India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வடக்கு காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 29 பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளனர். தொடர் தாக்குதல்களால் மருத்துவமனை வளாகம் ரத்த வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக அல்-ஜசீரா தெரிவித்துள்ளது. 2023 அக்டோபர் முதல், இஸ்ரேலின் தாக்குதல்களில் 44,612 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 100,000 க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
2025-ம் ஆண்டு இந்த 3 ராசிக்காரர்களுக்கு அற்புதமாக அமையப் போகிறது. 1) ரிஷபம்: சனிபகவானின் பெயர்ச்சி உங்களை வசதியான இடத்திற்கு கொண்டு செல்ல போகிறது. வெற்றிகள் தேடி வரும். 2) மிதுனம்: புதனின் அனுக்கிரகத்தால் இனி ஏறுமுகம்தான். வியாபாரத்தில் பெரிய வெற்றி. தொழிலில் முன்னேற்றம் இருக்கும். 3) சிம்ம ராசி: உங்களின் வெற்றிக்கான ஆண்டு. தொழிலில் பாசிட்டிவான மாற்றங்கள் இருக்கும். பிள்ளைகளால் நன்மை உண்டு.
மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் விசிக கொடியேற்றும் நிகழ்ச்சி நாளை நடைபெறவிருந்தது. திருமாவளவன் கொடி ஏற்றுவதாக இருந்தார். இந்நிலையில், இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது. கொடிக்கம்பத்தின் உயரம் 20 அடிக்கு மேல் இருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆதவ் அர்ஜுனா நேற்று திமுவை விமர்சித்த நிலையில், இந்த அனுமதி மறுப்பு உத்தரவு வெளியாவது குறிப்பிடத்தக்கது.
விறுவிறுப்பாக பிக்பாஸ் சீசன் 8 நடைபெற்று வரும் நிலையில், இந்த வாரம் வெளியேறப்போவது யார் என பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. கடந்த சில வாரங்களாக விஜய் சேதுபதி வேண்டுமென்றே சாச்சனாவை காப்பாற்றி வருவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால், இந்த வாரம் ஓட்டு நிலவரத்தின்படி கடைசி 2 இடத்தில் சாச்சனா, ஆனந்தி இருந்தனர். இதில் சாச்சனா கண்ணீருடன் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
உங்கள் தூங்கும் பழக்கத்தில் 2 நல்ல மாற்றங்களை செய்வதன் மூலம் ஹார்ட் அட்டாக் உள்பட இதயநோய்கள் வரும் ஆபத்தை 26% குறைக்கலாம் என்கிறது அண்மை ஆய்வு. 1) தினசரி போதுமான நேரம் தூங்க வேண்டும், 2) தினசரி ஒரே நேரத்தில் தூங்கி, எழ வேண்டும் என்பதே அந்த இரண்டு பழக்கங்கள். ஆகவே: *தூங்கும்முன் போன், டிவியை தவிர்க்கவும். *தூங்குவதற்கு 2 மணிநேரம் முன்பே சாப்பிடவும் *பெட் ரூம் சுத்தமாக, அமைதியாக இருக்க வேண்டும்.
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ரோஹித் ஷர்மா தொடர்ந்து சொதப்பி வருவதால், அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நியூசி.க்கு எதிரான 6 போட்டிகளிலும் சேர்த்து வெறும் 91 ரன்களையே அவர் எடுத்திருந்தார். அதே ஃபார்மையே ஆஸி.க்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்து வருகிறார். 2ஆவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் 3 ரன்களும், 2ஆவது இன்னிங்ஸில் 6 ரன்களை மட்டுமே அவர் எடுத்துள்ளார்.
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இருநாள் பயணமாக ரஷ்யாவுக்கு நாளை (டிச.8) புறப்படுகிறார். ரஷ்யா, இந்தியா இரு நாடுகளுக்கான ராணுவ ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்கவும், இந்தியாவுக்கு ரஷ்யா அனுப்ப வேண்டிய S-400 வான்பாதுகாப்பு அமைப்பை விரைந்து அனுப்ப வலியுறுத்தவும் அவர் செல்கிறார். இந்தியாவுக்காக ரஷ்யாவில் தயாரான INS துஷில் போர்க்கப்பலையும் அவர் ஆய்வு செய்ய உள்ளார்.
வியாபார இடங்களின் வாடகை மீதான 18% GST வரி விதிப்புக்கு எதிராக டிச.11ம் தேதி வணிகர் சங்கம் மாநில தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு வியாபாரிகளை கடுமையாக பாதிக்கும். இதனால், தொழில் செய்யமுடியாத சூழல் உருவாகும். எனவே, 18% GST வரி விதிப்பை உடனே திரும்பபெறக்கோரி, இப்போராட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க டெல்லி தீர்ப்பாயம் மறுத்துள்ளது. ராஜீவ் காந்தி படுகொலைக்கு பின் இந்தியாவில் அந்த அமைப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து, கடந்த மே 14ஆம் தேதி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து வழக்கு தொடரப்பட்ட நிலையில், வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது விடுதலை புலிகள் மீதான தடையை தீர்ப்பாயம் உறுதி செய்தது.
காகித ஆதார் அட்டையை ஏடிஎம் கார்டு போல பிளாஸ்டிக்கில் இருக்கும் கார்டாக ஈஸியாக மாற்றலாம். ப்ளே ஸ்டாரில் M AADHAAR என்ற ஆப்-ஐ டவுன்லோடு செய்யுங்கள். அதில், உங்கள் ஆதார் போன் நம்பரை டைப் செய்தால் ஒரு OTP வரும். அந்த OTP-ஐ கொடுத்து உள்ளே போனால், ORDER PVC CARD என்ற ஆப்ஷன் இருக்கும். அதில் சென்று ஆதார் எண்ணை டைப் செய்து, ரூ.50-ஐ செலுத்தினால் ஒரு வாரத்தில் PVC ஆதார் கார்டு வீட்டுக்கே வந்துவிடும்.
Sorry, no posts matched your criteria.