News July 10, 2025

இரவில் இடி-மின்னலுடன் மழை: IMD

image

இன்று (ஜூலை 9) இரவு 1 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கீழே கமெண்ட் பண்ணுங்க.

News July 10, 2025

மக்களுக்கு திமுக கொடுத்த பரிசு கடன் தான்: இபிஎஸ் சாடல்

image

திமுக ஆட்சிக்கு வந்த 50 மாதங்களில் மக்களுக்கு கொடுத்த பரிசு கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி கடன் மட்டுமே என இபிஎஸ் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என தெரிவித்த அவர் தமிழ்நாட்டுக்கு விரைவில் விடிவுகாலம் வரவேண்டும் என்கின்ற மக்களின் கூக்குரலை தானறிவேன் எனவும் கூறியுள்ளார். அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவுடன் மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

News July 10, 2025

குஜராத் பாலம் இடிந்து விபத்து… பலி 11 ஆக உயர்வு

image

குஜராத்தில் பாலம் இடிந்து ஆற்றுக்குள் வாகனங்கள் விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 11-ஆக உயர்ந்துள்ளது. வதோதரா மாவட்டம் மஹிசாகர் ஆற்றின் மீது கட்டப்பட்டு இருந்த 40 ஆண்டுகால பழமையான பாலம் இடிந்து விழுந்தது. இதில் பாலம் மீது சென்ற வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன. இந்த விபத்தில் 2 சிறார்கள் உள்பட மொத்தம் 11 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். மேலும் 1 பெண் உள்ளிட்ட 5 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

News July 10, 2025

ராசி பலன்கள் (10.07.2025)

image

➤ மேஷம் – ஊக்கம் ➤ ரிஷபம் – அமைதி ➤ மிதுனம் – ஈகை ➤ கடகம் – ஓய்வு ➤ சிம்மம் – மறதி ➤ கன்னி – ஜெயம் ➤ துலாம் – திடம் ➤ விருச்சிகம் – பகை ➤ தனுசு – பரிசு ➤ மகரம் – தடை ➤ கும்பம் – வரவு ➤ மீனம் – ஆசை.

News July 10, 2025

இலங்கைத் தமிழருக்கு குடியுரிமை: சசி கோரிக்கை

image

TN-ல் உள்ள முகாம்களில் இருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு நடிகர் சசிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிநாடுகளில் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுப்பதாக தெரிவித்த அவர் தமிழ் மொழி பேசுபவர்கள் வேறு நாட்டில் இருந்து இங்கு வந்தாலும், இங்க இருந்து முன்பு போனவர்களாக தான் இருப்பார்கள் எனவும் கூறியுள்ளார். ‘ஃப்ரீடம்’ சிறப்பு காட்சிக்கு பின் செய்தியாளர்களிடம் இவ்வாறு பேசியுள்ளார்.

News July 10, 2025

தம்பதியருக்கு டாக்டர்கள் பரிந்துரை

image

தாம்பத்தியத்தில் ஆர்வத்தை தூண்டவும், ஆரோக்கியத்துக்கும் பின்வரும் பழங்களை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்: 1) ஸ்ட்ராபெரி: இதை சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் அதிக அளவு விருப்பம் உண்டாகும் 2) திராட்சை: இதை சாப்பிட்டால் தாம்பத்திய உறவில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும் 3) வாழைப்பழம்: இதை சாப்பிடுவது ஹார்மோனை அதிகரிக்க செய்யும். அதில் ஊட்டசத்து அதிகம் உள்ளது.

News July 9, 2025

மகளிர் உரிமைத் தொகை விரிவாக்கம்.. நவம்பரில் பணம்?

image

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்கீழ் 1.10 கோடி பெண்களுக்கு மாதம் ₹1,000 தமிழக அரசு வழங்கி வருகிறது. இதில் தகுதியான விடுபட்ட பெண்களை மீண்டும் சேர்க்கும் வகையில் விரைவில் சிறப்பு முகாம்களை நடத்தவும் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இந்த முகாம்கள் நவம்பர் வரை நடக்கும் என அரசு தெரிவித்துள்ளதால், புதிதாக சேர்க்கப்படும் பயனாளிகளுக்கு அதன்பிறகே ₹1,000 அளிக்கப்படும் என கூறப்படுகிறது.

News July 9, 2025

நடிகர் ஃபிஷ் வெங்கட் உடல்நிலை கவலைக்கிடம்

image

நடிகர் ஃபிஷ் வெங்கட்டின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அவரின் மகள் தெரிவித்துள்ளார். இதுவரை சிகிச்சை பெற்ற ஹாஸ்பிடலில் இருந்து வேறு ஹாஸ்பிடலுக்கு அவர் மாற்றப்பட்டு இருப்பதாகவும், நன்கொடையாளர்கள் தரும் பணத்தை வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். கிட்னி, கல்லீரல் உள்ளிட்ட உடல்பாகம் முழுவதும் ரத்தத்தில் இன்ஃபெக்ஷன் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

News July 9, 2025

முட்டை விலை ஒரே நாளில் 20 காசுகள் சரிவு

image

முட்டை விலை இன்று ஒரே நாளில் 20 காசுகள் வீழ்ச்சியடைந்திருப்பது மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில் 1 முட்டையின் விலை நேற்று ₹5.75ஆக இருந்தது. இந்நிலையில் இன்று அதன் விலை 20 காசுகள் குறைக்கப்பட்டு ₹5.55 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் 1 முட்டை ₹6-க்கு விற்கப்பட்டு வருகிறது. உங்கள் ஊரில் முட்டை விலை என்ன? கீழே பதிவிடுங்க.

News July 9, 2025

பட்டாசு ஆலைகளுக்கு பசுமைத் தீர்ப்பாயம் எச்சரிக்கை

image

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு செய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. விதிமீறல்கள் நடந்திருப்பது உறுதியானால் ஆலைகளை மூடுவது பற்றி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளது. இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட விபத்து நடக்கக் கூடாது என திட்டவட்டமாக ஆணையம் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!