India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (அக்.23) காலை 7 மணி வரை 14 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, மதுரை, விருதுநகர், தென்காசி, சிவகங்கை, திண்டுக்கல், கரூர், திருச்சி, தேனி, நாமக்கல், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி-மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
இன்று (அக். 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இந்தியா, நியூசி. இடையே புனேவில் நாளை 2ஆவது டெஸ்ட் தொடங்கவுள்ளது. இந்த மைதானத்தில் முதன்முதலில் 2017இல் டெஸ்ட் நடந்தது. இதில் இந்தியா, ஆஸி. அணிகள் மோதின. இதில் ஆஸி. அணி 333 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்றது. எனினும், 2019இல் நடந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை இன்னிங்ஸ் மற்றும் 137 ரன் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. பின்னர் நாளை 3ஆவது போட்டி நடக்கிறது.
4ஆவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இந்தியா கடலில் இறக்கியுள்ளது. எஸ்.4 எனப்படும் அந்த நீர்மூழ்கி, பாலிஸ்டிக் ஏவுகணையை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் வல்லமை கொண்டது. ஏற்கெனவே இந்தியா 3 அணுசக்தி நீர்மூழ்கிகளை பயன்பாட்டுக்கு காெண்டு வந்துள்ளது. அதில் முதல் 2 நீர்மூழ்கி கப்பல்கள் பணியில் உள்ளன. 3ஆவது நீர்மூழ்கி தற்போது பரிசோதனையில் உள்ளது. விரைவில் அதுவும் பணியில் ஈடுபடுத்தப்படும்.
இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
*குறள் பால்: அறத்துப்பால். குறள் இயல்: பாயிரவியல். அதிகாரம்: கடவுள் வாழ்த்து.
*குறள்: அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
*உரை: எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது. SHARE IT.
இந்தியா, நியூசி. இடையேயான 2ஆவது டெஸ்ட் போட்டி நாளை புனேயில் தொடங்கவுள்ளது. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்டில் நியூசி. அபார வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் நாளை தொடங்கும் 2ஆவது டெஸ்டில் நியூசி.க்கு இந்தியா பதிலடி கொடுக்குமா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
KGF-3ஆம் பாகம் நிச்சயம் எடுக்கப்படும் என்று யாஷ் தெரிவித்துள்ளார். முதல் 2 பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து அந்தப் படத்தின் 3ஆவது பாகம் எடுக்கப்படுமா, இல்லையா என்ற கேள்வி நிலவியது. இதுகுறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட யாஷிடம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த யாஷ், சரியான நேரம் வருகையில் பிரமாண்டமாக எடுக்கப்படும் என கூறினார்.
கனமழை காரணமாக, கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி- கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் காேவை, திருப்பூரில் இடைவிடாமல் மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்வதாலும், இன்று கனமழை அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பதாலும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவித்து கோவை, திருப்பூர் மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
▶அக். 23 (ஐப்பசி 6) ▶புதன் ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 6:30 PM – 7:30 PM▶ராகு காலம்: 12:00 PM – 1:30 PM▶எமகண்டம்: 7:30 AM – 9:00 AM▶குளிகை: 10:30 AM – 12:00 PM▶ திதி: சப்தமி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: வடக்கு▶ பரிகாரம்: பால் ▶ நட்சத்திரம்: திருவாதிரை ▶சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம். SHARE பண்ணுங்க.
தினமும் இரவில் 3 முறை உடலுறவு வைக்கச் சொல்லியும், முடியவில்லையேல் திருநங்கையென கூறி டார்ச்சர் செய்த மனைவியிடம் இருந்து கணவருக்கு நீதிமன்றம் டைவர்ஸ் அளித்துள்ளது. பஞ்சாப் பெண் ஒருவர், இதுபோல கணவர், அவரின் குடும்பத்தினரை டார்ச்சர் செய்ததாக கூறப்படுகிறது. கீழ் நீதிமன்றம் கணவருக்கு டைவர்ஸ் அளிக்க, அதை எதிர்த்து மனைவி தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட், கணவருக்கு விவாகரத்து அளித்தது.
Sorry, no posts matched your criteria.