News December 4, 2024

என்னை நானே பார்ப்பது போல் இருந்தது: கே.எல்.ராகுல்

image

10 ஆண்டுகளுக்கு முன் AUS மண்ணில் முதல் முறையாக ஓபனிங் இறங்கியபோது எப்படி உணர்ந்தேனோ, அதே நிலையில்தான் ஜெய்ஸ்வாலும் இருந்ததாக கே.எல்.ராகுல் தெரிவித்துள்ளார். பதட்டம் அடையாதே, 3 முறை மூச்சை நன்கு இழுத்து விடு என முரளி விஜய் தனக்கு அப்போது சொன்ன அறிவுரையை, ஜெய்ஸ்வாலுக்கு சொன்னதாகவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், முதல் 30 பந்துகளுக்கு அவரை CALM-ஆக வைக்க முயற்சித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

News December 4, 2024

ரூ.110 பொம்மை நோட்டை கொடுத்து பாட்டியிடம் மோசடி

image

குழந்தைகள் விளையாடும் போலி ரூபாய் நோட்டை கொடுத்து வயதான பாட்டியை மர்ம நபர்கள் ஏமாற்றி சென்றுள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே வயதான தம்பதி டீ கடை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு மின்சாரம் இல்லாத போது, கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர், ரூ.110 போலி நோட்டை கொடுத்து, சில்லரை வாங்கி சென்றுள்ளனர். காலையில் அந்த நோட்டை பார்த்த பாட்டி, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து வேதனை அடைந்தார்.

News December 4, 2024

2026-இல் இது நடந்தே தீரணும்: கொந்தளித்த H. ராஜா!

image

வங்கதேச இந்துக்களுக்கு ஆதரவாக கோவையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் H. ராஜா பேசினார். அவர் கூறுகையில், பாலஸ்தீனத்துக்காக குரல் கொடுக்கும் அரசியல் கட்சிகள், வங்கதேச இந்துக்கள் பிரச்னையில் மௌனம் காப்பது ஏன்? இந்துக்களுக்காக போராட கூட எங்களுக்கு உரிமை இல்லையா? ஸ்டாலின் ஆட்சியில் இரண்டாம் தர குடிமக்களாக இந்துக்கள் உள்ளார்கள். இது ஒழிய, 2026-இல் திமுக கூட்டணியை நாம் அழிக்க வேண்டும் எனக் கூறினார்.

News December 4, 2024

பவர் ஸ்டார் சீனிவாசன் ஹாஸ்பிடலில் அட்மிட்

image

பிரபல நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் உடல்நலக்குறைவால் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுநீரகக் கோளாறு காரணமாக கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் திடீரென்று உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டதால், கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

News December 4, 2024

U19 ஆசிய கோப்பை: இந்தியா அபார வெற்றி

image

U19 ஆசிய கோப்பை தொடரில் UAE எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் களமிறங்கிய UAE, 44 ஓவரில் 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இந்தியாவின் யுதாஜித் குகா 3 விக்கெட்டை வீழ்த்தினார். தொடர்ந்து விளையாடிய IND, 16.1 ஓவரிலேயே 143 ரன்கள் எடுத்து வென்றது. இந்திய அணியின் ஆயுஷ் 67, வைபவ் 76 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் IND அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

News December 4, 2024

பா.ரஞ்சித்துக்கு கட்டளையிட்ட சந்தோஷ் நாராயணன்

image

சினிமாவில் சண்டை போடுவதும் கூட ஒரு ஸ்கிரிப்ட் தான் போல. தொடர்ந்து ஒன்றாக படங்களில் பணியாற்றி வந்த பா.ரஞ்சித் – சந்தோஷ் நாராயணன் திடீரென பிரிந்தார்கள். என்ன காரணமென ஒரு தகவலும் இல்லை. இடையில் பா.ரஞ்சித் “தங்கலான்” படத்தில் ஜி.வி.பிரகாஷுடன் பணியாற்றினார். இப்போது சமாதானம் ஆகிவிட்டது போல. இனி பா.ரஞ்சித் படங்களுக்கு நானே இசையமைப்பேன், இது என் கட்டளை என உரிமையுடன் சந்தோஷ் நாராயணன் பேசியிருக்கிறார்.

News December 4, 2024

KYC: வங்கிகளுக்கு RBI புது உத்தரவு

image

சேமிப்புக் கணக்கு வைத்திருப்போரை KYC அப்டேட் செய்யும்படி வங்கிகள் வலியுறுத்தி வருகின்றன. அதுபோல செய்யாதோரின் கணக்குகள் முடக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் அடிக்கடி எழுகின்றன. இந்நிலையில் RBI பிறப்பித்த புதிய உத்தரவில், KYC அப்டேட்டுக்காக கணக்குகளை முடக்கக் கூடாது. பணம் முடங்குவதால் அக்கணக்குகளை செயலுக்கு கொண்டு வர வேண்டும். KYC முறையை எளிமைப்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ளது.

News December 4, 2024

PSLV C-59 ராக்கெட் ஏவுவது நாளைக்கு ஒத்திவைப்பு!

image

PSLV C-59 ராக்கெட் லான்ச் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சூரியனின் மேற்புற பகுதியான கரோனாவை ஆய்வு செய்ய ஐரோப்பாவின் PROBA-3 சாட்டிலைட்டுடன் PSLV C-59 இன்று மாலை 4.08 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. PROBA-3 சாட்டிலைட்டில் தொழில்நுட்பக் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், PSLV C-59 ராக்கெட் ஏவுதலை நாளை மாலை 4.12 மணிக்கு இஸ்ரோ (ISRO) ஒத்திவைத்துள்ளது.

News December 4, 2024

7 நாள்களுக்கு மழை நீடிக்கும்

image

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் அடுத்த 7 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. 6ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

News December 4, 2024

மகளிர் சுய உதவி குழுவினருக்கு ரூ.5 லட்சம் காப்பீடு: TN அரசு

image

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து ரூ.5 லட்சம் வரை காப்பீட்டு தொகை பெறலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதேபோல், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு ரூ.22 லட்சம் வரை பெறலாம் எனவும் கூறியுள்ளது. ஆதார், குடும்ப அட்டை, வருமானச் சான்றிதழ் ஆவணங்களுடன் www.cmchistn.com இணையதளம், கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கவும் கேட்டுக் கொண்டுள்ளது.

error: Content is protected !!