India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஹிஸ்புல்லா அமைப்பின் அடுத்த தலைவராக அறிவிக்கப்பட இருந்த ஹாஷிம் சஃபிதீனை இஸ்ரேல் படைகள் கொன்றதாக IDF அறிவித்துள்ளது. 3 வாரங்களுக்கு முன்பு லெபனானின் தஹியாவில் உள்ள பதுங்கு குழி மீது நடத்தியத் தாக்குதலில் அந்த அமைப்பின் புலனாய்வுப்பிரிவு தலைவர் அலிஹுசைன் & முக்கிய தளபதிகள் பலர் கொல்லப்பட்டனர். இதில் சஃபிதீனும் உயிரிழந்ததால் ஹிஸ்புல்லாவின் அடுத்த தலைவராக யார் பொறுப்பேற்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் மோகன்பாபுவின் மகளான லட்சுமி மஞ்சு, தமிழில் ‘கடல்’, ‘இஞ்சி இடுப்பழகி’, ‘காற்றின் மொழி’ ஆகிய படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். சினிமாவைத் தாண்டி சமூக சேவையில் ஈடுபட்டு வரும் அவர், 30 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து மாணவர்களுக்கு தேவையான உதவி செய்து வருகிறார். அந்த வரிசையில், தற்போது தெலங்கானாவில் மேலும் 20 அரசுப் பள்ளிகளை தான் தத்தெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர் டிராபி’ டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஆஸி. அணியின் முன்னாள் வீரர் டேவிட் வார்னர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஒருவேளை தனது பங்களிப்பு அணிக்கு தேவை என்றால், அடுத்த ஷெபீல்டு (முதல் தரம்) போட்டியில் மகிழ்ச்சியுடன் விளையாடுவேன் எனக் கூறிய அவர், சரியான காரணங்களுக்காக ஓய்வு பெற்ற தான் தற்போது சிறப்பாக ‘பினிஷிங்’ செய்ய விரும்புகிறேன் என்றார்.
அணுஆயுத சோதனையில் வெங்காயம், உருளைக்கிழங்கை இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் பயன்படுத்துகின்றன. அது ஏன் என்று பார்க்கலாம். அணுஆயுத சோதனையின்போது வெளிப்படும் ஆல்பா, பேடா, காம்மா கதிர்களை கிரகித்து கொள்ளும் சக்தி வெங்காயத்துக்கு உண்டு. ஆதலால் வெங்காயமும், அத்துடன் அணுஆயுத சோதனை, காய்கறிகளுக்கு எந்தளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை அறிய உருளையும் பயன்படுத்தப்படுகிறது. SHARE IT.
பரஸ்பர நிதி நிறுவனங்களின் நடைமுறை வெளிப்படைத்தன்மையை SEBI புதிய விதிகளை நவ. 1 முதல் அமல்படுத்தவுள்ளது. அதன்படி, இனிமேல், எந்தவொரு AMC நிறுவனத்தின் முக்கிய பணியாளர்கள், அந்தந்த நிறுவனங்களின் MF யூனிட்களில் ஒரு காலாண்டில் ₹15 லட்சத்திற்கு மேல் பரிவர்த்தனை செய்தால், 2 நாட்களுக்குள் இணக்க அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும். வாங்கிய யூனிட்களை ஒரு மாதத்திற்குள் (காரணம் தெரிவிக்காமல்) விற்கக்கூடாது.
விவாகரத்து வழக்குகளில் தம்பதியினரை நேரில் ஆஜராகும்படி நிர்பந்திக்கக் கூடாது என குடும்ப நல நீதிமன்றங்களுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் தமிழக தம்பதி விவாகரத்துக் கோரிய வழக்கில், நேரில் ஆஜராகவில்லை என்பதால் குடும்பநல நீதிமன்றம் விசாரிக்க மறுத்தது. இதை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், விவாகரத்து வழக்குகளில் காணொளி காட்சியில் ஆஜராக வாய்ப்பளிக்குமாறு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
<<11474364>>BRICS<<>> மாநாட்டில் எடுக்கப்பட்ட இந்த ஒற்றை நிழற்படம் மூலம் ஒட்டுமொத்த உலகையும் ரஷ்யா திரும்பி பார்க்க வைத்துள்ளது என்றால் மிகையில்லை. இந்திய பிரதமர் மோடியையும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கையும் தனது இருபுறமும் நிற்க வைத்து, 80களின் புவிசார் அரசியலுக்கு மீள்பாதை அமைத்திருக்கிறார் புதின். ஆசியாவின் இருபெரும் அரசுகள் ஒன்றிணைந்து மேற்கத்திய நாடுகளை அதிர வைத்திருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.
திஷா பதானியின் கவர்ச்சி காட்சிகளை நீக்க வேண்டுமென ‘கங்குவா’ படக்குழுவுக்கு சென்சார் போர்டு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகி வரும் இப்படம் நவ. 14ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. இதனிடையே, “Yolo…” என்ற பாடலைப் படக்குழு வெளியிட்டது. இதில், திஷா பதானியின் கவர்ச்சி காட்சிகள் இடம்பெற்றிருந்தன.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் இருக்கும் பணம் குறித்தத் தகவலை SMS அனுப்பி தெரிந்து கொள்ளும் வசதி உள்ளது. அது எப்படி எனத் தெரிந்து கொள்ளலாம். EPF கணக்கில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு EPFOHO UAN என டைப் செய்து SMS அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பினால், உங்கள் EPF கணக்கில் தற்போது எவ்வளவு பணம் இருப்பு உள்ளது என்ற தகவல், SMSஆக உங்கள் எண்ணுக்கு வரும்.
பார்டர் கவாஸ்கர் டிராபியில் முகமது ஷமி விளையாடவில்லை என்றால், அவருக்கு மாற்றாக மயங்க் யாதவை அணியில் சேர்க்கலாம் என பிரட் லீ பிளேயர் பரிந்துரைத்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “IPL தொடரின்போது, இளம் பந்துவீச்சாளரான மயங்க் யாதவின் பவுலிங்கை கவனித்தேன். 157 கிமீ வேகத்தில் அவர் பந்து வீசினார். 150kmph+ வேகத்தில் தன்னை நோக்கி வரும் அதிவேக பந்துவீச்சை எந்த பேட்ஸ்மேனும் சமாளிக்க முடியாது” என்றார்.
Sorry, no posts matched your criteria.