India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
துர்க்கை தேவியின் 9 வடிவங்களை தெரிந்து கொள்வோம்.
1) வன துர்க்கை
2) சூலினி துர்க்கை
3) ஜாதவேதோ துர்க்கை
4) சாந்தி துர்க்கை
5) சபரி துர்க்கை
6) ஜ்வாலா துர்க்கை
7) லவண துர்க்கை
8) தீப துர்க்கை
9) ஆசுரி துர்க்கை.
கர்ப்பிணிகள் படுக்கையில் எப்படி தூங்குவது என மருத்துவர்கள் தரும் ஆலோசனையை தெரிந்து கொள்வோம். கர்ப்பிணிகள் இடதுபுறமாக ஒருக்களித்துப் படுக்கும்போது, பெரிய ரத்தக்குழாய்களான அயோடா, இன்ஃபிரியர் வீணாக்கேவாவில் அழுத்தம் குறையும். இதனால், கர்ப்பப்பைக்கு நல்ல ரத்த ஓட்டம் இருக்கும். விளைவு, தொப்புள் கொடி வழியாக தேவையான ரத்தம் செல்வதால், குழந்தையின் வளர்ச்சி நன்றாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
*1881 – ஸ்பானிஷ் ஓவியர் பிக்காசோ பிறந்தநாள்.
*1854 – இந்தியாவில் அஞ்சல் துறை ஏற்படுத்தப்பட்டது.
*1943 – நாஜிக்களுக்கு எதிராக டச்சு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
*1949 – மா சே துங்கினால் மக்கள் சீனக் குடியரசு நிறுவப்பட்டது.
*1951 – இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1987: கிரிக்கெட் வீரர் உமேஷ் யாதவ் பிறந்தநாள்
*2006 – பாண்டிச்சேரியின் பெயர் புதுச்சேரி என மாற்றம் பெற்றது.
செபி தலைவரை பாதுகாக்கும் திட்ட பின்னணியில் யார் உள்ளார்கள் என்று ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார். பொது கணக்கு குழு முன்பு ஆஜராகாமல் செபி தலைவர் மாதாபி புரி பூச் தவிர்த்தார். இதனால் அக்கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, பொது கணக்கு குழு முன்பு ஆஜராகி பதிலளிக்க ஏன் மாதாபி தயங்குகிறார் என்று வினவியுள்ளார்.
தலைமைச் செயலக கட்டிடத்தில் விரிசல் ஏற்படவில்லை என்று தமிழக அரசு மறுப்புத் தெரிவித்துள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தின் முதல் தளத்தில் தரையில் விரிசல் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின. இதை திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழக அரசு, தட்பவெப்ப நிலை மாற்றம் காரணமாக தரையில் உள்ள ஓடுகள் மட்டுமே பெயர்ந்ததாக தெரிவித்துள்ளது. ஓடுகளுக்கு கீழுள்ள கான்கீரிட் பாதிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளது.
ரயில் பயணத்தில் பயணிகள் நலன் கருதி சில பொருள்களை எடுத்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவை என்னென்ன? 1) பட்டாசுகள், வெடிகுண்டுகள் 2) ஸ்டவ் மற்றும் கேஸ் சிலிண்டர் 3) ஆசிட், வாசனை திரவியங்கள் 4) தோள் பொருள் 5) எண்ணெய் மற்றும் க்ரீஸ் தடவப்பட்ட பொட்டலங்கள் ஆகும். இதை மீறி, ரயிலில் அந்தப் பொருள்களை எடுத்து வந்தால் ₹1,000 அபராதம், 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்.
இன்று (அக். 25) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
“டானா” புயல் நிலவரம் குறித்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜியுடன் PM மோடி நேற்று பேசினார். அப்போது அவரிடம், “டானா” புயலை எதிர்கொள்ள ஒடிசாவில் எடுக்கப்பட்டுள்ள தயார் நிலை நடவடிக்கைகள் குறித்து மோடி கேட்டறிந்தார். ஒடிசாவுக்கு தேவையான உதவிகளை மத்திய அரசு செய்து தரும் என்று உறுதியளித்த மோடி, புயலை எதிர்கொள்ள ஒடிசா அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும் பாராட்டினார்.
தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு இன்று வானிலை மையத்தால் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி, புதுக்கோட்டை, திருச்சியில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது. தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூரில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது. SHARE IT.
திமுக கூட்டணியில் விரிசல் இல்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக பாஜக மூத்த தலைவர்கள் எச். ராஜா, தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து பேட்டியளித்த செல்வ பெருந்தகை, திமுக கூட்டணி நல்ல வலுவாக இருப்பதாக தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி குறித்து பேச பாஜகவினருக்கு தகுதியில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.