News October 23, 2024

கோலியை முந்திய ரிஷப் பண்ட்

image

ஐ.சி.சி. டெஸ்ட் தரவரிசை பட்டியலில் ரிஷப் பண்ட் முன்னேற்றம் கண்டுள்ளார். ஜெய்ஸ்வால் 4ஆவது இடத்திலும், ரிஷப் பண்ட் 3 இடங்கள் முன்னேறி 6ஆவது இடத்திலும், விராட் கோலி (ஒரு இடம் சரிந்து) 8ஆவது இடத்திலும் உள்ளனர். தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் மாற்றமின்றி முதலிடத்தில் தொடருகிறார். பந்துவீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் பும்ரா மற்றும் ஜடேஜா முதலிடத்தில் தொடர்கின்றனர்.

News October 23, 2024

WHATSAPP பயனாளர்களுக்கு GOOD NEWS

image

WHATSAPP-இல் செய்தி அனுப்ப வேண்டும் எனில் கான்டாக்ட் பகுதி சென்று எண்ணை சேமிக்க வேண்டியுள்ளது. இதற்குப்பதில், WHATSAPP செயலியிலேயே எண்ணை சேமிக்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது கான்டாக்டில் எண்ணை சேமிப்பதால், மாெபைல் தொலைந்தால் எண்ணை இழக்க வேண்டியுள்ளது. ஆனால் WHATSAPPஇல் சேமித்தால், மொபைல் தொலைந்தாலும் எண் அப்படியே இருக்கும்.

News October 23, 2024

பகல் கனவு காண்கிறார் ஸ்டாலின்: இபிஎஸ்

image

மீண்டும் ஆட்சிக்கு வரலாம் என முதல்வர் ஸ்டாலின் பகல் கனவு காண்பதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். சேலத்தில் நடைபெற்ற அதிமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர், அதிமுகவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக விஷமச் செய்தியை திமுக பரப்புவதாகக் குற்றஞ்சாட்டினார். கடந்த தேர்தலை விட திமுக 2024இல் குறைவான வாக்குகளை பெற்றுள்ளதாகவும், 2026இல் அதிமுக ஆட்சியில் அமருவதை திமுகவால் தடுக்க முடியாது என்றும் சூளுரைத்தார்.

News October 23, 2024

இந்த மாவட்டத்தில் 3 நாள் டாஸ்மாக் கடைகள் இயங்காது

image

மருதுபாண்டியர் நினைவு தினம் – தேவர் குருபூஜையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் அக்.27,28,29இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களிலும் விடுமுறை அளிக்கப்படவுள்ளது. வழக்கமாக அக்.30 வரை டாஸ்மாக் கடைகளுக்கு லீவ் அளிக்கப்படும். ஆனால் இந்த முறை, தீபாவளி வருவதால் அக்.30 டாஸ்மாக்கை திறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

News October 23, 2024

24 ஆண்டுகால கூட்டணி பஜாஜ் – அலையன்ஸ் முறிவு?

image

தனியார் காப்பீட்டு நிறுவனமான பஜாஜ் அலையன்ஸ் கூட்டு வர்த்தகத்தில் இருந்து, அலையன்ஸ் நிறுவனம் விலகத் திட்டமிட்டுள்ளது. (2000இலிருந்து) காப்பீடு நிறுவனத்தில், 26% பங்குகளை வைத்துள்ள அலையன்ஸ் விலகியதும், மொத்த உரிமையும் பஜாஜ் வசமாகும். வேறு காப்பீடு நிறுவனத்துடன் கைகோர்ப்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்த அலையன்ஸ் நிறுவனம், நிச்சயம் காப்பீடு துறையில் நீடிக்க உள்ளதாக சந்தை வட்டாரங்கள் கூறுகின்றன.

News October 23, 2024

ஜெர்மனியை பழித்தீர்க்குமா இந்தியா?

image

டெல்லியில் நடக்கும் ஹாக்கி போட்டியில் இன்று இந்தியா, ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. உலகத் தரவரிசையில் No-2 ஆக உள்ள ஜெர்மனியிடம் பாரிஸ் ஒலிம்பிக் அரையிறுதியில் இந்திய அணி தோற்றது. அந்த தோல்விக்கு பதிலளிக்கும் வகையில், ஹர்மன்பிரீத் சிங் தலைமையான இந்திய அணி இன்று தொடரை வெற்றியுடன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு அணிகள் மோதிய கடைசி 5 போட்டியில் இந்தியா 3இல் வெற்றி பெற்றுள்ளது.

News October 23, 2024

4வது திருமணம் செய்த நடிகர் பாலா

image

நடிகர் பாலா இன்று முறைப்பெண் கோகிலாவை திருமணம் செய்துகொண்டார். இது அவருக்கு நடக்கும் 4வது திருமணமாகும். 2010ல் பாடகி அம்ருதாவை மணந்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். பின் 2021ல் டாக்டர் எலிசபெத் என்பவரை திருமணம் செய்து, அவரையும் பிரிந்தார். இதனிடையே, 2008ல் சந்தனா என்பவரை திருமணம் செய்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. இந்நிலையில், இன்று உறவினர்கள் முன்னிலையில் கோகிலாவை மணந்துள்ளார்.

News October 23, 2024

ALERT: இங்கெல்லாம் கனமழை வெளுக்கப்போகுது

image

தமிழகத்தில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கூறியுள்ளது. சென்னையில் 2 நாள்களுக்கு மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழையும் பெய்யலாம் என்றும் முன்னறிவித்துள்ளது.

News October 23, 2024

‘கத்தி’ பட வெற்றி: அனிருத்துக்கு விஜய் பரிசு

image

நடிகர் விஜய், ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற ’கத்தி’ படம் வெளியாகி நேற்றுடன் 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இப்படத்தின் Theme Music இன்னும் பலரின் செல்போனில் ரிங்டோனாக இருக்க முக்கிய காரணம் அனிருத். வயது, அனுபவம் குறைவு என்றாலும் ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கத்தி படத்தில் சூப்பர் ஹட் பாடல்கள் கொடுத்த அவருக்கு, நடிகர் விஜய் பியானோ ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார்.

News October 23, 2024

பொது அறிவு: கேள்விகளுக்கான பதில்கள்

image

இன்று 10 மணிக்கு <<14430244>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) ராயபுரம் (1856) 2) எரடோஸ்தீனஸ் (கி.மு 300) 3) முக்குளிப்பான் 4) கலித்தொகை 5) Spectroscopy 6) ஹென்னகுயா சால்மினிகோலா 7) University Grants Commission. இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் எனஇ

error: Content is protected !!