News December 8, 2024

வரலாறு திரும்புகிறதா?

image

அடிலெய்டில் 2020இல் நடந்த டெஸ்ட் பாேட்டியில் ஆஸி அணியிடம் அடைந்த படுதோல்விக்கு இந்தியா இம்முறை பதிலடி கொடுக்கும் என ரசிகர்களால் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் இன்னிங்சில் 180 ரன்களில் சுருண்ட இந்திய அணி, 2ஆவது இன்னிங்சிலும் விக்கெட்டுகளை மளமளவென இழந்து தடுமாறிக் கொண்டுள்ளது. இதை பார்த்து ஏமாற்றமடைந்த கிரிக்கெட் ரசிகர்கள், வரலாறு திரும்புகிறதா என கேள்வி எழுப்புகின்றனர்.

News December 8, 2024

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடைகிறது

image

காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவடையக்கூடும் என்று MET தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என்று MET தெரிவித்துள்ளது. மேலும், இது அதே திசையில் நகர்ந்து 11 – ஆம் தேதியன்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் MET குறிப்பிட்டுள்ளது.

News December 8, 2024

நேருவின் பொன்மொழிகள்

image

* இன்றைய குழந்தைகளிடம் இருந்து தான் நாளைய இந்தியா தீர்மானிக்கப்படுகிறது
*குழந்தைகள் தங்களுக்குள் உள்ள வேறுபாடுகளை யோசிப்பதில்லை
*ஒரு நிகழ்வைப் பற்றி அதிகம் பேச நினைக்கிறோம், அதை செயல்படுத்துவதை விட்டுவிட்டு
*மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதற்காக நாம், நமது உண்மைத் தன்மையை இழந்து விடக்கூடாது.

News December 8, 2024

பிரைம் OTTஇல் ரிலீஸ் ஆனது கங்குவா

image

சூர்யா நடிப்பில் பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட கங்குவா படம் நவ.14இல் தியேட்டரில் ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும், தமிழில் முன்னெடுக்கப்பட்ட நல்ல முயற்சியாக இது கூறப்படுகிறது. இப்படம், அமேசான் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் படம் வெளியிடப்பட்டுள்ளது. நீங்கள் அப்படம் பார்த்து விட்டீர்களா? படம் எப்படி இருக்கு? கீழே கமெண்ட் பண்ணுங்கள்.

News December 8, 2024

இவர் யார் தெரிகிறதா?

image

மேலே நீங்கள் காணும் புகைப்படங்களில் இருக்கும் சிறுமி, தற்போது மிகப்பெரும் நடிகை ஆவார். இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகக் கூறப்படும் அவர், படங்களில் காட்டும் பல்வேறு முகப் பாவனைகளுக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் உண்டு. தற்போது அவர் நடிப்பில் வெளிவந்துள்ள படம், பல கோடிகளை குவித்து வருகிறது. அவர் யாரென கண்டுபிடித்து விட்டீர்களா? அப்படியெனில், கீழே அவர் பெயரை பதிவிடுங்கள்.

News December 8, 2024

கேரள பாதிரியாருக்கு கார்டினல் பட்டம்

image

கேரள பாதிரியார் ஜார்ஜ் ஜேக்கப்புக்கு (51) கார்டினல் பட்டத்தை வழங்கி போப் பிரான்சிஸ் கவுரவித்துள்ளார். ரோம் செயின்ட் பசிலிக்கா தேவாலயத்தில் நடைபெற்ற விழாவில் ஜார்ஜ் உள்ளிட்ட 21 பேருக்கு இப்பட்டத்தை போப் அளித்தார். கேரள மாநிலம், சங்கனாச்சேரியை சேர்ந்த ஜேக்கப், இந்தியாவில் இருந்து தேர்வான 6ஆவது கார்டினல் ஆவார். அவருக்கு கேரள CM பினராயி விஜயன், PM மோடி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

News December 8, 2024

எஸ்பிஐ வங்கியில் வேலை பார்க்க ரெடியா? உடனே APPLY

image

நாட்டின் நம்பர் 1 பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ காலியாக உள்ள 50 ஜூனியர் அசோசியேட் நிலையிலான பதவிகளுக்கு விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது. இதற்கான விண்ணப்பப்பதிவு www.sbi.co.in இணையதளத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ளது. வேலைக்கு விண்ணப்பிக்க வருகிற 27ஆம் தேதி கடைசி நாளாகும். வேலை குறித்த கூடுதல் தகவலை <>www.sbi.co.in<<>> இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். SHARE IT.

News December 8, 2024

நாட்டை விட்டு சிரியா அதிபர் தப்பி ஓட்டம்?

image

சிரியாவில் உள்ள முக்கிய பகுதிகளை கைப்பற்றிய துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் படை, தலைநகர் டமாஸ்கசை நோக்கி முன்னேறி வருகிறது. இதனால் கிளர்ச்சியாளர்கள் கையில் சிக்கிவிடக் கூடாது என சிரியா அதிபர் ஆசாத் நாட்டை விட்டு தப்பியோடி விட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தத் தகவலை சிரியா அரசுத் தொலைக்காட்சி மறுத்துள்ளது. சிரியாவில்தான் ஆசாத் இன்னும் இருக்கிறார் என அது செய்தி வெளியிட்டுள்ளது.

News December 8, 2024

வெற்றியை வசமாக்குவார்களா ரிஷப் பண்ட், நிதிஷ்?

image

அடிலெய்ட் டெஸ்டில் 2ஆவது இன்னிங்சில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 128 ரன்கள் நேற்று எடுத்திருந்தது. போட்டி முடிய இன்னமும் 3 நாள் உள்ள நிலையில், இந்திய அணி 29 ரன் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது. மேலும் ஒன்றரை நாள் நிலைத்து ஆடி அதிக ரன்கள் எடுத்தால்தான் வெற்றி சாத்தியம். ரிஷப் பண்ட், நிதிஷ் ரன் குவித்தால் மட்டுமே இது சாத்தியம். சாதிப்பார்களா பண்ட், நிதிஷூம்? கீழே கமெண்ட் பதிவிடுங்க.

News December 8, 2024

3 நாள்களில் ரூ.500 கோடி.. பட்டையை கிளப்பும் புஷ்பா 2

image

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ரஷ்மிகா, பகத் பாசில் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி ரிலீசான புஷ்பா 2 படம், வெளியான நாள் முதல் வசூலை வாரிக் குவித்து வருவதாகக் கூறப்படுகிறது. அதன்படி, கடந்த 3 நாள்களில் மட்டும் ரூ.500 கோடி வசூலை புஷ்பா 2 திரைப்படம் தாண்டி விட்டதாக படக்குழு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. முதல் நாளில் மட்டும் ரூ.250 கோடி வசூலித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!