News December 5, 2024

2026இல் மீண்டும் அம்மா ஆட்சி: சசிகலா

image

2026இல் அம்மாவின் (ஜெயலலிதா) ஆட்சியை தமிழகத்தில் மீண்டும் அமைப்பேன் என வி.கே.சசிகலா சூளுரைத்துள்ளார். விழுப்புரத்தில் பேசிய அவர், வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி அதிகாரத்தில் இருந்து திமுக துடைத்தெறியப்படும் என்றார். அதிமுகவில் நிலவும் அனைத்து மனக்கசப்புகளும் நீங்கி அனைவரும் ஒன்றிணைவார்கள் என்று குறிப்பிட்ட அவர், 2026இல் அதிமுகவின் புதிய வரலாறு எழுதப்படும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

News December 5, 2024

வாடகைக்கு BOY FRIENDS.. வேகமாக பரவும் கலாச்சாரம்!

image

வியட்நாமில் BOY FRIENDS-களை வாடகைக்கு விடும் தொழில் தற்போது கொடிகட்டி பறக்கிறது. உருவம், தோற்றத்துக்கு ஏற்ப, அவர்களின் வாடகைத் தொகை இருக்கும். “எப்போ கல்யாணம்” என நச்சரிக்கும் தங்கள் பெற்றோரை சமாளிப்பதற்காகவே பாய் ஃப்ரண்டுகளை பெண்கள் வாடகைக்கு எடுக்கிறார்கள். கல்யாண பேச்சு எழுந்தால், வாடகை பாய் ஃப்ரண்டுகளை காட்டி, தாங்கள் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக கூறி பெண்கள் சமாளித்து விடுகிறார்களாம்.

News December 5, 2024

அந்த பையனுக்கு பயம் இல்ல: ஸ்டார்க்

image

ஜெய்ஸ்வால் இன்றைய தலைமுறையின் பயமறியாத முக்கிய இளம் வீரர்களில் ஒருவர் என ஆஸி. பவுலர் மிட்செல் ஸ்டார்க் புகழ்ந்துள்ளார். ஜெய்ஸ்வால் இந்தியாவிற்காக நீண்ட காலம் விளையாடுவார் என்றும், சூழலுக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்து கொள்ளும் திறன் அவரிடம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், தன்னுடைய பவுலிங் மெதுவாக வருவதாக ஜெய்ஸ்வால் கூறியது, உண்மையிலேயே தனக்கு கேட்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

News December 5, 2024

நவம்பரில் அதிகம் விற்கப்பட்ட கார் இதுதான்

image

இந்திய மார்க்கெட்டில் SUV மாடல் கார்களின் ஆதிக்கத்தை மாருதி சுசூகியின் Baleno உடைத்துள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 16,293 Baleno கார்கள் விற்பனையாகியுள்ளன. அதற்கு அடுத்த இடங்களில் Creta 15,452, Tata Punch 15,435, Tata Nexon 15,239 கார்களை விற்பனை செய்துள்ளன. Baleno, Creta, Punch, Nexon, Ertiga, Brezza, Fronx, Swift, Wagon R, Scorpio முதல் 10 இடங்களை பிடித்துள்ளன.

News December 5, 2024

NO பேனர், NO கட் அவுட்.. DMK

image

CM, Dy CM, அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியின்போது, போக்குவரத்து, மக்களுக்கு இடையூறாக பேனர்கள், கட் அவுட், பிளக்ஸ் போர்டு வைக்கக்கூடாது என்று கட்சியினருக்கு திமுக தலைமை தடை விதித்துள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதமும் இதேபோல் அறிவிப்பு வெளியானது. இருந்தபோதிலும், திமுகவினர் தங்களது செல்வாக்கை தலைமைக்கு காட்ட, பேனர்கள் வைத்தனர்.

News December 5, 2024

கன்னிப்பெண்ணாக மாற ₹16 லட்சம் செலவு

image

பிரேசிலை சேர்ந்த இன்ஃப்ளூயென்சரான ரவேனா ஹன்னீலி தான், இப்போது இணைய வைரல். ஆம், ₹16 லட்சம் செலவில் கன்னித்தன்மையை திரும்பப் பெறும் hymenoplasty சர்ஜரியை செய்துகொள்ள போவதாக அறிவித்திருக்கிறார். தன் சுயமதிப்பை மீட்டெடுக்கவும், தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கவும் இம்முடிவுக்கு வந்துள்ளாராம். இந்தியாவிலும் இந்த சர்ஜரி செய்துகொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

News December 5, 2024

ரசிகை மரணம்.. அல்லு அர்ஜுன் மீது பாய்ந்த வழக்கு

image

ஹைதராபாத்தில் ‘புஷ்பா 2’ பார்க்கச் சென்ற பெண், கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்ததோடு, அவரது 9 வயது மகன் படுகாயமடைந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக படக்குழு, தியேட்டர் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். ப்ரீமியர் காட்சியை அல்லு அர்ஜுன் காண சென்றதால் தான் அவ்வளவு கூட்டம் கூடியது குறிப்பிடத்தக்கது.

News December 5, 2024

பொன்முடிக்கு நடந்ததை அனுமதிக்க முடியாது: ராமதாஸ்

image

அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க பல்வேறு வழிகள் உள்ளன, அதனால் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி அடித்ததை அனுமதிக்க முடியாது என ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயலின் போது மக்களின் துயர் புரியாமல் அரசு நடந்து கொண்டதே இதற்கு காரணம் என்பதை, அரசும் உணர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். விழுப்புரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்றபோது பொன்முடி மீது சேறு வீசப்பட்டது.

News December 5, 2024

மத்தியில் BJP, மாநிலத்தில் DMK.. இது எப்படி இருக்கு?

image

மத்தியில் மோடி ஆட்சி, தமிழ்நாட்டில் திமுக ஆட்சி வேண்டும் என அமைச்சர் சேகர்பாபு முன்னிலையில் மதுரை ஆதீனம் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியை வீழ்த்தவே, INDIA கூட்டணியை திமுக ஆதரித்து வருகிறது. மேலும், மாநில உரிமையை பறிப்பதாகவும், ஹிந்தி திணிப்பதாகவும் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகிறது. இப்படியான சூழலில், அதற்கு நேர் எதிராக ஆதீனம் பேசியுள்ளது, சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 5, 2024

GRAP – 4 கட்டுப்பாடுகளை தளர்த்தலாம்: SC

image

டெல்லி காற்றின் தரம் மேம்பட்டதால் அமலில் இருக்கும் GRAP-4 கட்டுப்பாடுகளை தளர்த்திக் கொள்ளலாம் என SC தெரிவித்துள்ளது. காற்றின் தரம் மாறுபட இந்த GRAP கட்டுப்பாடுகளும் தீவிரமாகும். பஞ்சாப், ஹரியானாவில் விவசாயிகள் பயிர் கழிவுகளுக்கு தீ வைப்பதை தடுத்ததால் டெல்லி NCR பகுதிகளில் காற்றின் தரம் மேம்பட்டதாக நாடாளுமன்றத்தில் அமைச்சகம் தெரிவித்தது. தற்போது காற்றின் தரம் (AQI) 161 Moderate அளவில் உள்ளது.

error: Content is protected !!