India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாதி (MVA) கூட்டணியில் இருந்து விலகுவதாக சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது. நடைபெற்ற மகாராஷ்டிர தேர்தலில் மகாயுதி கூட்டணி ஆட்சியமைத்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான MVA கூட்டணி எதிர்க்கட்சி வரிசையில் உள்ளது. அதில், உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த ஒருவர் பாபர் மசூதி இடிப்புக்கு ஆதரவாக பேசியதால் சமாஜ்வாதி அதிருப்தியில் வெளியேறுகிறது.
திருச்செந்தூரில் யானை தாக்கி உயிரிழந்த பாகன் உதயகுமார் மனைவிக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. கோவிலில் அலுவலக உதவியாளராக பணிபுரிவதற்கான ஆணையை திமுக எம்.பி கனிமொழி அவரிடம் நேரில் வழங்கினார். கடந்த 18ம் தேதி யானை தெய்வானை பாகன், அவரது உறவினரை தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். உதயகுமார் மீது மிகுந்த அன்பாக இருந்த யானை, ஒரு வாரத்திற்கு மேல் உணவு உட்கொள்ளாமல் இருந்தது.
மத்திய அரசுப் பணிகளில் சேர்பவர்களது ஆவணங்களை 6 மாத காலத்திற்குள் சரிபார்க்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் 1985ஆம் ஆண்டு ஒருவர் அரசுப் பணியில் சேர்ந்தார். ஆனால், அவர் இந்திய குடிமகன் அல்ல என்று 2010ஆம் ஆண்டுதான் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில், ஒருவர் பணியில் சேர்ந்த 6 மாதத்திற்குள் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்று SC உத்தரவிட்டது.
1) Climatology – காலநிலை பற்றிய படிப்பு 2) CCI – Competition Commission of India 3) டீசல் இன்ஜினை கண்டுபிடித்தவர் – ரோலோஃப் டீசல் 4) இந்தியாவின் முதல் பெண் பத்திரிகையாளர் – சுவர்ணகுமாரி தேவி 5) கவி ராட்சசன் என போற்றப்பட்ட புலவர் – ஒட்டக்கூத்தர் 6) ரப்பரை பதனிட உதவும் தனிமம் – சல்ஃபர் 7) சூரியக் குடும்பத்தில் அதிக வெப்பமுடைய கோள் – வெள்ளி 8) இந்தியாவில் முதல் CENSUS 1881ஆம் ஆண்டு கணக்கிடப்பட்டது.
கிரிக்கெட்டின் பிறப்பிடமான இங்கிலாந்து அணி டெஸ்டில் 5 லட்சம் ரன்களைக் கடந்த முதல் அணி என்ற பெருமையைப் பெற்றது. NZ அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இச்சாதனையை படைத்துள்ளார். 1877 ஆம் ஆண்டு ஆஸி.க்கு எதிராக முதல் அதிகாரபூர்வ டெஸ்டில் விளையாடிய இங்கிலாந்து அணி இதுவரை 1,081 டெஸ்டில் விளையாடி 399 வெற்றிகளையும் 327 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 355 போட்டிகள் டிரா ஆகியுள்ளன.
வங்கக் கடலில் உருவாகியிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக வரும் 10ஆம் தேதி மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை & ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று IMD தெரிவித்துள்ளது. மேலும், 11ஆம் தேதி காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.
பழைய காதலனால், பெங்களூரு பெண் ஒருவர் ₹2.5 கோடியை இழந்துள்ளார். ஸ்கூல் படித்த போது இவரை காதலித்த மோகன் என்பவர், மீண்டும் பழகி வலை வீசியுள்ளார். இருவரும் தனியாக இருக்கும் வீடியோவை வைத்துக் கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக அப்பெண்ணை மிரட்ட ஆரம்பித்து, வாட்ச், கார் என ப்ராக்கெட் போட்டுள்ளார் மோகன். ஆனால், டார்ச்சர் பொறுக்க முடியாததால், போலீசில் அப்பெண் புகார் கொடுக்க, தற்போது மோகன் கம்பி எண்ணுகிறார்.
‘ஊருக்கு போனா லெட்டர் போடுங்க” எனக்கூறாத ஜெனரேஷனே இருக்காது. ‘அன்புள்ள, நலம் நலமறிய ஆவல்’ எனும் வார்த்தையில் இருக்கும் பாசம் படிக்கும் போதே உணரலாம். வழிய வழிய லெட்டர் எழுதி, ‘உன் உயிர்’ எனப் பெயர் எழுதாமல் லெட்டர் கொடுக்காத பையன்களே இருந்திருக்க மாட்டார்கள். கடிதம் எழுதுவதன் மகத்துவத்தை கூறும் வகையில், டிச. 7 கடிதம் எழுதும் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நீங்க கடைசியா எழுதிய லெட்டர் ஞாபகம் இருக்கா
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ₹1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை வருமான வரித்துறை விடுவித்துள்ளது. 2021இல் சிவசேனா – காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் இருந்தபோது IT ரெய்டுகள் நடைபெற்றன. அப்போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகள், தற்போது விடுவிக்கப்பட்டுள்ளன. அவர் பாஜக கூட்டணியில் ஆட்சியில் இணைந்தபோது அவர் மீதான பினாமி வழக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் திமுகவை விமர்சித்து பேசிய நிலையில், ஆதவ் அர்ஜுனுக்கு விசிகவில் எதிர்ப்பு வலுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. திருமாவளவனின் பேச்சை மீறி அவர் செயல்படுவதாக நிர்வாகிகள் பலரும் குற்றஞ்சாட்டியுள்ளனர். திமுகவை விமர்சித்து பேசக் கூடாது என திருமா அறிவுறுத்தியதாக கூறப்படும் நிலையில், 2026 தேர்தலில் மன்னர் ஆட்சி முடிவுக்கு வரும் என்று ஆதவ் பேசியிருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.