India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணிரத்னத்துடனான மண வாழ்க்கை குறித்து சுஹாசினி பேட்டி அளித்துள்ளார். 2 பேரும் பரஸ்பரம் பிறருக்கு மதிப்பு அளிப்போம் என்றும், இதனால் 2 பேர் இடையே இதுவரை பெரிய அளவில் கருத்து வேறுபாடு வந்ததில்லை என்று அவர் கூறியுள்ளார். 2 பேரும் இணைந்தே படங்களுக்கு வசனம் எழுதி இருப்பதாக தெரிவித்துள்ள சுஹாசினி, திருடா திருடி, இருவர், ராவணா, ரோஜாவுக்கு தானே அதிகாரபூர்வ வசனகர்த்தா என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இன்று (அக். 26) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
▶அக். 26 (ஐப்பசி 9) ▶ சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM▶கெளரி நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM▶குளிகை: 6:00 AM – 7:30 AM▶ திதி: தசமி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு▶ பரிகாரம்: தயிர்▶ நட்சத்திரம்: ஆயில்யம் ▶சந்திராஷ்டமம்: மூலம், பூராடம். SHARE பண்ணுங்க.
நியூசி. தொடருக்கு எதிராக கோலி சரியாக தயாராகவில்லை என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே விமர்சித்துள்ளார். டெஸ்ட் தொடருக்கு முன்பாக உள்ளூர் போட்டிகளில் கோலி விளையாடி இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். துலீப், ரஞ்சி போட்டிகளில் விளையாடுவது வலைப்பயிற்சி எடுப்பதை விட அவருக்கு அதிகம் உதவியிருக்கும் என்றார். கோலி விரைவில் மீண்டு வர வேண்டும் எனவும் விருப்பம் தெரிவித்தார்.
தனிமையில் இருப்பது, மனச்சோர்வு & மன இறுக்கப் பாதிப்பை 30% அதிகப்படுத்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. USA உளவியல் சங்கம் உலகளவில் 6 லட்சம் பேரிடம் நடத்திய ஆய்வில், சமூகத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதில் விருப்பம் இல்லாமல் இருப்பவர்களின் மனநலனை கடுமையாக பாதிப்படைகிறது என்றும் அவர்களில் 29% பேர் அல்சைமர், 15% அறிவாற்றல் குறைபாடு பாதிப்புறும் வாய்ப்புகள் அதிகம் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியா, தெ.ஆப்பிரிக்கா இடையேயான 4 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நவ.8இல் டர்பனில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சூரியகுமார் தலைமையிலான அணியில் சஞ்சு சாம்சன், அபிசேக், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா, ஹர்திக் பாண்டியா, அக்சார் படேல், ரமன்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ரவி பிஸ்னோய், அர்ஸ்தீப் சிங், விஜயகுமார் வைசாக், ஆவேஷ் கான், யாஷ் இடம்பெற்றுள்ளனர்.
டெல்லியில் பாத யாத்திரை சென்றபோது கெஜ்ரிவால் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. விகாஸ்புரியில் கெஜ்ரிவால் பாத யாத்திரை சென்றபோது திடீரென புகுந்த கும்பல் ஒன்று அவரை தாக்கியதாக டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். தேர்தலில் ஆம் ஆத்மியை தோற்கடிக்க முடியாது என்பதை புரிந்து கொண்டு கெஜ்ரிவாலை கொல்ல பாஜக முயற்சிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
ஆஸி. அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டித் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 22இல் பெர்த்தில் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. 5 டெஸ்ட் போட்டிகளுக்கும் கேப்டனாக ரோஹித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். நிதிஷ்குமார் ரெட்டி, ஹர்சித் ரானாவுக்கு முதல்தடவையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ருதுராஜூக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. பும்ரா துணை கேப்டனாக நீடிப்பார் எனக் கூறப்பட்டுள்ளது.
நாள் முழுவதும் டி.வி, லேப்டாப், மொபைல் போன்றவற்றிலேயே பொழுதை கழிப்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது பெரும் சவாலானது. உடல் அசதியாக இருந்தாலும் கண் எரிச்சல் இருப்பதால் எளிதில் தூக்கம் வருவதில்லை. அதனால், உறங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல், டி.வி பயன்பாட்டை நிறுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசியுங்கள். நிம்மதியான உறக்கத்தை பெறலாம். தூக்கம் வர வேறு ஏதேனும் யோசனை இருக்கா?
➤மேஷம் – புகழ்
➤ரிஷபம் – இன்பம்
➤மிதுனம் – உதவி
➤கடகம் – பொறுமை
➤சிம்மம் – பாராட்டு
➤கன்னி – ஏமாற்றம்
➤துலாம் – வெற்றி
➤விருச்சிகம் – சோதனை
➤தனுசு – அலைச்சல் ➤மகரம்- மேன்மை
➤கும்பம் – சுபம் ➤மீனம் – நன்மை
Sorry, no posts matched your criteria.