India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்ற தவெக தலைவர் விஜயின் அறிவிப்புக்கு, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வரவேற்றுள்ளார். அறிக்கையில், ’தமிழ்நாட்டில் 75 வருடத்தில் எந்த அரசியல் கட்சியும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு எனும் கூட்டணி ஆட்சி குறித்து வெளிப்படையாக பேசவில்லை. ஆனால் தம்பி விஜய், தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக அந்த முழக்கத்தை முன் வைத்துள்ளார்’ என்றார்.
1891 – ஜப்பானின் நோபி சமவெளியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 7,000-த்திற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1942 – கனடா முதல் அலாஸ்கா வரையில் நெடுஞ்சாலை அமைக்கப்பட்டது.
1949 – ஏர் பிரான்சு விமானம் போர்ச்சுகலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 48 பேரும் உயிரிழந்தனர்.
1988 – நடிகை வாணி போஜன் பிறந்தநாள்.
2009 – பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதலில் 117 பேர் கொல்லப்பட்டனர்.
பாதாம், முந்திரி, வால்நட் போன்ற நட்ஸை ஊறவைத்து சாப்பிட்டால் மிகுந்த பலனளிக்கும். வறுத்தும் சாப்பிடலாம். ஆனால், நெய்யில் வறுப்பதை தவிர்க்க வேண்டும். மாறாக Micro ovenஇல் வறுத்து சாப்பிடலாம். கடைகளில் கிடைக்கும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட காரம், உப்பு சேர்த்த நட்ஸ்களை அதிகம் உண்ணும்போது ரத்த அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், அதை தவிர்க்க வேண்டும். தினமும் 30gm அளவு நட்ஸ் சாப்பிடலாம்.
* நீங்கள் உங்கள் சிறகுகளை விரிக்கும் வரை, உங்களால் எவ்வளவு தூரம் பறக்க முடியும் என்று உங்களுக்கே தெரியாது. * இந்த உலகம் மிகவும் பாதிக்கப்படுவது கெட்டவர்களின் வன்முறையால் அல்ல. நல்லவர்களின் மௌனத்தால். * நீங்கள் ஒரு விடயத்தை நன்றாகச் செய்ய விரும்பினால், அதை நீங்களே செய்யுங்கள்.
எல்லையில் இந்தியா- சீனா தங்களது வீரர்களை திரும்பப் பெறுவது முதல் ஸ்டெப் என MEA ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சீனா முந்தைய நடவடிக்கைகளையே தொடராது என்பதை இந்தியா உறுதி செய்த பின்பே பதற்றம் தணியும் எனவும், நமது ரோந்து உரிமையை பெறுவதற்கு இன்னும் நேரம் எடுக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், வீரர்களை திரும்பப் பெற்ற பின், எல்லையை பாதுகாப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி மாநாட்டில் திமுக குறித்து விஜய் பேசியதற்கு திமுக ஆதரவாளர்கள் எதிர்வினையாற்றி வருகிறனர். X தளத்தில் தவெக கட்சி குறித்த ஹேஷ்டேக் ஒன்றை திமுகவினர் டிரெண்ட் செய்து வருகிறனர். விஜய் குறித்தும், நேற்று நடைபெற்ற தவெக கட்சியின் மாநாடு குறித்தும் ட்ரோல் செய்கின்றனர். அவர்களுக்கு விஜய் ரசிகர்களும் கமெண்ட்களில் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
NTPC நிறுவனத்தில் காலியாகவுள்ள 50 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று (அக்.28) கடைசி நாளாகும். ஜூனியர் எக்ஸிக்யூட்டிவ் பொறுப்பில் பணியாற்ற விரும்புவோர் careers.ntpc.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். கல்வித்தகுதி: B.Sc. வயது வரம்பு: 18-27. சம்பளம்: ₹40,000+ சலுகைகள். தேர்வு முறை: எழுத்து & நேர்காணல் தேர்வு. கூடுதல் விவரங்களுக்கு இந்த <
▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: விருந்தோம்பல். ▶குறள் எண்: 83 ▶ குறள்: வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை பருவந்து பாழ்படுதல் இன்று. ▶பொருள்: விருந்தினரை நாள்தோறும் வரவேற்று மகிழ்பவரின் வாழ்க்கை, அதன் காரணமாகத் துன்பமுற்றுக் கெட்டொழிவதில்லை.
▶அக். 28 (ஐப்பசி 11) ▶ திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்:7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்:10:30 AM – 12:00 PM ▶குளிகை:1:30 PM – 3:00 PM ▶ திதி: துவாதசி ▶ பிறை: தேய்பிறை ▶சுப முகூர்த்தம்: இல்லை ▶ சூலம்: கிழக்கு ▶ பரிகாரம்: தயிர் ▶ நட்சத்திரம்: பூரம் மா 6.22 ▶சந்திராஷ்டமம்: திருவோணம்
இன்று (அக். 28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
Sorry, no posts matched your criteria.