News October 22, 2024

கூலித் தொழிலாளிக்கு ₹2.39 கோடி GST வரி..!

image

திருப்பத்தூரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ராணிபாபு (58), ஏழு நாள்களுக்குள் ₹2.39 கோடி GST கட்ட வேண்டும் என நோட்டீஸ் வந்ததால் அதிர்ச்சியடைந்துள்ளார். இது குறித்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். ராணியின் பான் கார்டு, ஆதார் கார்டுகளைக் கொண்டு திருச்சியில் ஒரு நிறுவனம் பதிவு செய்யப்பட்டுள்ளதும், அதன் உரிமையாளர் ராணி எனக் குறிப்பிட்டதுமே இந்த நோட்டீஸ் வரக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

News October 22, 2024

ரயில் பயணிகளே ALERT: முக்கிய ரயில்கள் ரத்து

image

டானா புயல் எதிரொலியாக தமிழ்நாட்டிற்கு வரும் 7 ரயில்கள் உட்பட 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. நாளை மறுநாள் காரக்பூரில் இருந்து விழுப்புரம் வரும் அதிவிரைவு ரயில், நாளை மறுநாள் சென்ட்ரல் வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், நாளை மறுநாள் திருச்சியில் இருந்து ஹவுரா செல்லும் அதிவிரைவு ரயில் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த ரயில்களில் முன்பதிவு செய்தவர்கள் மாற்று ஏற்பாடு செய்துக் கொள்ளவும்.

News October 22, 2024

சபாநாயகர் அப்பாவு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

image

சபாநாயகர் அப்பாவு மீதான வழக்கின் தீர்ப்பை சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஜெ., மறைவுக்கு பிறகு 40 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் திமுகவில் இணைய தயாராக இருந்ததாக அப்பாவு பேசியிருந்தார். இதனையடுத்து, அவருக்கு எதிராக அதிமுகவின் பாபு முருகவேல் அவதூறு வழக்குத் தொடுத்தார். இவ்வழக்கை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News October 22, 2024

ஆளுநர் நிகழ்ச்சியை புறக்கணித்த அமைச்சர்

image

மதுரையில் ஆளுநர் பங்கேற்ற காமராஜர் பல்கலை. பட்டமளிப்பு விழாவை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்துள்ளார். பல்கலை.யின் 56ஆவது பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் பங்கேற்கவில்லை. தமிழ்த்தாய் வாழ்த்து முரண்பாடுகளால் ஆளுநர் நிகழ்ச்சியை அவர் புறக்கணித்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

News October 22, 2024

நானே நேரில் வருகிறேன் : ஸ்டாலின்

image

நவம்பர் முதல் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நானே நேரில் சென்று அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வேன்; அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றுவேன் என CM ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளுக்கு பின் அனைத்து மாவட்டங்களும் வளர்ந்திருக்கும் எனக் கூறிய அவர், 2021 தேர்தலை விட மக்களவைத் தேர்தலில் திமுகவின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இது வரும் 2026 தேர்தலில் வெற்றியை பெற்றுத் தரும் என்றார்.

News October 22, 2024

அமளியில் ஈடுபட்ட கல்யாண் பானர்ஜி சஸ்பெண்ட்

image

நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் அமளியில் ஈடுபட்ட TMC எம்பி கல்யாண் பானர்ஜி ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இன்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் எழுப்பிய கேள்விக்கு பாஜக எம்பி அபிஜித் ஆட்சேபம் தெரிவித்தார். இதனால் கோபமான அவர், கண்ணாடி டம்ளரை தூக்கி வீசிய போது அவரது விரலில் காயம் ஏற்பட்டது. இந்நிலையில், அவரது இச்செயலுக்காக ஒருநாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

News October 22, 2024

Tech Talk: மின்னல் வேகத்தில் சார்ஜ் ஏற்றலாம்!

image

முக்கியமான நேரத்தில் அலைபேசி பேட்டரியில் சார்ஜ் முடிந்துவிட்டால் ஏமாற்றமாக இருக்கும். ஏனெனில் மீண்டும் சார்ஜ் செய்ய பல நிமிடங்கள் ஆகும். இந்நிலையில் வெறும் 4 நிமிடம் 30 விநாடியில் 100% சார்ஜ் ஆகும் SMARTPHONE சார்ஜரை ‘ரியல்மி’ நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது வழக்கமாக சார்ஜாகும் நேரத்தைவிட 16 மடங்கு வேகத்தில் 2 நிமிடத்தில் செல்ஃபோனில் 50% சார்ஜ் ஏற்றிவிடுகிறது. இது USB-C வகையைச் சேர்ந்தது.

News October 22, 2024

அடேங்கப்பா.. யாரு சாமி இவரு..!

image

குஜராத்தில் கோர்ட்டுக்குள்ளேயே போலியான கோர்ட்டை செட் செய்து கல்லா கட்டிய மோரிஸ் சாமுவேல் என்பவரை போலீசார் கைது செய்தனர். 5 ஆண்டுகளாக இந்த போலி கோர்ட் செயல்பட்டு வந்ததும், நிலம் தொடர்பான வழக்குகளில் சாதகமான தீர்ப்பு வழங்குவதாக கூறி பணம் சம்பாதித்ததும் தெரியவந்துள்ளது. சாமுவேல் தீர்ப்பு வழங்கிய வழக்கை, அகமதாபாத் சிவில் கோர்ட் விசாரணைக்கு எடுத்த போது, இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது.

News October 22, 2024

2ஆவது டெஸ்டில் கில் விளையாடுவாரா? ரியான் பதில்

image

காயத்தில் இருந்து சுப்மன் கில் குணமடைந்து வருவதாக இந்திய அணி துணை பயிற்சியாளர் ரியான் கூறியுள்ளார். கழுத்தில் ஏற்பட்ட பிரச்னை சரியாகி, கில் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு கழுத்துப் பகுதியில் கொஞ்சம் வலி இருந்ததாகவும், அது தற்போது குறைந்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதனால் அக்.24இல் நடக்கும் 2ஆவது டெஸ்டில் அவர் விளையாட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

News October 22, 2024

ஜிம்முக்கு செல்பவர்களே, உஷார்!

image

உடல்நலனை காக்க ஜிம்முக்கு செல்கிறோம். ஆனால், அங்கேயே உடல்நலனுக்கு ஆபத்து இருந்தால்? ஆம், ஜிம்மில் உள்ள வெயிட்களில், டாய்லெட் சீட்டில் இருப்பதைவிட 362 மடங்கு அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக பிரபல fitrated நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், exercise bikes-இல் கேண்டீன் ட்ரேவைவிட 39 மடங்கு பாக்டீரியாக்கள் இருப்பதாவும் எச்சரிக்கிறது. எனினும், இதனால் நோய் தாக்கும் அபாயம் குறைவு தானாம்.

error: Content is protected !!