India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று ஒட்டுமொத்த தமிழகத்தின் கவனமும் விஜய்யின் தவெக முதல் மாநில மாநாடு மீது தான். இம்மாநாட்டில் கொடி ஏற்றிய பிறகு, 6 மணியில் துவங்கி சுமார் 2 மணி நேரம் விஜய் உரையாற்றுவார் எனப்படுகிறது. இன்று மாலை இதே நேரத்தில் தான் சன் டிவியில் ரஜினி நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட்டான “ஜெயிலர்” படம் ஒளிபரப்படவுள்ளது. விஜய் மீதான கவனத்தை திசைத் திருப்பவே இது என நெட்டிசன்கள் சிலர் கூறுகின்றனர். உங்க கருத்து என்ன?
தவெக மாநாட்டு நிகழ்ச்சிகள் சற்று நேரத்தில் தொடங்கவுள்ளது. மாநாட்டு திடலில் 90% இருக்கைகள் நிரம்பியதால், நிகழ்ச்சியை முன் கூட்டியே தொடங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் விஜய் மேடைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தவெக மாநாட்டு திடலுக்கு சாரை சாரையாக தொண்டர்கள் தொடர்ந்து வந்துக் கொண்டிருக்கின்றனர். இதனால், சென்னை – திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இன்று 11 மணிக்கு <<14464899>>GK<<>> வினா-விடை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள் இவையே. 1) மாஜுலி (இந்தியா) 2) Meter Kilogram Second 3) தாலின் 4) தெய்வமகன் – 1969 5) மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதி 6) ஹீலியம் 7) ஜேம்ஸ் கிரெய்க்டன் 8) வௌவால். இதுபோன்ற அறிவார்ந்த தகவல்களை பெற Way2News-ஐ தொடர்ந்து படியுங்கள். இன்றைய கேள்விகளுக்கு நீங்கள் எத்தனை சரியான பதிலளித்தீர்கள் என இங்கே கமெண்ட்டில் சொல்லுங்கள்.
தலைவர்கள் பற்றியோ, தனிநபர்கள் பற்றியோ விஜய் உரையில் தாக்குதல் இருக்காது எனத் தகவல் வெளியாகியுள்ளது. தவெக மாநில மாநாட்டில் உரையாற்றும் அவர், ஊழலுக்கு எதிராக நிறைய கருத்துகளை முன்வைப்பார் எனவும், சில ஊழல் விவரங்களை பட்டியலிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், பெரியார் கருத்துகளை முன்மொழியும் விதமாக பெண் விடுதலை, பெண்களுக்கான அதிகாரம் குறித்து பேசுவார் எனக் கூறப்படுகிறது.
TVK மாநாட்டுக்கு சென்ற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். திருச்சியில் இருந்து மாநாட்டுக்கு 6 பேருடன் சென்ற கார், உளுந்தூர்பேட்டை அருகே சாலையின் தடுப்பில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் TVK திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணித் தலைவர் சீனிவாசன், துணைத் தலைவர் கலை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த இருவர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழில் குழந்தைகளுக்காக எழுதப்படும் சிறப்பு நூல்கள் மிகக் குறைவு. குறிப்பாக சிறாருக்கு இலக்கியத்தை அறிமுகப்படுத்தும் நூல்கள் பெருமளவில் இல்லை என்றே சொல்லலாம். அந்தக் குறையைப் போக்கும் வகையில் சிறார்களுக்கான கதைகளை செந்தில் ஜெகன்நாதன் எழுதி வருகிறார். அவரது கதைகளை ‘கதைகளில் பேசும் குழந்தைகள்’ என்ற பெயரில் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் பிஞ்சுகளின் மனதில் நீதிநெறியை விதைக்கும் நூலாக வெளியிட்டுள்ளது.
உதயநிதிக்கு தான் கொடுக்கும் பொறுப்புகளை பயிற்சியாகப் பார்ப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டியின் பரிசளிப்பு விழாவில் பங்கேற்று பேசிய அவர், உதயநிதி ஒவ்வொரு டெஸ்டிலும் சென்டம் ஸ்கோர் செய்வதாகப் பாராட்டினார். மேலும், உலக புரட்சி வரலாற்றைப் பேசி வளர்ந்த இயக்கம் திமுக எனவும், பேசிப் பேசியே வளர்ந்த இயக்கம் என்ற பெருமையை கொண்டிருப்பதாகவும் கூறினார்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சோம்பு, பட்டை, ஏலக்காய், கிராம்பு, சின்ன வெங்காயம், தக்காளி போட்டு தாளித்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும். இவற்றுடன் தனியே வேக வைத்த ஆட்டுக்குடல் துண்டுகள், மஞ்சள், உப்பு, பூண்டு, இஞ்சி, கசகசா போடவும். அதில் தேங்காய், ப.மிளகாய், முந்திரி ஆகியவற்றை மிக்சியில் மைய அரைத்து ஊற்றவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, மல்லித்தழை தூவி இறக்கினால் சுவையான குடல் குழம்பு ரெடி.
*2008: ஈழத்தமிழர்களுக்காக கருப்பு சட்டை அணிந்து ரசிகர்களுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருந்தார் விஜய். *2009: விஜய் மக்கள் இயக்கம் உருவானது. அதே ஆண்டில் புதுச்சேரியில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் தேவையான நேரத்தில் அரசியலுக்கு வருவதாக விஜய் பேசியிருந்தார். *2009: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியைச் சந்தித்து பேசினார். *2011: அன்னா ஹசாரேவின் ஊழல் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு அளித்தார்.
*2011: சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு அளித்தது. *2014: பிரதமர் வேட்பாளர் மோடியை சந்தித்து பேசினார். *2018: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கம் மூலம் நேரடி நிதியுதவி வழங்கப்பட்டது. *2024: தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்குவதாக பிப். 2ஆம் தேதி அறிவித்தார். பெரும் எதிர்பார்ப்புடன் தவெக முதல் மாநில மாநாடு இன்று மாலை நடைபெறுகிறது.
Sorry, no posts matched your criteria.