இன்று காலை தலைமை செயலகத்தில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது. மதுரை டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக அரசு தீர்மானம் கொண்டுவரும் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்தும் சட்டப்பேரவையில் விவாதிக்கப்படவுள்ளது.
ஆஸ்திரேலியாவின் ஜாம்பவான் ஐயன் ரெட்பாத்(83) காலமானார். 1964 – 1976 வரை ஆஸ்திரேலியா அணிக்காக விளையாடியவர், தொடக்க ஆட்டக்காரராக 66 டெஸ்ட் போட்டியிலும், 5 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். 1969-70ல் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 32 ரன்களை விளாசி ஒரு ஓவரில் அதிக ரன்களை அடித்த ஆஸ்திரேலிய வீரர் என்ற பெருமையை தற்போதும் தக்கவைத்து கொண்டுள்ளார்.
ஜாமின் பெற்ற மறுநாளே செந்தில் பாலாஜி அமைச்சராகிறார் என்றால் என்ன நடக்கிறது என SC ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளது. அவரது ஜாமினை ரத்து செய்யக் கோரி வித்யா குமார் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மோசடி வழக்கில் சிக்கியவர் அமைச்சராக இருந்தால், எப்படி அவருக்கு எதிராக வாக்குமூலம் அளிப்பார்கள் எனக் கேள்வி எழுப்பியதோடு, சாட்சிகளுக்கு அழுத்தம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாகக் கருத்து தெரிவித்துள்ளனர்.
சீன போர்க் கப்பல்கள் நடமாட்டத்தை இந்தியா உன்னிப்பாக கண்காணிப்பதாக கடற்படை தளபதி கே. திரிபாதி தெரிவித்துள்ளார். ஒடிஷாவில் நடைபெறும் கடற்படை மாநாட்டில் பேசிய அவர், இந்திய பெருங்கடலில் சீனப் போர்க்கப்பல்கள், ஆய்வுக் கப்பல்கள் நடமாட்டத்தை இந்தியா கவனித்து வருவதாகக் கூறினார். அதேபோல், மற்ற நாடுகளின் போர்க் கப்பல்கள் நடமாட்டமும் கடற்படையால் கண்காணிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழின் சூப்பர் ஸ்டார் ரஜினி, இளம் இயக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். கார்த்திக் சுப்பராஜ், நெல்சன், லோகேஷ் கனகராஜ் என பட்டியல் நீள்கிறது. அந்த வரிசையில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. ரஜினி – மாரி காம்பினேஷன் எப்படியிருக்கும்?
Sorry, no posts matched your criteria.