News October 27, 2024

மதுரையில் தலைமை செயலக கிளை: TVK

image

தவெக ஆட்சிக்கு வந்தால், மதுரையில் தலைமை செயலகத்தின் கிளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது. அரசை மக்கள் எளிதில் அணுகும் வகையில், மதுரையில் உயர்நீதிமன்ற கிளை அமைக்கப்பட்டது போல், தலைமை செயலகத்தின் கிளை அங்கு அமைக்கப்படும் என இன்று நடைபெற்ற தவெகவின் முதல் மாநாட்டில் அறிவித்துள்ளது. இதுபோக, இன்னும் பல செயல்திட்டங்களையும் அக்கட்சி வெளியிட்டுள்ளது.

News October 27, 2024

அனிதாவை நினைவுகூர்ந்த விஜய்

image

விஜய்யின் 45 நிமிட பேச்சு தமிழக அரசியல் களத்தின் பல அம்சங்களை தொட்டுச் சென்றது. குறிப்பாக நீட் தேர்வு குறித்து அவர் பேசியது உணர்ச்சிகரமாக இருந்தது. தகுதி இருந்தும் நீட் தேர்வு காரணமாக சகோதரி அனிதாவை இழக்க நேர்ந்தது என்ற அவர், எனது சகோதரி வித்யாவை இழந்த போது ஏற்பட்ட அதே வலியை, சகோதரி அனிதா உயிரிழந்த போதும் நான் பெற்றேன் என்றார். ஆக, நீட் எதிர்ப்பிலும் தவெக தீவிரமாக ஈடுபடும் எனத் தெரிகிறது.

News October 27, 2024

திராவிட மாடல், மோடி மஸ்தான்: தாக்கிய விஜய்

image

தவெக மாநாட்டில் பேசிய விஜய், 2026 தேர்தலில் தவெக பெறும் வாக்குகள் ஒவ்வொன்றும் அணுகுண்டாக மாறும் என்று கர்ஜித்தார். திராவிட மாடல் ஆட்சி என மக்களை ஏமாற்றுகிறீர்கள். என்னதான் எங்களுக்கு நீங்கள் வர்ணம் பூச முயன்றாலும், மோடி மஸ்தான் வித்தை காட்டினாலும், அது எடுபடாது என்ற விஜய், பிளவுவாத அரசியல் நமது சித்தாந்த எதிரி. பெரியார், அண்ணா பெயரை சொல்லி கொள்ளையடிக்கும் ஒரு குடும்பம் நமது அரசியல் எதிரி என்றார்.

News October 27, 2024

தவெக ஆட்சிக்கு வந்தால் இதெல்லாம் நடக்கும்..! (4/4)

image

*ஆக்கிரமிக்கப்பட்ட சதுப்பு நிலங்கள், நீர்நிலைகள் மீட்கப்படும். *ஆவினில் கருப்பட்டி பால் வழங்கப்படும். *அரசு ஊழியர்கள் வாரம் இருமுறை கைத்தறி ஆடை அணிய உத்தரவிடப்படும். *காமராஜர் மாதிரி பள்ளிகள் உருவாக்கப்படும். *தகவல் தொழில்நுட்ப துறைக்கு தனி பல்கலை. உருவாக்கப்படும். *MLA, அமைச்சர்களுக்கு நடத்தை விதிகள் வகுக்கப்படும். *பெண்கள், குழந்தைகள், முதியோர்கள் பாதுகாப்பிற்கு தனித்துறை உருவாக்கம்.

News October 27, 2024

விஜய்க்கு திமுகவில் இருந்து வந்த முதல் எதிர்ப்பு

image

திராவிட மாடல்னு சொல்லிட்டு, தமிழ்நாட்டை சுரண்டி கொள்ளையடிக்கிற சுயநல கூட்டம் தான் நமது எதிரி என திமுகவை விஜய் விமர்சித்தார். இதற்கு திமுகவில் இருந்து முதல் எதிர்ப்பு குரல் எழுந்துள்ளது. திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, உடல் புல்லரிப்போடு நடிகர் விஜய் நடித்த வி.சாலை படம் பார்த்தேன். Good flim. 100 நாள் திரையரங்குகளிலும்! OTT யில் கொஞ்சநாளும் ஓடும்! என்று விமர்சித்துள்ளார்.

News October 27, 2024

அரசியலும் மாற வேண்டும்: விஜய்

image

கோபமாக கொந்தளித்தான் அரசியல் என்பதெல்லாம் எனக்கு ஒத்துவராது என்று விஜய் தெரிவித்துள்ளார். அறவியல் தொழில்நுட்பம் மட்டும்தான் மாற வேண்டுமா?, அரசியலும் மாற வேண்டும் எனக் கூறிய அவர், தற்போதைய தேவை என்ன என்று மக்களிடம் எடுத்துக் கூறினால்போதும், நம் மீது மக்களுக்கு நம்பிக்கை வரும் தற்போதைய பிரச்னை, தீர்வு என்ன என்பதை பற்றி மட்டுமே சிந்திக்கப் போகிறோம் என்றார்.

News October 27, 2024

டீசண்ட்டா அடிப்போம், ஆனா டீப்பா அடிப்போம்!

image

விஜய் பேசுகையில், “இவ்வளவு பேசிய நான், இந்த விஜய், ஏன் அரசியல் எதிரிகள் யார் பேரையும் சொல்ல மாட்றான்னு சில அரசியல் விஞ்ஞானிகள் நையாண்டி செய்வார்கள், கேலி செய்வார்கள் என்று தெரியும். நாங்க யாரையும் தாக்கி அரசியல் செய்ய வரவில்லை. அரசியல் எதிரியாக இருந்தாலும் சரி, ஐடியாலஜி எதிரியாக இருந்தாலும் சரி, டீசண்ட் அட்டாக், டீசண்ட் அப்ரோச், ஆனால் டீப்பா இருக்கும் என்றார். டீசண்ட் அரசியல் சாத்தியமா?

News October 27, 2024

பாசிசமா? பாயாசமா? அதிரடியாக பேசும் விஜய்

image

மக்களை மத அடிப்படையில் பிரித்தாளும் பிளவுவாதிகள் என்று வலதுசாரிகளை ஒருபக்கம் விளாசிய விஜய், பாசிசம் பாயாசம் என்று சொல்லி மக்களை ஏமாற்றும் கூட்டம் என்று எதிர்த் தரப்பினரையும் தாக்கினார். பிளவுவாத சித்தாந்த எதிரிகள் நம் கண்ணுக்கு தெரிவார்கள், ஆனால் ஊழல்வாதிகள், கலாச்சாரம் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் கண்ணுக்கு தெரியாமல் வருவார்கள் . நம்மை ஆள்வது கரெப்ஷன் கபடதாரிகள் என்றார். யாரை சொல்கிறார் விஜய்?

News October 27, 2024

கூத்தாடி-ன்னா சொல்றீங்க… விஜய் ஒரே அடி..!

image

தன்னை கூத்தாடி என்று விமர்சிப்பவர்களுக்கு விஜய் பதிலளித்துள்ளார். திராவிடம் வளர்ந்ததே கூத்தை வைத்து தான். ஆந்திராவில் NTR, தமிழகத்தில் MGR அரசியலுக்கு வந்தபோதும் இப்படித்தான் விமர்சித்தனர் என்ற அவர், கூத்தாடி என்றால் கேவலமான சொல்லா என்று கேள்வி எழுப்பினார். கூத்து என்பது தமிழ் கலாசாரத்தின் ஆதி வடிவம் என்றும், தான் உழைத்து முன்னேறிய கூத்தாடி எனவும் அவர் தெரிவித்தார். உங்க கருத்து என்ன?

News October 27, 2024

கூட்டணி குறித்து விஜய் முக்கிய அறிவிப்பு

image

மாற்றுச்சக்தி என்று சொல்லிக் கொண்டு நான் இங்கு அரசியலுக்கு வரவில்லை. திராவிடம், தமிழ்த்தேசியம் ஆகியவை தான் எங்களின் இரு கண்கள் என்று விஜய் தெரிவித்துள்ளார். நம்முடன் வர நினைப்பவர்களுடன் இணைந்து பணியாற்ற தயார் என்று கூட்டணிக்கு நேரடியாக அழைப்பு விடுத்துள்ள விஜய், 2026இல் ஆட்சியமைக்கும் என்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு வழங்கப்படும் எனவும் அறிவித்தார்.

error: Content is protected !!