News October 27, 2024

விளையாட்டு துளிகள்

image

➤சுல்தான் கோப்பை: இந்திய ஹாக்கி அணி 3-2 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது. ➤U23 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்: பிரீஸ்டைல் 57 Kg பிரிவில் சீனாவின் ஜங்கை இந்தியாவின் நேஹா வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றனர். ➤ISL கால்பந்து லீக் போட்டியில் வடகிழக்கு அணி 5-0 என்ற கோல் கணக்கில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தியது. ➤புரோ கபடி லீக்: மும்பை – பெங்கால் ஆட்டம் சமனில் முடிந்தது.

News October 27, 2024

தமிழகம் முழுவதும் டோல்கேட் கட்டணம் இல்லை..!

image

தீபாவளியை முன்னிட்டு, 4 நாட்கள் விடுமுறை வருவதால் லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர் செல்வார்கள். இந்த நேரத்தில், டோல்கேட்டுகளில் பெருமளவில் நெரிசல் ஏற்படும். இதன் காரணமாக, தமிழக அரசின் பரிந்துரையின் பேரில் 29, 30 தேதிகளில் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டநெரிசல் அதிகமாக இருந்தால், டோல்கேட்டுகளில் கட்டணம் வசூலிப்பதை தவிருங்கள் என நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. Share It.

News October 27, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

➤சூடானின் அல்-கம்லின் பிராந்தியத்தில் துணை ராணுவப்படை கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். ➤ஜப்பானில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற அமெரிக்க ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. ➤ஈராக்கின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த நிசார் அமேதி பதவியை ராஜினாமா செய்தார். ➤உக்ரைனின் டினிப்ரோ நகரில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் பல கட்டடங்கள் தரைமட்டமாகின.

News October 27, 2024

திருமண வரம் அருளும் ஆதிவராகர்

image

திருமங்கை ஆழ்வாரால் பாடப்பெற்ற புகழைக் கொண்டது திருவிடந்தை நித்திய கல்யாண பெருமாள் கோயில். கி.பி.1052இல் வீரராசேந்திர சோழரால் நிர்மாணிக்கப்பட்டு முதல் வைணவத் திருக்கோயில் இது. திருமணமாகாத ஆண்களும், பெண்களும் இத்தலத்திற்கு வந்து கல்யாண தீர்த்தங்களில் நீராடி, ஆதிவராகர்-அகிலவல்லி நாச்சியாரை சேவித்து மாலையணிந்து, 9 முறை வலம்வந்து வீடு திரும்பினால் விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை.

News October 27, 2024

‘அமரன்’ டிக்கெட் புக்கிங் தொடங்கியது!

image

‘அமரன்’ படத்திற்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியதாக ராஜ் கமல் நிறுவனம் அறிவித்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், தீபாவளி ரிலீஸாக அக். 31ஆம் தேதி திரைக்கு வருகிறது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகும் இப்படம் வசூலை குவிக்கும் எனக் கூறப்படுகிறது. பிரதர், பிளடி பெக்கர், லக்கி பாஸ்கர் ஆகிய படங்களின் புக்கிங்கும் தொடங்கியுள்ளது.

News October 27, 2024

இதை செய்தால் சிறுநீரக கல் வெளியேறும்

image

சிறுநீரக கல்லை அறுவை சிகிச்சை செய்யாமலேயே வெளியேற்ற முடியும். இதுகுறித்து இயற்கை மருத்துவர்களின் ஆலோசனைகளைத் தெரிந்து கொள்ளலாம். வெறும் வயிற்றில் வாழைத் தண்டு ஜூஸ் குடித்து வந்தால், சிறுநீரகத்தில் உள்ள கல் தானாக வெளியேறி விடும். அதேபோல், பீன்ஸை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தாலும் சிறுநீரக கல் வெளியேறும். இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்க.

News October 27, 2024

தமிழக மீனவர்கள் 12 பேர் சிறைபிடிப்பு

image

தமிழக மீனவர்கள் 12 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. நெடுந்தீவு அருகே கடலில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படை அவர்களை படகுடன் சிறைபிடித்தது. இலங்கை கடற்படையின் செயலால் தமிழக மீனவர்கள் கவலை அடைந்துள்ள நிலையில், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை வலுத்துள்ளது.

News October 27, 2024

தவெக தொண்டர்களுக்கு விஜய் வேண்டுகோள்

image

எக்ஸ் பக்கத்தில் தவெக தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து விஜய் பதிவிட்டுள்ளார். அதில், மாநாட்டுப் பயணப் பாதுகாப்பில் அனைவரும் கவனமாக இருக்க வேண்டும். இருசக்கர வாகனப் பயணத்தை தவிர்த்தல் நன்று என்று கூறியுள்ளார். மாநாட்டுக்கு வருவோர் பொதுமக்கள், போக்குவரத்திற்கு இடையூறு செய்யாமல் வரவேண்டும். மாநாட்டில் மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

News October 27, 2024

EPFO நம்பர் தெரியலையா? இதை செய்யுங்க போதும்

image

EPFO UAN நம்பரை சிலர் மறந்து இருப்பர். அதை நினைத்து கவலைப்பட வேண்டாம். EPFO கணக்கில் பதிவு செய்த மொபைல் எண்ணில் இருந்து, EPFOHO TAM என்று டைப் செய்து 7738299899 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். அப்படி அனுப்பியதும், உங்கள் எண்ணுக்கு EPFO UAN எண், பண இருப்பு SMS ஆக வரும். அதேபோல், 01122901406 எண்ணுக்கு missed கால் செய்தாலும் UAN எண், பண இருப்பு விவரம் SMS ஆக உங்கள் எண்ணுக்கு வரும். SHARE IT

News October 27, 2024

ALERT: ரேஷன் கடைகள் இன்று திறந்திருக்கும்

image

ரேஷன் கடைகள் இன்று (அக்.27) திறந்திருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வருகிற 31ஆம் தேதி தீபாவளி ஆகும். அதனை முன்னிட்டு அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை தங்குதடையின்றி மக்கள் வாங்க ரேஷன் கடைகள் இன்று திறந்திருக்கும் என்றும், அதற்கு பதிலாக நவம்பர் மாதம் 16இல் அக்கடைகளுக்கு விடுமுறை நாள் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

error: Content is protected !!