News October 28, 2024

பசுக்களை அவமானப்படுத்தக் கூடாது: அதிரடி உத்தரவு

image

பாஜக ஆளும் மாநிலங்களில் பசுக்களை பாதுகாக்க பல சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், இதற்கென தனியே பசு பாதுகாவலர்களும் உள்ளனர். இந்நிலையில், சாலைகளில் அலையும் பசுக்களை, தெரு மாடுகள் என யாரும் சொல்லக் கூடாது என ராஜஸ்தான் பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு சொல்வது, பசுக்களை அவமானப்படுத்துவதற்கு சமம் எனக் கூறியுள்ள அரசு, ‘ஆதரவற்ற’ மாடுகள் என்று அழைக்க அறிவுறுத்தியுள்ளது.

News October 28, 2024

CSK-வின் அடுத்த தோனி யார்? சைமன் டவுல் கணிப்பு

image

CSK அணியில் தோனியின் இடத்தை ரிஷப் பண்டால் மட்டுமே நிரப்ப முடியும் என நியூசி. EX வீரர் சைமன் டவுல் கூறியுள்ளார். தோனியை போன்றே ரிஷப் பண்டும் போட்டியின் முடிவை மாற்றக்கூடிய மேட்ச் வின்னராக செயல்படுவார் என்பதால், சென்னை அணி அவரை பெரிய விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லி அணியில் விளையாடும் பண்ட், அந்த அணியில் இருந்து வெளியேற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

News October 28, 2024

ஜீனோம் எடிட்டிங் என்றால் என்ன?

image

மரபணுக்களில் மாற்றங்கள் செய்வதன் மூலம் மனித உடலில் விரும்பிய அம்சங்களை சேர்ப்பது (அ) விரும்பத்தகாத அம்சங்களை நீக்குவதே மரபணு திருத்தம் ஆகும். இதனால் பரம்பரை நோய்கள் அடுத்த தலைமுறைகளுக்கு கடத்தப்படுவது தடுக்கப்படும். நோயில்லா குழந்தைகள் பிறக்க வழியேற்படும் என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆனால், மரபணுக்களில் கைவைப்பது இருமுனை கத்திப் போன்றது. எதிர்பாராத பின்விளைவுகள் நேரிடலாம் எனவும் எச்சரிக்கின்றனர்.

News October 28, 2024

வெப்ப அலையை பேரிடராக தமிழக அரசு அறிவிப்பு

image

வெப்ப அலையை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. வெப்ப அலையால் மரணம் அடைபவர்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ORS கரைசல் வழங்க, பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. குடிநீர் பந்தல் அமைக்கவும் பேரிடர் நிதியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

News October 28, 2024

பகவத் கீதையை விஜய் வாங்கியது ஏன்?

image

தவெக மாநாட்டில் பகவத் கீதையை விஜய் பெற்றுக் கொண்டதை விசிகவின் வன்னியரசு விமர்சித்துள்ளார். “வருணாசிரம கோட்பாட்டை எதிர்ப்பதாக விஜய் கூறுகிறார். ஆனால், அவர் பகவத் கீதையை பெற்றுக் கொண்டது முரண்பாடாக உள்ளது. 4 வர்ணங்களையும் நானே படைத்தேன் என்பதுதான் கீதையின் சாரம். அப்படிப்பட்ட பகவத் கீதையை பெற்றுக் கொண்ட பிறகு, அவரால் எப்படி வருணத்தை எதிர்க்க முடியும்?” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

News October 28, 2024

குடும்பம் சகிதமாக மனுத்தாக்கல் செய்த ஷிண்டே

image

மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குடும்பத்தோடு சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். 288 தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில், நவம்பர் 20இல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. ஆளும் கூட்டணியில் பாஜக, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளும், எதிர்க்கட்சி கூட்டணியில் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் (எஸ்.பி.) கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாளாகும்.

News October 28, 2024

மாதவன் ஷாலினி Photo இன்ஸ்டாவில் வைரல்

image

மாதவன்-ஷாலினி நடித்த ‘அலைபாயுதே’ மூவி, 2000ல் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தப் படத்தை பார்த்த அந்தக்கால இளசுகள் பலர், வீட்டிற்கே தெரியாமல் திருமணம் செய்த நிகழ்வும் அரங்கேறியது. இந்த நிலையில், படம் வெளியாகி 24 ஆண்டுகள் ஆனதை நினைவுகூறும் வகையில் புகைப்படம் ஒன்றை ஷாலினி பகிர்ந்துள்ளார். அலைபாயுதே படம் பாத்துருக்கீங்களா? கமெண்ட் பண்ணுங்க.

News October 28, 2024

நோயில்லாத குழந்தைகளை உருவாக்கும் ஜீனோம் எடிட்டிங்

image

மனிதர்களில் உடல் மரபணுக்களில் (somatic genome) திருத்தம் செய்யும் ஆராய்ச்சிக்கு, உலகின் முதல் நாடாக தென்னாப்ரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் நீரிழிவு, புற்றுநோய் மட்டுமல்லாமல் பரம்பரை நோய்களுக்கு காரணமான மரபணுக்களை நீக்குவது, நல்ல மரபணுக்களை சேர்ப்பது போன்றவற்றை மேற்கொள்ள முடியும். இதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டாலும், இயற்கையோடு விளையாடுவது சரிதானா என்ற கேள்வியும் எழுகிறது.

News October 28, 2024

‘விடாமுயற்சி’ டப்பிங் பணிகள் ஆரம்பம்

image

நீண்ட நாள்களாக தயாராகி வரும் ‘விடாமுயற்சி’ படத்தின் டப்பிங் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. மகிழ்திருமேனி இயக்கியுள்ள இப்படத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதில், நடிகர் ஆரவ் டப்பிங் பணியில் இருக்கும் புகைப்படத்தை படக்குழு பகிர்ந்துள்ளது. விரைவில் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News October 28, 2024

விஜய்யை அட்டாக் செய்தார் ஸ்டாலின்

image

“நேற்று வந்தவர்களை பற்றி எல்லாம் கவலைப்பட தேவையில்லை. இந்த இயக்கம் இது போன்ற பலரைப் பார்த்துள்ளது” என்று திமுகவை விமர்சித்த விஜய்யை CM ஸ்டாலின் அட்டாக் செய்துள்ளார். கூட்டணி, தொகுதி பங்கீடு பற்றி எல்லாம் நீங்கள் கவலைப்பட தேவையில்லை; அதை நான் பார்த்துக் கொள்வேன். நமது கூட்டணி வலுவாக உள்ளதால், வரும் தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டும் என தொகுதி பொறுப்பாளர்களிடம் அவர் வலியுறுத்தினார்.

error: Content is protected !!