News October 24, 2024

உலகில் அழியாத ஒரே உயிரினம்..!

image

பூமியில் உள்ள ஒரே அழியாத உயிரினம் ஜெல்லி மீன்கள் தான் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இதன் உடலில் ஏதேனும் காயம் அல்லது நோய்வாய்ப்பட்டால், அவை உடனடியாக ‘பாலிப்’ நிலைக்குச் செல்கின்றன. அதாவது முதுமைக்கு எதிரான நிலை. இதன்மூலம், மீனைச் சுற்றி குழகுழப்பான சவ்வு போன்று உருவாகிறது. அது 3 நாள்கள் வரை மீனின் மீது இருக்கின்றன. இதனால், அது தனது வயதை குறைத்துக் கொள்கிறது.

News October 24, 2024

பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு தெரியுமா?

image

வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், அவருடைய மொத்த சொத்து மதிப்பு ₹12 கோடி என குறிப்பிட்டுள்ளார். 2023-24ஆம் ஆண்டின் வருமானம் ₹46.39 லட்சம் எனவும், அசையும் சொத்து ₹4.24 கோடி, அசையா சொத்து ₹7.74 கோடி, 4,400 கிராம் தங்கமும் இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், ₹15 லட்சம் கடன் இருப்பதையும், தன் மீது 2 FIR பதிவு செய்யப்பட்டுள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்.

News October 24, 2024

ரயில்வேயின் இந்த இலவச வசதிகள் பற்றி தெரியுமா?

image

ரயில்வேயில் இலவச வைஃபை, ஏசி கோச்களில் பெட்ஷீட், தலையணைகள் வழங்கப்படுவது அனைவருக்கும் தெரியும். அதேபோல் முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகளுக்கு லாக்கர் வசதி வழங்கப்படுகிறது. மருத்துவ உதவி, ஆம்புலன்ஸ் வசதியும் இலவசமாக கொடுக்கப்படுகிறது. மேலும், ரயில் தாமதமானால், கட்டணம் செலுத்தாமல் காத்திருப்பு அறையில் தங்கலாம். துரந்தோ, ராஜ்தானி ரயில்களில் ரயில் தாமதமானால் இலவச உணவும் வழங்கப்படுகிறது.

News October 24, 2024

கொல்கத்தாவில் விமான சேவைகள் நாளை மாலை ரத்து

image

கொல்கத்தாவில் நாளை மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் காலை 9 மணி வரை விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள “டானா” புயல் நாளை காலை தீவிர புயலாக வலுவடைந்து நாளை இரவு முதல் நாளை மறுநாள் காலை வரை ஓடிசா- மேற்குவங்கம் இடையே கரையை கடக்கவுள்ளது. இதையொட்டி முன்னெச்சரிக்கையாக கொல்கத்தாவில் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

News October 24, 2024

24 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை மழை

image

இரவு 1 மணி வரை 24 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. *இடி மின்னலுடன் மழை: தருமபுரி, தி.மலை, கள்ளக்குறிச்சி, கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை. *லேசான மழை: கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், மதுரை, தேனி, குமரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர்.

News October 24, 2024

AQI என்றால் என்ன தெரியுமா?

image

காற்றில் எந்த அளவுக்கு மாசு கலந்துள்ளது என்பதை அளவிட Air Quality Index (AQI) என்ற சுட்டெண் உதவுகிறது. காற்றில் நுண்துகள்கள் (PM2.5, PM10), நச்சு வாயுக்கள் கலந்திருக்கும் அளவை பொறுத்து 0 முதல் 500 வரை AQI எண் வழங்கப்படுகிறது. அதன்படி, 0-50 AQI இருந்தால் நல்லது, 100 வரை குழந்தை, முதியவர் நலத்தை பாதிக்கும், 100-க்கு மேல் உடல்நலக் கேடு, 150-க்கு மேல் உடல்நலனுக்கு மிக மிக ஆபத்தான சூழலை குறிக்கும்.

News October 24, 2024

திமுகவுக்கு தோல்வி உறுதி: எல்.முருகன்

image

வரும் தேர்தல்களில் திமுக நிச்சயம் தோல்வியை சந்திக்கும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். வெள்ளப் பாதிப்பு, கட்டண உயர்வுகளால் மக்கள் அவதியடைந்துள்ளதாகவும், நிச்சயம் அது தேர்தல் முடிவுகளில் திமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும, வயநாட்டில் போட்டியிடும் பிரியங்கா காந்தி நிச்சயம் தோல்வி அடைவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

News October 24, 2024

ராசி பலன்கள் (24-10-2024)

image

➤மேஷம் – ஆர்வம் ➤ரிஷபம் – அசதி
➤மிதுனம் – பாராட்டு
➤கடகம் – நட்பு
➤சிம்மம் – வெற்றி
➤கன்னி – நிம்மதி
➤துலாம் – சோதனை
➤விருச்சிகம் – ஆக்கம்
➤துனுசு – தனம்
➤சிந்தனை – பரிவு
➤கும்பம் – பரிசு ➤மீனம் – அச்சம்

News October 24, 2024

அம்பானிக்கு ஷாக்! கைவிட்டுப் போகும் 7 சேனல்கள்

image

அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் Disney- hotstar ஓடிடி தளத்தை வாங்கும் திட்டத்துக்கு வணிக போட்டிகள் ஆணையம் (CCI) ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆனால், அதற்கு ரிலையன்ஸ் தான் கையில் வைத்திருக்கும் hungama, super hungama, colors super உள்பட 7 சேனல்களை விற்றுவிட வேண்டும் என நிபந்தனையும் விதித்துள்ளது. ஓடிடி, பொழுதுபோக்கு சந்தையில் ஏகபோக ஆதிக்கத்தை குறைக்கும் வகையில் இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

News October 24, 2024

“சார், மேட்ச் பாக்ஸ் இருக்கா?” கேட்டு சிக்கிக் கொண்ட பாய்ஸ்

image

கேரளாவில், அடிமாலிக்கு +1, +2 மாணவர் குழு எஜுகேஷன் டூர் சென்றுள்ளனர். அவர்களில் சிலர், தம் அடிக்க தீப்பெட்டி கேட்டு, ஒர்க்‌ஷாப் போல தெரிந்த பில்டிங்கில் நுழைந்துள்ளனர். அது கலால்துறை அலுவலகம் என்பதை உணர்ந்து எஸ்கேப் ஆவதற்குள், அதிகாரிகள் அவர்களை பிடித்துவிட்டனர். சோதனையிட்டதில் அவர்கள் கஞ்சா பீடிகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவர்கள் மீது நார்க்கோடிக்ஸ் பிரிவில் வழக்கு போடப்பட்டுள்ளது.

error: Content is protected !!