News December 5, 2024

Swiggy மூலம் மருந்துகள் விநியோகம் செய்ய எதிர்ப்பு

image

Swiggy உள்ளிட்ட டெலிவரி சேவை நிறுவனங்கள் மருந்துகள் விற்கும் செயல்பாடுகளை உடனடியாக மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுக எம்.பி., Dr.கனிமொழி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “துரித டெலிவரி மாடலில், காலாவதியான (அ) போலி மருந்துகளின் புழக்கம் அதிகரிக்கலாம். இது நோயாளியின் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும். அத்துடன் தேவையான தரநிலைகளை பின்பற்றுவது இயலாமல் போகும்” என்றார்.

News December 5, 2024

உயர்கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால்…

image

உயர் கல்வி நிறுவனங்களில் இடவசதி இருந்தால் ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என்று மத்திய இணை அமைச்சர் சுகந்தா மஜும்தார் தெரிவித்துள்ளார். இது குறித்து வைகோ எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “செமஸ்டர் தேர்வுகளுக்கான திட்டம் உள்பட, மாணவர்களை சேர்க்கை கொள்கை தொடர்பான அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒரு திட்டத்தை உயர் கல்வி நிறுவனங்கள் கவனமாகத் தயாரிக்க வேண்டும்” என்றார்.

News December 5, 2024

எந்த வரிசையிலும் விளையாட தயார்: KL ராகுல்

image

பேட்டிங்கில் எந்த வரிசையிலும் விளையாட தயாராக இருப்பதாக இந்திய அணியின் வீரர் KL ராகுல் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஆஸி., அணிக்கு எதிராக விளையாடும் 2வது டெஸ்டில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் கிடைத்தால் போதும். முதல் 30-40 பந்துகளை சமாளித்து விட்டால், அதன் பிறகு மனரீதியாக எளிதாக விளையாட முடியும். அதில் எனது கவனத்தை செலுத்துகிறேன்” என்றார்.

News December 5, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶டிச. – 05 ▶கார்த்திகை-20 ▶ஜமா அத்துல் ஆகிர்-3 ▶கிழமை: வியாழன் ▶நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM ▶கெளரி நல்ல நேரம்:12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 1:30 PM – 3:00 PM ▶எமகண்டம்: 6:00 AM – 7:30 AM ▶குளிகை:9:00 AM – 10:30 AM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: தெற்கு ▶பரிகாரம்: தைலம் ▶பிறை: வளர்பிறை ▶முகூர்த்தம்: சுபமுகூர்த்தம் ▶சந்திராஷ்டமம்: மிருகசீருஷம் & திருவாதிரை ▶நட்சத்திரம்: உத்திராடம்.

News December 5, 2024

சத்ரபதி சிவாஜியாக நடிக்கும் ரிஷப் ஷெட்டி

image

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி மகாராஜ் வாழ்க்கை வரலாற்று படத்தில் கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி நடித்து வருகிறார். சந்தீப் சிங் இயக்கத்தில் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாராகி வரும் இப்படத்திற்கு ‘சத்ரபதி சிவாஜி மகாராஜ்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படம் 2027 ஜனவரி 21ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

News December 5, 2024

ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் பாதிப்பை குறைக்கும் இஞ்சி

image

எலும்புகள் ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ் பாதிப்பிற்கு உள்ளாவதைத் தடுக்கும் Anti-inflammatory பண்புகள் இஞ்சிக்கு இருப்பதாக நவீன ஆய்வுகள் கூறுகின்றன. ஜிங்கிபெரீன், அந்தோசயனின், லிக்னன்ஸ் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்த இதன் தோலை சீவி நறுக்கி, தேனில் போட்டு ஊறவிட்டு தினமும் வெறும் வயிற்றில் காலையில் உண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவும் குறையும் என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

News December 5, 2024

வங்கதேசத்தில் ஹிந்து இனப்படுகொலை நடக்கிறதா?

image

வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ், சிறுபான்மையினரை இனப்படுகொலை செய்வதாக அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றம்சாட்டி உள்ளார். நியூயார்க்கில் பேசிய அவர், சிறுபான்மையினர் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. நீதி கேட்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது. ஹிந்து, புத்த மதத்தினர் மீதான இனப்படுகொலையின் மூளையாக மாணவ சங்க ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளதாக தெரிவித்தார்.

News December 5, 2024

BCCI வாரியத்தின் புதிய செயலாளர் யார்?

image

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளராக இருந்த ஜெய்ஷா ICCஇன் புதிய தலைவராக கடந்த 1ஆம் தேதி பொறுப்பேற்றார். இதனால் BCCI-இல் அவர் வகித்த செயலாளர் பதவி காலியாக உள்ளது. அந்த பதவிக்கான போட்டியில் குஜராத் கிரிக்கெட் சங்க செயலாளர் அனில் பட்டேல், BCCI இணை செயலாளர் தேவ்ஜித் சைகியா (அசாம்) ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். 2024 ஜனவரி 2வது வாரத்துக்குள் புதிய செயலாளர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News December 5, 2024

₹10,000 கோடிக்கு ஹெலிகாப்டர் வாங்க ஒப்பந்தம்

image

இந்தியாவுக்கு MH-60R ஹெலிகாப்டர்களை விற்பனை செய்வது தொடர்பான ஏறத்தாழ ₹10,000 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்பந்தம் இந்தியாவின் நீர்மூழ்கி எதிர்ப்பு போர் திறன்களை மேம்படுத்தும் என்று அமெரிக்க அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய ஒப்பந்ததாரராக ‘லாக்ஹீட் மார்ட்டின் ரோட்டரி & மிஷன் சிஸ்டம்ஸ்’ செயல்பட உள்ளதாக அறியமுடிகிறது.

News December 5, 2024

டிசம்பர் 5 வரலாற்றில் இன்று!

image

➤1492 – லா ஸ்பானியோலா தீவில் கொலம்பஸ் கால் பதித்தார். ➤1757 – லெயூத்தன் சமரில் இரண்டாம் பிரெடெரிக் வென்றார். ➤1896 – சென்னை கன்னிமாரா பொது நூலகம் பொது மக்களுக்காகத் திறந்து விடப்பட்டது. ➤1969 – மை லாய் படுகொலைகள் தொடர்பான தகவல்களை லைஃப் இதழ் வெளியிட்டது. ➤2003 – குளிர்திரவ ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக இஸ்ரோ அறிவித்தது. ➤2013 – நெல்சன் மண்டேலா மறைந்த நாள்.

error: Content is protected !!