News October 26, 2024

விளையாட்டு துளிகள்

image

➤உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: U-23 மகளிர் ‘பிரீஸ்டைல்’ 53 Kg பிரிவில் இந்திய வீராங்கனை அஞ்லி, வெள்ளிப்பதக்கம் வென்றார். ➤உலக செஸ் தரவரிசையில் இந்திய வீரர் அர்ஜுன் 2802.1 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தைப் பிடித்தார். ➤ஜோகர் கோப்பை: இந்தியா, நியூசிலாந்து ஹாக்கி (U 21) அணிகள் மோதிய கடைசி லீக் போட்டி 3-3 என ‘டிரா’ ஆனது. ➤AUS டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் ரோஹித் ஷர்மா தலைமையிலான IND அணி அறிவிக்கப்பட்டது.

News October 26, 2024

இஸ்ரேலுக்கு அமெரிக்கா திடீர் எச்சரிக்கை..!

image

இஸ்ரேலுக்கு அதன் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்கா எச்சரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் தாக்குதலுக்கு பதிலடியாக அந்நாட்டின் மீது இஸ்ரேல், இன்று அதிகாலை முதலாக கொடூரத் தாக்குதலை நடத்தி வருகிறது. ஈரானின் எண்ணெய் கிணறுகள் சிதறடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், ஈரானில் உள்ள அணு உலைகள் மீது எக்காரணம் கொண்டும் தாக்குதல் நடத்தக் கூடாது என இஸ்ரேலை அமெரிக்கா எச்சரித்துள்ளது.

News October 26, 2024

FLASH: நாளை ரேஷன் கடைகள் திறந்திருக்கும்

image

ரேஷன் கடைகள் நாளை (ஞாயிறு) திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகிற 31ஆம் தேதி தீபாவளி ஆகும். அதனை முன்னிட்டு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை தங்குதடையின்றி மக்கள் வாங்க ரேஷன் கடைகள் நாளை திறந்திருக்கும் என்றும், அதற்கு பதிலாக நவம்பர் 16இல் அக்கடைகளுக்கு விடுமுறை நாள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

News October 26, 2024

சனிதோஷம் நீங்க இதை செய்யுங்க

image

சனி பகவான் அருள் பெற சாதத்தில் சிறிதளவு தயிர் கலந்து பிசைந்து, கருப்பு எள் சேர்த்து உருண்டைகளாக உருட்டி காகத்திற்கு வைத்துவிட்டு சாப்பிடுவது சனி தோஷத்தை நீக்கும். அதேபோல், கருப்பு துணிக்குள் ஒரு ரூபாய் நாணயம் வைத்து, கல்லுப்பு போட்டு, கிழக்கு பார்த்து நின்று 7 முறை திருஷ்டி கழியுங்கள். இதை 21 சனிக்கிழமை செய்தால் துரதிர்ஷ்டங்கள், சனி தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம். SHARE IT

News October 26, 2024

மாங்கல்ய தோஷம் போக்கும் ஸ்ரீகருடாழ்வார்

image

பெண்களின் ஜாதகத்தில் 8ஆம் வீட்டில் ராகு இருந்தால் அதனை மாங்கல்ய தோஷம் என்று சாஸ்திரம் கூறுகின்றது. அத்தகைய தோஷம் உள்ள பெண்கள், சனிக்கிழமை அதிகாலையில் நீராடி, விரதமிருந்து பெருமாள் கோயிலுக்கு சென்று விஷ்ணுவின் ‘சங்கர்சண’ அம்சமாக திகழும் கருடனுக்கு குங்கும அர்ச்சனை செய்து, மரிக்கொழுந்து மாலை சாற்றி, நெய் விளக்கேற்றி, ஸ்ரீகருட காயத்ரி மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

News October 26, 2024

‘லப்பர் பந்து’ படக்குழுவை வாழ்த்திய சிம்பு

image

நடிகர் சிம்பு ‘லப்பர் பந்து’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார். தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், தினேஷ், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. குறைந்த பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.. இந்நிலையில், இப்படத்தை பார்த்த சிம்பு படக்குழுவை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News October 26, 2024

ஆதாரை எத்தனை முறை திருத்தலாம்?

image

ஆதாரில் எத்தனை முறை திருத்தம் மேற்கொள்ளலாம் என தெரிந்து காெள்வோம்.
* பெயர் – 2 முறை மட்டுமே திருத்த முடியும் * முகவரி – எத்தனை முறை வேண்டுமானாலும் திருத்தலாம் * பிறந்த தேதி – ஒருமுறை மட்டுமே திருத்தலாம் * பாலினம் – ஒருமுறை மட்டும் திருத்தலாம் * புகைப்படம் – எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம் * செல்போன் எண் – எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம். SHARE IT

News October 26, 2024

இந்த எண்களில் இருந்து CALL வருகிறதா? இதை செய்யுங்க

image

மொபைல் அழைப்பு மூலம் மோசடி நடைபெறுவதை தடுக்க டிராய் அவ்வப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வரிசையில், +697 மற்றும் +698 எண்களில் இருந்து அழைப்புகள் வந்தால் எச்சரிக்கையாக இருக்கும்படியும், உடனே அந்த எண்களை பிளாக் செய்துவிடும்படியும் வலியுறுத்தியுள்ளது. அப்படி செய்யவில்லையெனில் மோசடி, மிரட்டலுக்கு ஆளாக நேரிடலாம் எனவும் டிராய் எச்சரித்துள்ளது. SHARE IT.

News October 26, 2024

காலையில் பீட்ரூட் ஜூஸ்.. இத்தனை பயன்களா

image

காலையில் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் பயன்களை தெரிந்து கொள்வோம்.
1) உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்
2) மலச்சிக்கலை போக்கி, செரிமானத்தை சீராக்கும்
3) அதிக ரத்த அழுத்தத்தை பீட்ரூட் ஜூஸ் குறைக்க வழிவகுக்கும்
4) சர்மத்தை பொலிவாக வைத்திருக்க உதவும்.
SHARE IT.

News October 26, 2024

மொபைலை ஏன் Reboot செய்ய வேண்டும்?

image

மொபைலிற்கு வரும் லிங்குகளை கிளிக் செய்யும்போது, அது நமக்கே தெரியாமல் மொபைலை முடக்கவும், பணத் திருட்டு போன்றவற்றுக்கும் வித்திடுவதாக NSA எச்சரிக்கிறது. இதேபோல் மர்ம செயலிகளும் பணத்தை திருடுகின்றன. இத்தகைய மோசடியில் தப்ப மொபைல் போனை வாரம் ஒருமுறை Reboot செய்ய NSA பரிந்துரைகிறது. அவ்வாறு செய்தால், மர்ம லிங்குகள், செயலிகள் செயல்படாது என NSA கூறுகிறது. SHARE IT.

error: Content is protected !!