News December 7, 2024

சனிக்கிழமையில் சுதர்சனரை வணங்கினால்…

image

மகாவிஷ்ணுவின் கையில் உள்ள சுதர்சனச் சக்கரத்தை ஸ்ரீசக்கரத்தாழ்வார் என்று விஷ்ணு புராணம் போற்றுகிறது. அரங்கனுக்கு உகந்த சனிக்கிழமைகளில் விரதமிருந்து கோயிலுக்குச் சென்று, சக்கரத்தாழ்வாருக்கு துளசி சாத்தி, நெய் விளக்கேற்றி சந்நிதியை 12 முறை வலம் வந்து ‘ஓம் சுதர்ஸனாய வித்மஹே ஜ்வாலா சக்ராய தீமஹி தன்னோ: சக்ர ப்ரசோதயாத்’ என்ற ரதாங்க மந்திரத்தை சொல்லி வேண்டினால் கிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

News December 7, 2024

மீண்டும் கனமழை எச்சரிக்கை

image

ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து தமிழகம் இன்னும் மீளவில்லை. அதற்குள், வங்கக் கடலில் இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருக்கிறது. இதன் காரணமாக, வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆனால், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக வலுப்பெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 7, 2024

ஆபாசமாக நடித்தேனா? ஷாலினி பாண்டே விளக்கம்

image

அர்ஜுன் ரெட்டி படத்தில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலினி பாண்டே. பாலிவுட்டில் அமீர்கானின் மகன் ஜுனைத் கான் கதாநாயகனாக அறிமுகமான ‘மகாராஜ்’ படத்தில் இவர் ஆபாசமாக நடித்து இருந்ததாக சர்ச்சைகள் கிளம்பின. இது குறித்து முதல் முறையாக விளக்கமளித்த அவர், “கதாபாத்திரம் உண்மைத்தன்மையோடு இருக்க வேண்டும் என்று நினைத்து அப்படி நடித்தேன். ஆனால், தற்போது அது எனக்கு நெருடலாக இருக்கிறது” என்றார்.

News December 7, 2024

புத்தரின் பொன்மொழிகள்

image

✍பகைமையை அன்பினால் மட்டுமே தணிக்க முடியும். ✍மூடனை பிறர் அழிக்க வேண்டியதில்லை; அவன் தன்னைத் தானே அழித்துக்கொள்வான். ✍நிம்மதியை அடைய ஒன்று விட்டு கொடுங்கள் இல்லையென்றால் விட்டு விடுங்கள். ✍உண்மையை அழிக்கும் ஆற்றல் யாருக்கும் இல்லை. ✍ஒன்று விட்டு கொடு; இல்லையென்றால் விட்டு விலகு. ✍போரை வெல்வதைக் காட்டிலும் சிறந்தது உன் மனதை நீ வெற்றி கொள்வது. ✍தீமையை நன்மையாலும், பொய்யை உண்மையாலும் வெல்லுங்கள்.

News December 7, 2024

ஃபைனலுக்கு முன்னேறிய இந்திய அணி

image

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ஃபைனலுக்கு IND அணி முன்னேறியுள்ளது. ஷார்ஜாவில் நேற்று நடந்த அரையிறுதியில், முதலில் பேட் செய்த SL அணி 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 174 ரன்கள் இலக்குடன் பேட் செய்த IND அணி 21.4 ஓவர்களில் 175 ரன்கள் எடுத்து வென்று ஃபைனலுக்கு முன்னேறியது. துபாயில் டிச.,8இல் நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா – வங்கதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

News December 7, 2024

இன்றைய நல்ல நேரம்!

image

▶டிச. – 07 ▶கார்த்திகை – 22 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:45 AM – 11:45 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை ▶முகூர்த்தம்: இல்லை ▶சந்திராஷ்டமம்: புனர்பூசம் & பூசம் ▶நட்சத்திரம்: அவிட்டம்.

News December 7, 2024

30 நொடிகளில் உலகைச் சுற்றி…

image

▶பாகிஸ்தானின் சவுத் வசீரிஸ்தான் பகுதியில் பதுங்கி இருந்த 8 தீவிரவாதிகளை அந்நாட்டின் ராணுவம் சுட்டு கொன்றது. ▶ரூபாய் நோட்டுகளில் இருந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் படத்தை நீக்க, வங்கதேச அரசு முடிவு செய்துள்ளது. ▶2027இல் பதவிக்காலம் முடியும் வரை பதவியில் நீடிப்பேன் என பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தெரிவித்தார். ▶கலிபோர்னியாவின் கடலோர பகுதியில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகி உள்ளது.

News December 7, 2024

சூரிக்கு ஜோடியாக நடிக்கும் ஐஸ்வர்ய லக்ஷ்மி

image

மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி. தமிழில் ஜகமே தந்திரம், PS 1 & 2, தக் லைப் போன்ற படங்களில் நடித்துள்ள அவர், ‘விலங்கு’ வெப் தொடர் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கவுள்ள புதிய படமொன்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் அவர் சூரிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

News December 7, 2024

அல்ட்ராடெக் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய CCI

image

இந்தியா சிமெண்ட்ஸை கையகப்படுத்துவது தொடர்பாக அல்ட்ராடெக் நிறுவனத்திற்கு இந்திய சந்தை போட்டி ஆணையம் (CCI) நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ₹1,900 கோடி மதிப்பில், இந்தியா சிமெண்ட்ஸின் 23% பங்குகளை அல்ட்ராடெக் வாங்கியுள்ளது. இந்நிலையில், நிறுவன கையகப்படுத்தல் நடவடிக்கை குறித்து ஏன் விசாரணை நடத்தக்கூடாது என CCI கேட்டுள்ளது. நோட்டீஸூக்கு 15 நாட்களுக்குள் பதிலளிக்க இரு நிறுவனங்களும் பதிலளிக்க வேண்டும்.

News December 7, 2024

கிரியேட்டினின் அளவு குறைக்கும் மூக்கிரட்டை குடிநீர்

image

சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை மூக்கிரட்டையில் உள்ள போயரவினோனுக்கு இருப்பதாக நவீன மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன. எரிச்சலைப் போக்கி சிறுநீரைப் பெருக்கும் மூக்கிரட்டை தாவரத்தை நீரிலிட்டு, 10 நிமிடங்கள் கொதிக்க வைத்து வடிகட்டி, தேன் சேர்த்தால் மணமிக்க சுவையான, மூக்கிரட்டை டீ ரெடி. இந்த டீயை பருகினால், ரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவு குறையுமென என சித்தா டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.

error: Content is protected !!