India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உடல் பருமன் காரணமாக, மும்பை அணியிலிருந்து பிருத்வி ஷா நீக்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் பெரிதாக வருவார் என முன்பு எதிர்பார்க்கப்பட்ட பிருத்வி ஷாவுக்கு, சொதப்பலான ஆட்டம் காரணமாக வாய்ப்பு அளிக்கப்படுவதில்லை. இதனால் உள்ளூர் கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்நிலையில், ரஞ்சியில் பரோடா அணிக்கு எதிராக மோசமாக விளையாடியது, உடல் பருமன் உள்ளிட்ட காரணத்தால் நீக்கப்பட்டுள்ளார்.
மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைத் தேர்தலையாெட்டி 45 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை சிவசேனா கட்சி வெளியிட்டுள்ளது. அதில் கோப்ரி பச்பாகடி தொகுதியில் முதல்வர் ஏக்நாத் சிண்டே போட்டியிடுவார் எனக் கூறப்பட்டுள்ளது. மகிம் தொகுதியில் ராஜ் தாக்கரே மகன் அமித் தாக்கரேயை எதிர்த்து சதா சர்வான்கரை சிவசேனா களமிறக்கியுள்ளது. மகாராஷ்ட்ரா சட்டப்பேரவைக்கு நவ.20இல் தேர்தல் நடைபெறவுள்ளது.
* நம்முடைய தேகமும், உள்ளமும் ஆண்டவனுடைய கோயில். அதை சுத்தமாக வைத்திருப்பது நமது கடமை.
* கல்வியும், செல்வமும் எவ்வளவு அதிகம் இருந்தாலும், அடக்கம் இல்லையெனில் பண்பாடென்பது இல்லை.
* தீண்டாமை என்பது நம் சமூகத்தில் இருக்கும் ஒரு மாசு. அதை கட்டாயம் அழித்தாக வேண்டும்.
* வாழ்க்கையில் தைரியமாக இருப்பதை விட, மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம் வேறு எதுவாக இருக்க முடியும்?. SHARE IT.
1923: முன்னாள் துணை குடியரசுத் தலைவர் பைரோன்சிங் செகாவத் பிறந்தார்
1940: பிரேசில் முன்னாள் கால்பந்து ஜாம்பவான் பீலே பிறந்தார்
1968: காமெடி நடிகர் வையாபுரி பிறந்தார்
1979: தெலுங்கு நடிகர் பிரபாஸ் பிறந்தார்
1982: நடிகர் ஜித்தன் ரமேஷ் பிறந்தார்
1991: நடிகை சாந்தினி செளத்ரி பிறந்தார்
2023: முன்னாள் கிரிக்கெட் வீரர் பிசன் சிங் பெடி காலமானார்
NICL நிறுவனத்தில் காலியாகவுள்ள 500 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வேலைக்கு சேர விரும்புவோர் nationalinsurance.nic.co.in இணையதளத்தில் நாளை முதல் விண்ணப்பிக்கலாம். வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற நவம்பர் மாதம் 11ஆம் தேதி கடைசி நாளாகும். கல்வித் தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட கூடுதல் தகவலை NICL நிறுவன இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம். SHARE IT
புனே டெஸ்டில் கே.எல். ராகுல், சர்பராஸ் கான் ஆகியோரில் யாரேனும் ஒருவருக்கே வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. சுப்மன் கில் காயமடைந்ததால் அவருக்கு பதிலாக முதல் டெஸ்டில் விளையாடிய சர்பராஸ் கான், 150 ரன்களை விளாசினார். கே.எல். ராகுல் சாெற்ப ரன்னில் ஆட்டமிழந்த போதிலும் அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது. கில் குணமடைந்து விட்டதால் அவர் அணியில் விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள PM மோடி, ரஷ்யாவின் காசானுக்கு சென்றுள்ளார். அங்கு அவர், ஈரானின் புதிய அதிபர் மசூத் பெசஸ்கியானை சந்தித்து பேசினார். அப்போது, மேற்காசிய விவகாரம் குறித்து 2 பேரும் பேசினர். அங்கு அதிகரித்து வரும் மோதலுக்கு கவலை தெரிவித்த மோடி, அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். மோதலுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.
இன்று (அக். 23) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
அன்லிமிடெட் அழைப்பு விரும்புவோருக்கு ₹1,999 ரீசார்ஜ் திட்டத்தை ஏர்டெல் நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்வோருக்கு 365 நாள்களும் அன்லிமிடெட் அழைப்பு வசதியை ஏர்டெல் தருகிறது. இதுமட்டுமன்றி தினமும் 100 எஸ்எம்எஸ் அளிக்கிறது. ஏர்டெல் எக்ஸ்ட்ரீம், ஹலோ ட்யூன்ஸ், அப்பல்லோ மெம்பர்ஷிப் ஆகியவற்றையும் ஏர்டெல் வழங்குகிறது. அதேபோல், 24 ஜிபி 4ஜி டேட்டாவையும் அளிக்கிறது.
குடி பழக்கத்தில் இருந்து தன்னை மீட்டது மனைவி லதாதான் என்று ரஜினிகாந்த் தெரிவித்தது மீண்டும் வைரலாகி வருகிறது. தன்னை இன்டர்வ்யூ எடுக்க வந்தபோது லதாவுடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், இதையடுத்து 2 பேரும் திருமணம் செய்து கொண்டதாகவும் ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளார். லதாவை தனக்கு அறிமுகம் செய்து வைத்தது வொய்.ஜி. மகேந்திரன்தான் என்றும், இதற்காக அவருக்கு தாம் கடன்பட்டிருப்பதாகவும் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.