India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறு வயதில் சில உணவுகளை தவிர்த்தால் முதுமையில் கிட்னி நோய்கள் வராமல் தவிர்க்கலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனைகளை அளிக்கின்றனர். அவற்றை தெரிந்து கொள்ளலாம். *புரோட்டின் உணவுகளை அதிகம் உட்கொள்வதை தவிர்க்கவும் * டீ, காபியை அளவுக்கு அதிகம் அருந்துவதை கைவிடவும் * எண்ணெய் மற்றும் Fried உணவுகளை அதிகம் உட்கொள்ளக் கூடாது * மதுப்பழக்கத்தை கைவிட வேண்டும். SHARE IT.
இன்றைய திருக்குறள் மற்றும் அதற்கான விளக்க உரையை காணலாம்.
* குறள்: விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.
* விளக்க உரை: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.
SHARE IT.
விமான பயணிகள் தங்கள் பயணம் சிரமம் இல்லாமல் இருக்க வழிதேடுவது உண்டு. அதுபோன்ற நபர்களை குறிவைத்து, Lounge pass செயலி மூலம் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதை அறியாமல் சிலர் அந்த செயலியை பதிவிறக்கினால், மொபைலுக்கு வரும் Sms, அழைப்பு உள்ளிட்டவற்றை கண்காணித்து, அதைவைத்து வங்கி கணக்கில் உள்ள பணத்தை தானாக செயலி திருடுவதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலை மீண்டும் தாக்காமல் இருக்க ஈரான் நாடு நிபந்தனை விதித்துள்ளது. அக். 1இல் ஈரான் நடத்திய ஏவுகணை வீச்சுக்கு பதிலடியாக இஸ்ரேல் நேற்று திடீர் தாக்குதல் நடத்தியது. இதனால் மீண்டும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் தொடுக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் தாக்காமல் இருக்க காசா, லெபனானில் இஸ்ரேல் சண்டை நிறுத்தம் அறிவிக்க வேண்டுமென ஈரான் நிபந்தனை விதித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் அடுத்த 6 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் 30ம் தேதி வரை லேசான மழை பெய்யக்கூடும் என்றும், 31ம் தேதி, நவம்பர் 1ம் தேதியில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறியுள்ளது. சென்னையில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது. இந்தத் தகவலைப் பகிருங்கள்.
ஜெயிலர் படத்துக்கு இயக்குநர் KS ரவிக்குமார் வசனம் எழுதியதாக தகவல் பரவி வருகிறது. இதை KS ரவிக்குமார் மறுத்துள்ளார். ரஜினி தன்னிடம் படத்தின் கதையை சொன்னதாகவும், அப்போது 2 மாற்றங்களை செய்யும்படியே கூறியதாகவும், இதுதவிர வேறு எதையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார். செய்யாததை செய்ததாக கூறாமல், KSR இப்படி வெளிப்படையாக சொன்னதை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
புனே டெஸ்டில் ரிஷப் பண்டின் ரன் அவுட் பெரிய திருப்புமுனை என்று இந்திய அணி முன்னாள் வீரர் மதன் லால் தெரிவித்துள்ளார். ஆட்டத்தின் போக்கையே மாற்றும் திறன் கொண்டவர் பண்ட் என்றும், அவரின் ரன் அவுட், ஆட்டத்தின் போக்கையே மாற்றி விட்டது என்றும் அவர் கூறியுள்ளார். இந்திய பந்துவீச்சாளர்கள் உலக தரம் கொண்டவர்கள். ஆனால் பேட்ஸ்மேன்கள் தோல்வியடைந்து விட்டனர் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினுக்கு “தமிழ்த்தாய் வாழ்த்து” தெரியாது என்று அதிமுக கிண்டலடித்துள்ளது. தலைமை செயலக நிகழ்ச்சியில் உதயநிதி முன்பு, அப்பாடல் தவறாக பாடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து பேசிய அதிமுக அமைப்பு செயலாளர் ஜெயக்குமார், 2 முறையும் தவறாகவே அப்பாடல் பாடப்பட்டது. ஆனால் அதுகூட உதயநிதிக்கு தெரியவில்லை. 2ஆவது முறை சரியாக பாடப்பட்டதாக நினைத்து சென்றுவிட்டார் என்று விமர்சித்துள்ளார்.
விண்வெளியில் பூமியை நோக்கி 5 எரிகற்கள் வேகமாக வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். அந்த 5 எரிகற்களும் பூமியை நாளைக்குள் கடக்கக்கூடும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது. அந்த 5 எரிகற்களில் ஒரு கல் மட்டும் மிகவும் பிரமாண்டது என்றும், அது பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்புக்கு இணையாக 500 அடி உயரம் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.
திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை பெற்று கொள்ள ஆசைப்படுவதாக பிரபல நடிகை ராசி கன்னா தெரிவித்துள்ளார். தமிழில் அடங்க மறு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், திருமண எதிர்பார்ப்பு குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர், திருமணம் செய்வது, குழந்தை பெறுவது ஆகியவற்றிற்கு நேரம் உள்ளது. அத்துடன் அது தமது தனிப்பட்ட விவகாரம் என்பதால் பொது வெளியில் பேச விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.