India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டி20 கிரிக்கெட்டில் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா படைத்த சாதனையை ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ராசா முறியடித்துள்ளார். 2017இல் இலங்கைக்கு எதிரான போட்டியில் ரோஹித் ஷர்மா 35 பந்துகளில் சதமடித்திருந்தார். இதேபோல் தெ.ஆப்பிரிக்க வீரர் மில்லரும் 35 பந்துகளில் சதமடித்திருந்தார். இந்த சாதனையை சிக்கந்தர், கம்பியாவுக்கு எதிரான போட்டியில் 33 பந்துகளில் சதமடித்து முறியடித்து, புதிய சாதனை படைத்தார்.
மகாராஷ்டிரா தேர்தலில் தலா 85 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி, சரத்பவார் கட்சி முடிவு செய்துள்ளன. மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு நவ.20இல் தேர்தல் நடைபெறுகிறது. இதில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரே கட்சி, சரத்பவார் கட்சி ஆகியன கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. எஞ்சியுள்ள 18 தொகுதிகளை சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்குவது குறித்து இன்று முடிவு செய்யவுள்ளன.
ஹாலிவுட் படமான ஸ்பைடர்மேன் படங்களுக்கு உலகம் முழுவதும் தனி ரசிகர்கள் உள்ளனர். இதுவரை ஸ்பைடர்மேன் படங்கள் 3 பாகங்கள் வெளிவந்து வசூலை வாரி குவித்துள்ளன. இந்நிலையில், 4ஆவது பாக திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு கோடை காலத்தில் தாெடங்க இருப்பதாகவும், டாம் ஹாலண்ட் ஸ்பைடர்மேன் கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காலை 4 மணி வரை கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. தி.மலை, சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி, கோவை, திருப்பூர், நெல்லை, குமரியில் லேசான மழை வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.
இன்று (அக். 24) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
சல்மான் கானிடம் ₹5 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த நபரை மும்பை பாேலீஸ் கைது செய்துள்ளது. பிஸ்னோய் கும்பலிடம் இருந்து சல்மானுக்கு அச்சுறுத்தல் உள்ள நிலையில், அண்மையில் ₹5 கோடி கேட்டு போலீசுக்கு குறுந்தகவல் வந்தது. இதுகுறித்து விசாரித்து வந்தபோது, தனது செயலுக்கு மன்னிப்புகோரி அந்த நபர் மீண்டும் செய்தி அனுப்பியிருந்தார். இதனடிப்படையில் விசாரித்து, ஜாம்செட்பூரை சேர்ந்தவரை கைது செய்துள்ளது.
▶அக். 24 (ஐப்பசி 7) ▶ வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM▶கெளரி நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM▶குளிகை: 9:00 AM – 10:30 AM▶ திதி: அஷ்டமி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: தெற்கு▶ பரிகாரம்: தைலம் ▶ நட்சத்திரம்: புனர்பூசம் ▶சந்திராஷ்டமம்: அனுஷம், கேட்டை. SHARE பண்ணுங்க.
பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பு நாடாக பாகிஸ்தான் இணைய இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது நடைபெறும் மாநாட்டில் பாக். பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் தரப்படாத நிலையில், இந்தியா எதிர்ப்பு காரணமாக பிரிக்ஸ் அமைப்பில் அந்நாடு இணைவதில் சிக்கல் நிலவுகிறது. துருக்கி மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகள் இந்த அமைப்பில் சேர விண்ணப்பித்துள்ள நிலையில், அவை அனைத்தும் பரிசீலனையில் உள்ளது.
விதிமுறைகளை மீறியதற்காக தனியார் மருத்துவமனை செயல்பட 10 நாள்கள் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல யூடியூபர் இர்ஃபான் தனது மனைவி பிரசவத்தின் போது குழந்தையின் தொப்புள் கொடியை கட் செய்துள்ளது. இதனை வீடியோவாகவும் அவர் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரத்தில் மருத்துவமனைக்கு 10 நாள் தடையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இர்ஃபான் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
C.M.ஆக வேண்டும் என்றால் திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியே வர வேண்டும் என்று PT கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். C.M.ஆக அனைவருக்கும் ஆசை இருக்கும். அதில் எந்த தவறுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியிலிருந்து வெளியே வந்து அதற்கான முயற்சியில் திருமாவளவன் ஈடுபட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீங்க. கீழே பதிவிடுங்கள்.
Sorry, no posts matched your criteria.