India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
லட்சுமி கூரையை பிச்சிட்டு கொட்டுதுன்னு கேள்வி பட்டிருப்போம்ல அது கொல்லம் பால் வியாபாரி லைப்ல நிஜமாகியிருக்கு. கேரள அரசின் பூஜா பம்பரில் ₹12 கோடி விழுந்த JC 325526 நம்பருக்கு சொந்தக்காரர் கொல்லம் தினேஷ்குமார்(41) என்பது தெரியவந்துள்ளது. Tax போக ₹7.6 கோடி தினேஷுக்கு கிடைக்கும். ஓவர் நைட்டில் கோடீஸ்வரரான அவருக்கு வாழ்த்து கூற உறவினர்கள் படையெடுத்து வருகின்றனர்.
‘சூர்யா 45’ படத்தில் த்ரிஷா வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ‘கங்குவா’ படத்தைத் தொடர்ந்து, ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். முதற்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடி இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், முதற்கட்ட படப்பிடிப்பு டிச. 23ஆம் தேதி நிறைவடைகிறதாம்.
வங்கிகளுக்கு RBI அளிக்கும் கடன் வட்டி விகிதமான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ஆளுநர் சக்தி காந்ததாஸ் தெரிவித்துள்ளாா். ரெப்போ வட்டி விகிதம் தற்போது 6.5%ஆக உள்ளது. கொரோனாவுக்குப் பின் ரெப்போ வட்டி விகிதம் கடுமையாக உயர்த்தப்பட்டதால், லோன் வாங்கியோர் அதிக வட்டி செலுத்தி வருகின்றனர். அவர்களுக்காக வட்டி விகிதம் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிர்ச்சியே மிஞ்சியிருக்கிறது.
1) மாங்கனீஸ் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது? 2) இந்தியாவின் நெப்போலியன் என அழைக்கப்பட்டவர் யார்? 3) NSE என்பதன் விரிவாக்கம் என்ன? 4) ISRO அமைப்பு எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 5) இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டர் யார்? 6) திருக்குறளில் இருமுறை வரும் அதிகாரம் எது? 7) புவிக்கும், பிராக்ஸிமா செண்டாரிக்கும் உள்ள தூரம் எவ்வளவு? விடைகளை கமெண்ட்டில் சொல்லுங்க. சரியான பதிலை 2 மணிக்கு பாருங்க.
இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் ஆஸி. வீரர்கள் கையில் கருப்பு பேண்ட் அணிந்துள்ளனர். உள்ளூர் தொடரில் விளையாடிய போது தலையில் பந்து தாக்கி உயிரிழந்த முன்னாள் ஆஸி. வீரர் பிலிப் ஹியூக்ஸின் 10-ம் ஆண்டு நினைவாக கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடவுள்ளனர். அவர் நினைவாக ஆவணப்படம் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது. போட்டி தொடங்கும் முன், அவருக்கு மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹200 குறைந்துள்ளது. நேற்று ₹57,120க்கு விற்கப்பட்ட ஒரு சவரன் தங்கம், இன்று ₹56,920க்கு விற்கப்படுகிறது. நேற்று ₹7,140ஆக இருந்த ஒரு கிராம் தங்கம், ₹25 குறைந்து. ₹7,115ஆக விற்கப்படுகிறது. வெள்ளியின் விலை மாற்றமின்றி கிராம் ₹101க்கு விற்பனையாகிறது.
வங்கதேசத்தின் முதல் அதிபரும், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபூர் ரஹ்மானின் படங்களை கரன்சி நோட்டுகளில் இருந்து அகற்ற அந்நாட்டின் இடைக்கால அரசு முடிவெடுத்துள்ளது. ‘வங்கதேசத்தின் தந்தை’ என அவர் போற்றப்பட்டு வந்தார். ஆனால், அவரை அவ்வாறு கருதவில்லை என முகமது யூனுஸ் அரசு தெரிவித்திருந்தது. 20, 100, 500 மற்றும் 1,000 மதிப்பிலான கரன்சியில் அவரது படம் அச்சிடப்படுகின்றன.
புஷ்பா 2 படத்தின் இடைவேளை முடிந்து சீட்டிற்கு திரும்பியவர்கள், திரையரங்கிற்குள் பரவிய மர்ம நச்சுப் புகையின் காரணமாக வாந்தி, இருமலுக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இது மும்பையின் பிரபல கெயிட்டி திரையரங்கில் நடந்துள்ளது. இதனால் படம் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நச்சுப் புகைக்கு யார் காரணமென தெரியாத நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்கள்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை RTI மூலம் கேட்ட கேள்விக்கு வழங்கிய பதில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதில், அரசு மூலம் வேலைவாய்ப்பு பெற்றவர்களில் எத்தனை பேர் ஆண்கள், பெண்கள், 3ம் பாலினத்தவர் என்ற விவரம் இல்லை என தெரிவித்துள்ளது. இந்த தகவல், அலுவலக பராமரிப்பு ஏட்டில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. முக்கிய துறையில் இந்த தகவல் கூட இல்லையா என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நிறுவனங்களின் லாபம் உயர்ந்தும் ஊழியர்களின் ஊதியம் உயரவில்லை என மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் கவலைத் தெரிவித்துள்ளார். இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்திய நிறுவனங்கள் வேலைவாய்ப்பை அதிகரிக்க இது சரியான தருணம் என்றார். கடந்த 4 ஆண்டுகளில் நிறுவனங்களின் வளர்ச்சி சிறப்பாக இருப்பதாகவும், ஆனால் ஊழியர்களுக்கு ஊதிய பலன் பலவீனமாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Sorry, no posts matched your criteria.